நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

ந்தை லேசான ஏற்றம் அடையும் என்று முந்தைய இதழில் சொல்லியிருந்தோம். நாம் சொன்னது போலவே நடந்தது. மெதுவாக ஏற்றம் அடைந்த சந்தை, மீண்டும் ஏற்றமடையும்முன் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு அருகில் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. சந்தையானது பாசிட்டிவான அம்சங்களுடன் ஏற்றத்துக்கான போக்கிலேயே இன்னும் தொடர்ந்தாலும், கடந்த வாரத்தின் முடிவில் ஒரு நடுநிலையான போக்கில்தான் நிறைவு செய்தது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சென்ற வாரத்தில், வங்கி பங்குகள் எதுவும்  ஏற்றம் காணவில்லை. சில தனியார் வங்கிகளின் பங்குகள் ஏற்றமடையும் முயற்சியில் தோல்வியே கண்டன. ஐ.டி துறையும் அழுத்தத்திலிருந்து மீளாததால், அந்தத் துறை பங்குகளின் விலை குறைந்து நிஃப்டியின் இறக்கத்துக்குக் காரணமானது.   
 
ஆனாலும், ஒட்டுமொத்தமாக சந்தை இறங்காததற்குக் காரணம், மெட்டல், ஆயில், காஸ் மற்றும் கன்ஸ்யூமர் ட்யூரபிள்ஸ் போன்ற துறைகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் கணிசமான ஆர்வம் கொண்டிருந்ததுதான். இதனால் அந்தத் துறைகளில் ஏற்பட்ட ஏற்றமானது சந்தைக் குறியீட்டின் ஏற்றத்துக்கு உதவியாக இருந்தது.

மிட் கேப், ஸ்மால் கேப் இரண்டிலும் ஆர்வம் குறையாமல் நீடித்ததால், சந்தையில் சிறு முதலீடுகளைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. உற்பத்தித் துறையின் டேட்டா வந்ததால், சந்தை கடந்த வாரத்தைச் சிறப்பாகத் தொடங்கி, கொரியாவின் அச்சுறுத்தல் செய்தி வெளியான நிலையிலும் வாரம் முழுவதுமே அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் செய்தது.

உண்மையைச் சொன்னால், நெகட்டிவ் செய்திகளைத் தவிர்த்துவிட்டு, ஏற்றத்தின் போக்கில்தான் சந்தைத் தொடர்ந்து நகர்ந்தது. 

செய்திகளின் தாக்கம் இல்லாத நிலையில், பங்குகளின் வழக்கமான நகர்வுகளும் செயல்பாடுகளும் தொடர்ந்து இருந்தன. ஏனெனில், கடந்த வாரத்தில் செய்திகளைக் காட்டிலும் முதலீடுகள்தான் பெரும்பாலும் சந்தையை நகர்த்தின. உண்மையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலமாகச் செய்யப்பட்டு உள்ளன. இந்த முதலீடானது சந்தைக்கு பாசிட்டிவான சென்டிமென்டைத் தந்திருக்கிறது.  மேலும், அடுத்துவரும் வாரங்களில்/மாதங்களில் பணியாளர் சேமநல நிதியானது பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதுவும் சந்தைக்குப் பாசிட்டிவான போக்கைத் தரும். கொரியாவின் அச்சுறுத்தல்கள் விலகும் சமயத்தில் சந்தை மீண்டும் நல்ல ஏற்றத்தை நோக்கி நகரும்.  

அதுவரை நிஃப்டியானது 9850-9950 என்ற வரம்புக்குள் சில ஏற்ற இறக்கங்களுடன்தான் வர்த்தகமாகும். எனவே, வரும் வாரத்திலும் குறிப்பிட்ட பங்குகளைச் சார்ந்தே சந்தையின் போக்கு இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



அசோக் லேலாண்ட் (ASHOKLEY)

தற்போதைய விலை: ரூ.115.15


வாங்கலாம்

பெரும்பாலான ஆட்டோ துறை நிறுவனங்களின் மாதாந்திர விற்பனை விவரங்கள் பாசிட்டிவாக வந்திருப்பதால், அதன் பங்குகளும் கடந்த வாரத்தில் நன்றாகவே அதிகரித்தன.  அசோக் லேலாண்ட் பங்கின் விலையிலும் உச்சங்களை நோக்கிய சில நல்ல நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. மேலும், இதன் நகர்வுகள் தினசரி மற்றும் வார சார்ட் பேட்டர்னில் பிரேக்அவுட் நிலையை உருவாக்கியிருக்கிறது. எனவே, தற்போதைய நிலையிலிருந்து இந்தப் பங்கு ஏற்றமடைவதற்கான வாய்ப்புகளுடன் இருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.130-135 என்ற நிலை வரை உயர வாய்ப்புள்ளதால், தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.110 வைத்துக்கொள்ளவும்.

மிர்சா இன்டர்நேஷனல் (MIRZAINT)

தற்போதைய விலை: ரூ.165.50

வாங்கலாம்


தோல் மற்றும் காலணித் துறை நிறுவனங்கள் ஜி.எஸ்.டி நடைமுறையால் பலனடையும் நிறுவனங்களாக உள்ளன. எனவே, இந்தத் துறையின் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு வர்த்தகப் போக்கு நன்றாக உள்ளது. அவற்றில் ஒன்றுதான், மிர்சா இன்டர்நேஷனல். இதன் பங்கு விலையின் சமீபத்திய நகர்வுகளில் அது முன்பு கண்ட நல்ல உச்ச நிலைகளில் ஏற்ற இறக்கமில்லாத நிலையை அடைந்தன. கடந்த வாரத்தில் இந்த நிலை முடிவுக்கு வந்து ஏற்றமடைய தொடங்கி யிருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இந்தப் பங்கானது தனது அடுத்த இலக்கு விலையை நோக்கி வேகமாக நகரும் என எதிர் பார்க்கலாம்.  தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.183-190 என்ற நிலைக்கு உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.155 வைத்துக் கொள்ளவும்.  

கொச்சின் ஷிப்யார்ட் (COCHINSHIP)

தற்போதைய விலை: ரூ.548.90

வாங்கலாம்

இது சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டு அமோக வரவேற்புடன் சந்தையில் பட்டியலானது. பட்டியலான அன்றே நன்றாக ஏற்றம் கண்டது. அதன்பிறகான நகர்வுகளை சார்ட் பேட்டர்னில் பார்க்கும்போது, பட்டியலான அன்று அடைந்த உச்சத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் கண்ட லாபமானது வெளியே எடுக்கப்படுவது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், பங்கின் விலை மீண்டும் ஏற்றமடைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.600 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 520-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன் 

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.