நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

டந்த இதழில், இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் புதிய உச்சங்களை அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லி இருந்தோம். அதன்படியே கடந்த வாரம், நமக்குச் சிறந்த வாரமாக அமைந்தது. ஐந்து வர்த்தக நாள்களிலும் சந்தை புதிய உச்சங்களை எட்டி வர்த்தகமாயின.  நிஃப்டி குறியீடு போல, பேங்க் நிஃப்டி ஒவ்வொரு வர்த்தக நாளிலும் ஏற்றமடையாவிட்டாலும், கடந்த வாரத்தில் ஓரளவுக்கு ஏற்றமடையவே செய்திருக்கிறது. ஐ.டி துறைக் குறியீடுகள் அவ்வளவாக ஏற்றமடையவில்லை. ஆனாலும், அவற்றின் நிலைகளில் தங்களைத் தக்கவைத்துக்கொண்டது ஆறுதலான விஷயம்.   

இதனால், கடந்த வாரத்தில் சந்தைகள் வரலாற்று உச்சங்களை அடைந்து 9700-ஐ நெருங்கும் நிலையில் இருந்த நிஃப்டி, கடந்த வாரத்தில் அந்த நிலையை அடையவில்லை. காரணம், கடந்த வார நகர்வுகள் விரைவான ஏற்றங்களாக இல்லாமல், மெதுவான நகர்வுகளாகவே இருந்தன. எனவேதான், வெள்ளிக்கிழமை அன்று ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்த விலைகளில் பிரேக் அவுட் நகர்வுகள் நடந்திருக்கின்றன. இதனால், கடந்த  ஏப்ரல் இறுதியில் ஆரம்பித்த சந்தை ஏற்றம், கடந்த வாரத்தில் ஐந்தாவது நாளாக வர்த்தக முடிவில் புதிய உச்சத்தை எட்டியது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இவை அனைத்தும் சந்தைக் குறியீடுகள் நன்றாக ஏற்றமடைந்துவிட்டதைக் குறித்தாலும், இன்ட்ரா டே, இன்ட்ரா வீக் ஆகியவற்றில் நடந்த மெதுவான நகர்வுகள் மற்றும் பொசிஷன்களால் சந்தை இறங்குவதிலிருந்து  காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

கடந்த வாரத்தில் லார்ஜ் கேப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டு கடந்த வார வர்த்தகத்தைச் சிறப்பாக நிறைவு செய்திருக்கின்றன. மேலும், வரும் வாரத்திலும் தொடர்ந்து ஏற்றமடைவதற்கான அறிகுறிகளையும் கொண்டுள்ளன.

வரும் வாரத்திலும் சந்தைக் குறியீடுகள் மேலும் ஏற்றமடைந்து வர்த்தகமாவதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ளன. எனவே, குறியீடுகளில் லாங் பொசிஷன்களை வைத்துக்கொள்வதில் கவனமாக முடிவு எடுக்க வேண்டும்.

என்ஐஐடி டெக்னாலஜிஸ் (NIITTECH)

தற்போதைய விலை: ரூ.540.55


வாங்கலாம்

கடந்த பல வாரங்களாகவே பல முன்னணி ஐ.டி துறை நிறுவனங்கள் அழுத்தத்தில் இருந்தாலும், சில ஐ.டி நிறுவனப் பங்குகள் பாசிட்டிவ் டிரெண்டில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், என்ஐஐடி டெக். இந்தப் பங்கில் பல வாரங்களாகவே நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தப் பங்கின் விலைப் போக்கு 2014-லிருந்து ஏற்ற இறக்கமில்லாத நிலையில் அவ்வப்போது சிறு ஏற்றங்களுடன்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. சமீபத்திய சில மாதங்களில்கூட இந்தப் பங்கின் விலைப்போக்கில் அதிகபட்ச விலையுடன் கூடிய நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருந்தது. இந்தப் போக்கு, இந்தப் பங்கில் காளையின் ஆதிக்கத்தை உருவாக்கியிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த 6-8 மாதங்களில் ரூ.700 வரை உயர வாய்ப்புண்டு.


கோல்கேட் பாமோலிவ் (COLPAL)

தற்போதைய விலை: ரூ.1025.95

வாங்கலாம்

கோல்கேட் பால்மோலிவ் பங்கிலும் சமீபத்திய கணிசமான நகர்வுகளுக்குப்பின் நல்ல ஏற்றத்துக்கான அறிகுறிகள் உருவாகி உள்ளன. இந்தப் பங்கின் விலைப்போக்கில் தொடர்ந்து நல்ல அட்வான்ஸ் போக்குடனான சுழற்சி பேட்டர்ன்கள் உருவாகி வந்த நிலையில், பங்கின் விலை தற்போது புதிய உச்சத்தை நோக்கி நகரத் தயாராக இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதன் நகர்வுகள் ஒரு பிரேக் அவுட் நிலையை உருவாக்கி, புதிய உச்சத்தை அடையும் சாத்தியங்களை உருவாக்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த 8 முதல் 12 மாதங்களில் பங்கின் விலை ரூ.1,225 வரை உயர வாய்ப்புள்ளது.

இந்தியன் பேங்க் (INDIANB)

தற்போதைய விலை: ரூ.318.00

வாங்கலாம்


பொதுத்துறை வங்கிப் பங்குகளில், இந்தியன் வங்கியின் சார்ட் பேட்டர்ன் சிறப்பான பங்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பங்கின் விலைப்போக்கில் நல்ல ஏற்றம் உருவாகி இருப்பதோடு, அந்த ஏற்றம் புதிய மற்றும் அதிக ஏற்றத்துக்காகத் தயாராக இருப்பதை, அதன் நீண்ட கால அக்குமிலேஷன் பேட்டர்ன் காட்டுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும், இதன் சார்ட் பேட்டனில் அனைத்து டெக்னிக்கல் காரணிகளும் சிறப்பாக உள்ளதால், தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பங்கின் விலை ரூ.350-360க்கு உயர வாய்ப்புள்ளது.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.