நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

டந்த வாரம் சந்தையை மேலும் இறக்கத்தை நோக்கி எடுத்துச்செல்ல முயன்ற கரடியின் முயற்சிகளுக்கு இடம்தராமல் சந்தை சமாளித்தது. நிஃப்டி 9,800 என்ற நிலைக்குக் கீழே இறங்கியபோது கரடியின் ஆதிக்கம் வெற்றி பெற்றதாகத் தெரிந்தது. ஆனால் 9,775 என்ற நிலையில், நிஃப்டி சப்போர்ட் வலுவாக இருந்ததாலும், இந்த நிலையில் டிமாண்ட் உருவானதாலும் கரடியின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும், வாரத்தின் முடிவில் காளையின் ஆதிக்கம் மீண்டும் தன் இடத்தைப் பிடித்தது.  காளையின் ஆதிக்கம் வலுவாக இருந்ததால், மீண்டும் நிஃப்டியை 10,000-ஐ நோக்கிக் கொண்டு சென்றது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதையும் தவிர்த்து, சந்தை மீண்டும் 10,000-ஐத் தாண்டிச் செல்லும் முயற்சியில் இருப்பது ஏற்றத்தின் போக்குக்கான பாசிட்டிவான அறிகுறியை உறுதி செய்கிறது. எனவே, நம்பிக்கையுடன் சந்தையை அணுகுவதுடன் மட்டுமல்லாமல், சந்தை உருவாக்கித் தரும் வாங்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.  

பேங்க் நிஃப்டி சில காலத்துக்கு அழுத்தமான நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில், வங்கித் துறையின் செயல்பாட்டை ஊக்குவிக்கக்கூடிய எந்தக் காரணிகளும் இதுவரை இல்லை. எனவே, பேங்க் நிஃப்டி இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நிஃப்டிக்கு இதனால் இப்போதைக்கு உதவ இயலாது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!ஐ.டி துறையும் சொல்லிக்கொள்ளும் அளவில் செயல்படவில்லை. இவை தவிர, பிற துறைகளின் செயல்பாடுகளே நிஃப்டியின் ஏற்றத்தில் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, எண்ணெய் சுத்திகரிப்புத் துறை சிறப்பாகச் செயலாற்றி, நிஃப்டியின் ஏற்றத்துக்கு உதவியது. எஃப்.எம்.சி.ஜி துறை ஓரளவுக்கு நிஃப்டிக்கு உதவ, ஆட்டோ மொபைல் துறையும் தனது பங்களிப்பைக் கொடுத்தது. 

வரும் வாரத்தில் சந்தையில் ஏற்றத்தின் போக்கு தொடர்வதைப் பார்க்கலாம், நிஃப்டி 10,100 என்ற நிலையை அடைய வாய்ப்புள்ளது. 9,900-9,950 என்ற வரம்புகளில் இறக்கங்கள் ஏற்பட்டால், அவற்றை வாங்கும் வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளவும்.

ஐ.ஜி பெட்ரோகெமிக்கல்ஸ் (IGPL)

தற்போதைய விலை: ரூ.494.75

வாங்கலாம்

நீண்ட காலமாகவே இந்த நிறுவனப் பங்கில் மிக வலுவான போக்கு தொடர்ந்து வருகிறது. மேலும், அந்தப் போக்கு மாறுவதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. இடையில் ஒரு மாத காலத்துக்கு ஏற்ற இறக்க மில்லாத நிலையிலிருந்த இந்தப் பங்கு அதிலிருந்து மீண்டு இப்போது ஏற்றத்தின் போக்கில் செல்கிறது.

கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் விலையில் ஏற்பட்ட நகர்வுகள் அதை உறுதி செய்கின்றன. வரும் வாரங்களில் புதிய உச்சங்களை அடைய வாய்ப்புள்ளது. குறுகிய காலத்தில் ரூ.550 முதல் ரூ.560 என்ற நிலையை அடையலாம். எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம்.   ஸ்டாப்லாஸ் ரூ.470 வைத்துக்கொள்ளவும்.  

அதானி ட்ரான்ஸ்மிஷன் (ADANITRANS)

தற்போதைய விலை: ரூ.127.70


வாங்கலாம்

அதானி குழும நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தில் நன்றாக ஏற்றம் கண்டன. அவற்றின் ஏற்றம் இந்தப் பங்கில் ஏற்கெனவே இருந்த வலுவான ஏற்றப் போக்கை மேலும் தொடர வழி செய்தன. இதனால் இந்தப் பங்கில் புதிய மொமென்டம் உருவாகியுள்ளது. இந்த மொமென்டம் மூலம் இந்தப் பங்கு, நன்கு செயல்படும் சக குழும நிறுவனங்களின் உதவியோடு மீண்டும் புதிய ஏற்றங்களை அடைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். சில வாரங்களில் ரூ.160 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.115-க்கு கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

அட்வான்ஸ்டு என்சைம் டெக்னாலஜீஸ் (ADVENZYMES)


தற்போதைய விலை: ரூ.303.65

வாங்கலாம்

ஐ.பி.ஓ-வில் அமோக வரவேற்பு பெற்ற பங்கு இது. பட்டியலானபின் நன்கு ஏற்றமடைந்தது. ஆனால், இதன் நிதிநிலை முடிவுகள் சில காலாண்டுகள் ஏமாற்றமளித்ததால், பங்கின் விலை இறக்கத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதன் உச்சநிலையான ரூ.475-லிருந்து ரூ.267-க்குச் சரிந்தது.

ஆனால், அதன் சார்ட் பேட்டர்னில் இந்த இறக்கப் போக்கானது முடிவுக்கு வந்து ஏற்றத்தின் போக்கு உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பங்கு, தான் அடைந்த இறக்கத்திலிருந்து 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலையை அடையுமானால், பங்கு விலை ரூ.375 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.290.   
                                                       
தொகுப்பு: ஜெ.சரவணன் 

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.