நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவின்படி,  இந்திய பங்குச் சந்தையில் பெரும்பாலானவர்கள் லாங்க் பொசிஷன்களைக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய வர்த்தகத்தின் இடையில் சந்தை இறக்கத்தில் இருந்தது. ஆனால், இடையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) அதன் தலைவர் முகேஷ் அம்பானி ஆற்றிய உரையால் சந்தை ஏற்றம் காண ஆரம்பித்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 124 புள்ளிகளும், நிஃப்டி 42 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


சார்ட்படி பார்த்தால், நிலையற்ற வார கேண்டில் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில், முந்தைய வாரத்தில் சந்தை பெரிதாக ஏற்றம் காணவில்லை என்பதால், சந்தையின் போக்கு மாற்றமில்லாமல் இருந்தது.

கடந்த வாரத்தில் வங்கிப் பங்குகள் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் பட்டது. அதேபோல் நடந்திருக்கிறது. ஆனாலும், தனியார் வங்கிகளின் பங்குகள் விலை, எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.

அதே நேரத்தில், நிஃப்டி-யைவிட பேங்க் நிஃப்டி-யை, இண்டெக்ஸ் டிரேடர்கள்  விரும்புவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் பொசிஷன்களை வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள்,  பாதுகாப்பாக வர்த்தகமாவதைக் காண முடிந்தது. மருந்து தயாரிப்பு (பார்மா) நிறுவனப் பங்குகள் விலை உயர்வு  காணாத நிலையில், ஐ.டி நிறுவனப் பங்குகளின் ஏற்றம், இண்டெக்ஸ் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது.

இந்த வாரத்தில், பெரிய வங்கிகளின் முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. முடிவுகள் சாதகமாக இருந்தால், வங்கிப் பங்குகள் அதிக ஏற்றம் காண வாய்ப்பு இருக்கின்றன.

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சிறப்பான ஏற்றம் கண்டு வருகிறது. சந்தையின் ஏற்றத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மற்றும் அதன் ஏஜிஎம் பின்னணியாக இருந்தன.

மேலும், சந்தைக்குப் பாதகமான விஷயங்கள் எதுவுமில்லை என்பதும் இந்திய பங்குச் சந்தையின் உயர்வுக்குக் காரணமாக இருந்தது.

சந்தையில் இறக்கம் ஏற்பட்டால், அதனை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பேங்க் நிஃப்டியை 24100 நிலையில் வாங்கலாம். நடப்பு வாரத்தில் 24500-க்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 23700-க்குக் கீழே வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் (APOLLOHOSP)

தற்போதைய விலை : ரூ.1267.75

இந்த நிறுவனப் பங்கு, குறிப்பிட்ட காலமாக  நிலையாக வர்த்தகமாகி வருகிறது. சமீபத்தில் மொத்த சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தைக்கூட இந்தப் பங்கு காணவில்லை. இதன் சார்ட்டைப் பார்த்தால், கடந்த சில மாதங்களில் இந்தப் பங்கின் விலை 1150 முதல் 1350 ரூபாய்க்கு இடையில் வர்த்தகமானது. இப்போது அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே, அடுத்து வரும் வாரங்களில் இந்தப் பங்கின் விலை நல்ல ஏற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கலாம். எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்குகளை வாங்கலாம். 1,200 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும். அடுத்த 6-12 வாரங்களில் இந்தப் பங்கின் விலை 1,400 ரூபாய்க்கு உயரக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இன்ஜினீயர்ஸ் இந்தியா (ENGINERSIN)

தற்போதைய விலை : ரூ.164.85

சமீபத்தில் சந்தை கண்ட ஏற்றத்தை இந்தப் பங்கின்  விலை காணவில்லை. அதோடு, இந்தப் பங்கின் விலை கன்சாலிடேட் ஆகத் தொடங்கியிருப்பதையும், இதன்  சார்ட்டில் பார்க்க முடிகிறது. இந்தப் பங்கின் உச்ச விலையான 170 லெவல், டிசம்பர் 2016-ல் தொட்டபின் இதுவரை அதனைக் கடக்கவில்லை. தற்போதைய மொமென்டத்தைப் பயன்படுத்தி உச்சத்தைத் தாண்டப் பார்க்கிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.152 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். அடுத்த சில வாரங்களில் ரூ.185-க்கு உயரக் கூடும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கும்மின்ஸ் இந்தியா (CUMMINSIND)

தற்போதைய விலை : ரூ.1,004.65


 இந்த நிறுவனப் பங்கு,  ஏற்கெனவே டபுள் பாட்டம் பிரேக் அவுட் ஆகி, கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1,095 என்கிற உச்சத்தைத் தொட்டிருப்பதை சார்ட்டில் பார்க்க முடிகிறது.  அதன்பின் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் விலை இறங்கி, மீண்டும் அதே டபுள் பாட்டத்தையே சப்போர்ட்டாக எடுத்து, அதே பேட்டனைக் காட்டுகிறது. அது மட்டுமின்றி, இந்தப் பங்குக்குத் தற்போது சந்தையிலும் நல்ல டிமாண்ட் இருப்பதையும் காண முடிகிறது.

இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்காலம். குறுகிய காலத்துக்கு ரூ.1040  வரை செல்லலாம். நீண்ட காலத்துக்கு என்றால், தன் பழைய ஸ்விங் ஹை வரை கூட செல்லலாம். நீண்ட கால முதலீட்டுக்கு  975 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்து  முதலீடு செய்யலாம்.

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

திருத்தம்

கடந்த இதழ் நாணயம் விகடனில் வரிக் கணக்கு தாக்கல் கட்டுரையில், 2016-17-ம் நிதியாண்டுக்கான வரி விலக்கு வரம்பு (ரூ.2.5 - ரூ.5 லட்சம்) 5% எனக் குறிப்பிட்டு இருந்தோம். இதை 10% எனத் திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம். 

-ஆர்