நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நீண்ட நாளாக எதிர்பார்த்துவந்த விலைச் சரிவுகள் கடந்த வாரத்தில் நடந்தன. இதில் பிரச்னை என்னவென்றால், சந்தையில்  ஈடுபடுகிறவர்களின் எதிர்பார்ப்பில் இந்த விலைச் சரிவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விளைவு, லாங் பொசிஷன்களில் இருந்த பலர் பாதிப்படைந்துள்ளனர். முக்கியமாக, மிட்கேப் பிரிவு கடுமையாகவே பாதிப்படைந்திருக்கிறது. 

பங்குகள் விற்பனை பரவலாக இருந்ததைப்  பார்க்கும்போது, செய்தி அல்லது பிற நிகழ்வுகளால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பலரும் தங்கள்  பொசிஷன்களிலிருந்து வெளியேறவே செய்தனர். இதனால் சந்தையில் ஏற்பட்ட சேதாரம் குறைந்த பட்சம் அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கலாம்.     

நிஃப்டி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமெனில், அது 9700-9600 என்ற வரம்பில் மட்டுமே வர்த்தகமாக வேண்டும். இதையும்  தாண்டி இறங்குமானால், நடுத்தர காலத்தில் சந்தையின் போக்கு கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. அப்படி ஏதும் நடக்காதவரை, ஏற்றத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள ஒரு குறுகிய கால இறக்கமாகவே இப்போது ஏற்பட்டுள்ள இறக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். எனவே, சந்தை இறக்கம் காணும்போதெல்லாம் அவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிகளும் சிறப்பாகச் செயல்படுவதற்கான காரணிகள் எதுவுமில்லாத நிலையில் இருப்பதால், தொடர்ந்து அழுத்தத்தில்தான் இருக்கும். மேலும், வங்கிப் பங்குகள் இறக்கத்தைச் சந்தித்து நிஃப்டியிலும் இறக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், ஐ.டி பங்குகளில் சிறப்பான நகர்வுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் நாள்களில் ஏற்றத்தை நோக்கி அவை நகரும் என்பதுடன், நிஃப்டி சற்று ஏற்றமடையவும் உதவியாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!பார்மா பங்குகள் சொல்லிக்கொள்ளும் அளவிலான நிதி நிலை முடிவுகளைக்கொண்டு இல்லாததால் தொடர்ந்து இறக்கத்தின் போக்கிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆக மொத்தத்தில், நிறுவனங்கள் வருவாய் பார்க்கக்கூடிய காலத்தின் பெரும்பகுதி முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் வரும் வாரத்தில் சந்தையை மேல் நோக்கி எடுத்துச் செல்லக்கூடிய காரணிகள் எதுவும் பெரிதாக இருக்காது.
வரும் நாள்களில் சந்தையானது சில இறக்கங்களைச் சந்திக்கவேண்டி வரலாம். தற்போது மெதுவான நகர்வுகளைக் கொண்ட சந்தை உருவாகியிருப்பதால், குறிப்பிட்ட பங்குகளைத் தேர்ந்தெடுக்கும்போதுகூட மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

சென்சுரி டெக்ஸ்டைல் (CENTURYTEX)


தற்போதைய விலை: ரூ.1176.95

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கின் நகர்வுகள் சற்று நிலையானதாகவும், ஏற்றத்தின் போக்கிலுமே நீண்ட காலத்துக்குத் தொடர்கிறது. இதன் சமீபத்திய நகர்வுகளும் சிறப்பாக இருந்ததுடன், சந்தையின் போக்கில் சில ஆச்சர்யங்களையும் நிகழ்த்தியது. ஆனாலும், சந்தையின் பலவீனங் களால் சமீபத்திய உச்சங்கள் விரைவாகவே இறக்கத்தை அடைந்தன.

கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் விலை நகர்வுகளில் சராசரியான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு, அதன் சப்போர்ட் நிலைக்கு இறங்கியது. இந்தப் பங்குக்கான தேவை மீண்டும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தப் பங்கு ரூ.1165-1135 என்கிற வரம்புக்குள் வாங்கலாம். அடுத்த சில வாரங்களில் ரூ.1250 வரை உயர வாய்ப்புண்டு. ஸ்டாப்லாஸ் ரூ.1120 வைத்துக் கொள்ளவும்.  

கிரி இண்டஸ்ட்ரிஸ் (KIRIINDUS)

தற்போதைய விலை: ரூ. 266.05

வாங்கலாம்


ஸ்மால்கேப் பங்குகள் கடந்த வாரத்தில் நன்றாகவே சரிவைச் சந்தித்தன. அவற்றில் பெரிய இழப்பைச் சந்தித்திருக்கும் ஒரு நிறுவனம் கெமிக்கல் பிரிவில் இயங்கிவரும் கிரி இண்டஸ்ட்ரிஸ். இந்தத் துறையின் எதிர்காலம்  நன்றாக இருப்பதால், இந்தப் பங்கின் விலைச் சரிவை வாங்கும் வாய்ப்பாக  எடுத்துக்கொள்ளலாம்.

இதன் விலை நகர்வுகள் மீண்டும் ஏற்றத்தின் போக்கில் சென்று ரூ.300 என்ற நிலையைக் குறுகிய காலத்தில் அடைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.250 என வைத்துக்கொள்ளவும்.
 
பாம்பே டையிங் (BOMDYEING)

தற்போதைய விலை: ரூ.70.60

வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவும், பலவீனமான சந்தையும் சேர்ந்து கடந்த வாரத்தில் பங்கின் விலையில் இறக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், சமீபத்தில் நடந்த ஆண்டுக் கூட்டத்தில் கூறப்பட்டதுபோலவே, இந்த நிறுவனத்துக்கான எதிர்காலம் நிலையாகவே இருக்கும் என்பதால், இந்தப் பங்கில் தற்போது ஏற்பட்டுள்ள இறக்கத்தை வாங்கும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னிலும் ஏற்றத்தின் போக்கை உறுதி செய்யும் ‘கப் வித் ஹேண்டில்’ பேட்டர்ன் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம்.

இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.90 வரை உயர வாய்ப்புண்டு. ஸ்டாப்லாஸ் ரூ.65 வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.