நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வார இதழில், “சந்தையின் போக்கு மீண்டுவந்திருப்பதால், லாங் பொசிஷன் எடுப்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. எனவே, இன்ட்ரா டே, இன்ட்ரா வீக் நகர்வுகளில் இறக்கம் ஏற்பட்டால் அதை, வாங்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். நிஃப்டி 9450-க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொண்டு, 9600 என்ற நிலையில் ஏற்படும் இறக்கங்களில் வாங்கலாம். புதிய உச்சங்களை அடைய வாய்ப்பிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

சொன்னபடியே சந்தைப் புதிய உச்சங்களை எட்டியதோடு, நிஃப்டி 9900 புள்ளிகளைத் தாண்டி ஏற்றமடைந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், சர்வதேச அளவில் பாசிட்டிவான போக்கு நிலவுவதும், உள்நாட்டில் ஜி.எஸ்.டி சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதுமே ஆகும்.

தற்போது இந்தியச் சந்தைகளின் போக்கு சிறப்பாகவே உள்ளது. இதனால் நிஃப்டியின் அடுத்த இலக்கு 10050 என்ற நிலையில் இருக்கிறது. சந்தையும் நிஃப்டியை 10000-ஐத் தாண்டி நகர்த்துவதில் ஆர்வமாக இருக்கிறது. சந்தையில் ஆர்வம் மிகுந்திருந்தாலும், மக்களின் சென்டிமென்ட் காளையின் போக்கில் இல்லாமல் திடீர் சரிவைச் சந்தித்துவிடுமோ என்ற கவலையிலேயே சந்தைத் தொடர்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதற்கு, கடந்த வருடம் டிசம்பர் 16-ல் அடைந்த இறக்கத்திலிருந்து ஏற ஆரம்பித்த சந்தை, அதன்பிறகு பெரிய இறக்கம் ஒன்றையும் இதுவரை அடையவில்லையே என்ற ஆச்சர்யம் பெரும்பாலானோர் மனதில் தொடர்ந்து நீடிப்பதே காரணம். இதனால், பெரும்பாலானோர் தீவிரமாக லாங் பொசிஷன்களை எடுப்பதிலிருந்து விலகியிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொருமுறை இறங்கி ஏறும்போதும் லாங் பொசிஷன்களை கைவிட்டு, முதலீட்டை வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த நிலைப்பாடுதான் சந்தையை வாங்கிக் குவிக்கப்படுவதிலிருந்து (Overbought) பாதுகாக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


வங்கிகளும் கடந்த வாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, சந்தையின் ஏற்றத்துக்குப் பங்களித்தது. ஆனால், அவற்றிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையின் இந்த அபாரமான ஏற்றத்துக்குக் காரணமான டாப் பங்குகள் என்று பார்த்தால், ரிலையன்ஸ், ஐ.டி.சி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சந்தையின் இந்தக் காளைப் போக்கு மேலும் சில காலம் தொடரும் என்று சொல்லலாம்.

எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் லாங் பொசிஷன்களைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். வாரத்தின் இடையில் ஏற்படும் இறக்கங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம். தற்போது நிஃப்டியின் சப்போர்ட்டாக 9700 என்ற நிலை உள்ளது எனவே, ஸ்டாப் லாஸ்களை இந்த நிலைக்குக் கீழே வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சிஞ்சின் இன்டர்நேஷனல் (SYNGENE)

தற்போதைய விலை: ரூ.498.95

வாங்கலாம்

பயோகான் குழுமத்தைச் சேர்ந்த சிஞ்சின் இன்டர்நேஷனல் நிறுவனப் பங்கின் விலை, சில காலம் வரை அழுத்தத்தில் இருந்துவந்தது. ஆனால், மே 17-க்குப்பிறகு இந்தப் பங்கின் சார்ட்டில் முக்கோண பேட்டர்ன் உருவானது. கடந்த வாரத்தில், இந்தப் பேட்டர்ன் பிரேக்அவுட் புள்ளியை ஏற்படுத்தி, ஏற்றத்தின் போக்கை உருவாக்கியிருக்கிறது.

மேலும், இந்தப் பங்கின் வர்த்தகமும் நல்ல வால்யூம் மற்றும் மொமென்டத்துடன் இருந்து வருவதோடு, இதன் பிரேக்அவுட் நிலையில் போலிங்கர் பேண்டின் தாக்கமும் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் பங்கை 530-550 வரை உயர்த்த வாய்ப்பிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.460-ல் வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

க்ரிண்ட்வெல் நார்டன் (GRINDWELL)

தற்போதைய விலை: ரூ.436.40

வாங்கலாம்


இந்த நிறுவனம் கிரிண்டிங் மீடியா பிசினஸில் ஈடுபட்டிருக்கிறது. இந்தத் துறையில், இந்த நிறுவனம் கடந்த சில காலமாக சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. இந்தப் பங்கு, 2015-ல் 390 என்ற உச்சத்தை அடைந்தபிறகு கடந்த இரண்டு வருடத்துக்கு ஏற்ற, இறக்கமில்லாத நிலையிலேயே இருந்து வந்தது.

தற்போது இந்த நிலை முடிவுக்கு வந்து, ஏற்றத்துக்கான பிரேக்அவுட் நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் போக்கு இந்தப் பங்கை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும். அடுத்த ஆறு மாதங்களில் ரூ.600 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையிலும், ரூ.400 வரை இறங்கினாலும் வாங்கலாம். இந்த நிலையையே ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிஎஸ்பி புராஜெக்ட்ஸ் (PSPPROJECT)

தற்போதைய விலை: ரூ.290.75

வாங்கலாம்

இது சமீபத்தில் பட்டியலான கட்டுமானம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை நிறுவனப் பங்காகும். பட்டியலிடப்பட்டபிறகு இந்தப் பங்கு சிறப்பாகவே செயலாற்றி, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. சமீபத்தில் இந்தப் பங்கு ரூ.320 என்ற உச்சத்தை அடைந்து, பின்னர் லேசாக இறக்கம் அடைந்தது. தற்போது, மீண்டும் இந்தப் பங்கு தனது பழைய உச்சத்தை அடைவதற்குத் தயாராக உள்ளது.

 குறுகிய காலத்தில் ரூ.320 என்ற நிலையை மீண்டும் எட்ட வாய்ப்புள்ளதால், குறுகிய காலத்துக்கு இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.270-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.