நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்திய பங்குச் சந்தை, கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டுவந்த நிலையில், கடந்த வாரத்தில் இறக்கத்தைச் சந்தித்து முடிந்துள்ளது. எட்டு  வாரங்களாக இண்டெக்ஸ் ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் இறக்கம் கண்டது கவனிக்கத்தக்கது.

தினசரி சார்ட், கடந்த வாரத்தில் சந்தை ரேஞ்ச் பவுண்டுக்குள் இருந்தது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது. டவுன் கேப்பில் (Down gap) சந்தை ஆரம்பித்தது. ஆனால், அந்த இடைவெளி ரெக்கவரி செய்யப்படவில்லை என்பதால், கடந்த காலச் செயல்பாடு, கடந்த வாரத்தில் மாற்றம் கண்டிருக்கிறது. இறக்கத்திலிருந்து மேலே விரைவில் ஏற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் சந்தையின் போக்கு மாற்றத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால், அது நடந்தால் பல பங்குகளின் விலையில் அதிரடி மாற்றங்கள் நடக்கக்கூடும்.  இதுவரைக்கும் அது நடக்காமல் இருக்கிறது.   

கடந்த மே மாதம் குறைந்த புள்ளிகளிலிருந்து 38% ரீடிரேஸ் இன்னும் நடக்கவில்லை என்பதால், ‘ஸ்விங் லெக் அப்’-ஆகப் பயன்படுத்தலாம். இது சந்தையின் ஏற்றப்போக்கைக் காட்டுவதாக இருக்கிறது.

ஆனால், காளைகள் இப்போதும் மிகவும் கன்ட்ரோலில் இருக்கின்றன. தற்போதைய நிலையில், நிஃப்டி இறக்கம் கண்டால் வரும் வாரத்தில் 9500 முதல் 9525-ஆக இருக்க வாய்ப்புள்ளது. சந்தை ஏற்றம் கண்டால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் 9650-9695 ஆக இருக்கும்.

வங்கி மற்றும் ஐ.டி பங்குகள், சந்தை ஏற்றத்துக்கு தற்போது உதவவில்லை. சந்தை நிலை பெற இன்னும் ஒரு வாரத்துக்கு நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

வாடெக் வாபெக் (WABAG)

தற்போதைய விலை: ரூ.711.15

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


இந்த நிறுவனம் தண்ணீரைச் சுத்திகரிப்பதில் சர்வதேச அளவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த நிறுவனப் பங்குக்குச் சந்தையில் இருக்கும் தேவை இன்னும் அதிகமாகத் தான் இருக்கிறது. அத்துடன் இந்தப் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது, தன்னுடைய வலுவான ரெசிஸ்டன்ஸான 757 ரூபாயைத் தொடவிருப்பது தெரிகிறது. அத்துடன் தற்போது சார்ட்டில் தெரியும் விலை ஏற்றத்தின் வேகத்தைப் பார்த்தால், தன் ரெசிஸ்டன்ஸை உடைத்து விலை உயரத் தொடங்கும் என்றே தோன்றுகிறது.

தற்போதைய விலையிலும், இந்தப் பங்கின் விலை குறையும்போதெல்லாம் இதில் முதலீடு செய்யலாம். இதன் வலுவான ரெசிஸ்டன்ஸ்       ரூ.757-ஐக் கடந்தால், அடுத்த ஆறு மாதத்தில் ரூ.840-ஐத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியன் ஹியூம்  பைப்புகள் (INDIANHUME)

தற்போதைய விலை : ரூ.480.05

வாங்கலாம்

இந்த நிறுவனம் பைப்புகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த பைப்புகள் கட்டுமானம், தண்ணீர் சப்ளை, நீர்ப்பாசன வசதி, பாதாளச் சாக்கடை வசதி மற்றும் மின்சார உற்பத்தி போன்றவற்றில்  பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் நல்ல ஃபண்டமென்டல்கள் மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகச் செயல்பாடுகள் இருப்பது இன்னும்  பாசிட்டிவான அம்சம். இதனாலேயே சந்தையில் இந்தப் பங்கை வாங்க முதலீட்டாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கின் விலை கன்சாலிடேட் ஆகி வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த கன்சாலிடேஷனை உடைத்து விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதை சார்ட்டுகளில் பார்க்க முடிகிறது.

தற்போதைய விலையில், இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பங்கின் விலை 550 ரூபாய்க்கு அதிகரிக்கக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.425 வைத்துக்கொள்ளவும்.

செஞ்சுரி ப்ளைபோர்ட்ஸ் (CENTURYPLY)

தற்போதைய விலை: ரூ.307.10

வாங்கலாம்


பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, நல்ல காலம் சந்தையில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப் பட்டால், இந்தத் துறையில் உள்ள அமைப்பு ரீதியான நிறுவனங்களுக்குப் பெரிய உந்துதல் கிடைத்ததாக இருக்கும்.

சமீபத்தில்தான் செஞ்சுரி பிளை நிறுவனத்தின் பங்கு,  தன் பல மாத அக்குமிலேஷன் பேட்டனில் இருந்து வெளிவந்து, விலை உயர்வைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. அத்துடன் அந்த விலை ஏற்றத்தின் வேகமும் நன்றாகவே இருக்கிறது. எனவே, பங்கின் விலை 330 - 340 ரூபாய் வரை போகலாம்.

 தற்போதைய விலையில் அல்லது அதிகபட்சமாக 290 ரூபாய் வரை பங்கு விலை இறங்கும்போது, முதலீடு செய்யலாம். ரூ.285 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.