நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கொரிய நாட்டின் அச்சுறுத்தல் செய்திகளின் தாக்கம் குறைந்ததால், கடந்த வாரத்தில் பங்குச் சந்தையானது ஒரு குறிப்பிட்ட வரம்பிலிருந்து மீண்டு, வெளியே வந்தது. இதனால் நிஃப்டி, 10000 புள்ளிகள் என்ற நிலையை மீண்டும் அடைந்த துடன், முன்பு கண்ட உச்சநிலைகளை அடைந்து, அந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் வேறெந்த முக்கியச் செய்தியும் இல்லாததால், சந்தை பாசிட்டிவ் சென்டிமென்டால் வாரம் முழுவதும் ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தது. இது சிறு முதலீட்டாளர்களை ஃப்யூச்சர்ஸில் முதலீடு செய்யத் தூண்டியது. இதனால் பெரும்பாலான பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயின.

இண்டெக்ஸ் ஃப்யூச்சர்களின் பிரீமியம் நிலைகளும், ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டில் பெரிய அளவு ஏற்றமும் இல்லாத நிலையில்  குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. எனவே, சந்தையின் பெரும்பான்மை செயல்பாடுகள் வர்த்தகங்களைப் பொறுத்தே அமைந்தன. சந்தையைச் சாதாரணமான செய்திகள் பாதித்தபோது அதிகமாக வாங்கியவர்கள் முதலீடுகளை விற்றுப் பணத்தைத் திரும்ப  எடுத்தனர். அட்வான்ஸ் பொசிஷன்களும் அதிக அளவில் எடுக்கப்படவில்லை. 

கடந்த வாரத்தில் தனியார் வங்கிப் பங்குகள் நன்கு செயல்பட்டு, பேங்க் நிஃப்டியின் ஏற்றத்துக்கு உதவியதுடன், 25000 புள்ளிகள் என்ற நிலைக்கு அருகில் சப்ளையானது சவாலாக இருந்தது.

பொதுத் துறை வங்கிகளும் பேங்க் நிஃப்டியில் பங்காற்றியிருந்தால், ரெசிஸ்டன்ஸ் நிலைகளைக் கடந்து  ஏற்றம் அடைவதை நாம் கண்டிருக்கலாம். இருந்த போதிலும், அவற்றில் சில வங்கிப் பங்குகள் தனியாகவே நன்கு செயல்பட்டு, ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டைப் புதிதாகச் சந்தையில் உருவாக்கின. எனவே, வரும் வாரத்தில் அவை ஒன்றிணைந்து செயல்பட்டு, பேங்க் நிஃப்டியில் சில நல்ல ஏற்றங்களை உருவாக்க வாய்ப்புள்ளன. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!ஆக, சந்தையின் சென்டிமென்ட் பெரும்பாலும் பாசிட்டிவாகவே தொடர் கிறது. எனவே, வாரத்தின்  இடையே இறக்கம் ஏற்பட்டால் அதனை வாங்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சந்தையில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் 10000-9900 என்ற வரம்புகளில் நன்றாகவே இருப்பதால், அந்த நிலையைத் தாண்டி பெரிய இறக்கங்கள் உண்டாகாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் என நம்பலாம்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஓகே ப்ளே (OK PLAY)

தற்போதைய விலை: ரூ.218.45

வாங்கலாம்

சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் நிறுவனப் பங்குகள் மீது கவனம் பதிந்துள்ளது. அவற்றில் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒன்றாக இந்தப் பங்கு விளங்குகிறது. சமீபத்தில், வெளியான இதன் நிதிநிலை முடிவுகள் நன்றாக இருந்ததால், அதன் மீதான கவர்ச்சி மேலும் அதிகரித்து, பங்குகள் வாங்கப்படுவதற்கான சென்டிமென்டையும் உருவாக்கியுள்ளது. மேலும், இதன் நிர்வாகத் தரப்பில் இருந்து உற்பத்தி குறித்த செய்திகள் இப்போது வெளியான நிலையில், பங்கில் நகர்வுகள் ஏற்றமடைய தொடங்கியுள்ளன. நல்ல வால்யூம்களில் விலை நகர்வுகள் வலுவாக இருந்துவந்த நிலையில், புதிய உச்சங்களை அடைவதற்கான நல்ல பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.300 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.200-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அர்விந்த் (ARVIND)

தற்போதைய விலை: ரூ.413.45

வாங்கலாம்


பல மாதங்களாக நீண்ட பக்கவாட்டு நகர்வுகளையே அடைந்துவந்த இந்தப் பங்கில், தற்போது புதிய ஏற்றத்துக்கான பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையானது பங்கின் விலையை 2014-ல் அடைந்த முந்தைய உச்சநிலையைத் தாண்டி, கொண்டு செல்வதாக உள்ளது. எனவே, வரும் நாள்களில் இந்த பங்கு புதிய உச்சங்களை அடையலாம். எனவே, தற்போதைய விலையிலும்,  வாரத்தின் இடையில் ஏற்படும் இறக்கங்களிலும் இந்தப் பங்கினை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.440 வரை உயரலாம். ரூ.402-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிராஃபைட் இந்தியா (GRAPHITE)

தற்போதைய விலை: ரூ.325.05

விற்கலாம்

இந்தப் பங்கை ஏற்கெனவே இரண்டு முறை  பரிந்துரைத்திருந்தேன். அதன்படியே கடந்த வாரங்களில் இந்தப் பங்கின் விலை நல்ல ஏற்றத்தைக் கண்டது. இதன் சார்ட் பேட்டர்ன்களில் பெரிய வரம்பு கொண்ட கேண்டில் பார்கள் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் முடிவு நிலையில் தற்போது நல்ல அட்வான்ஸ் நிலை உருவாகி யிருக்கிறது. இது, இந்தப் பங்கை வாங்குவதற் கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறுகிய காலத்தில் புதிய உச்சத்தை அடைவதற்கான வாய்ப்பும் விரைவில் உருவாகும் அறிகுறி ஆகும். மேலும், இந்தப் பங்கு குறித்த செய்தி களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. எனவே, முந்தையப் பரிந்துரைகளில் கிடைக்கும் லாபத்தை தற்போதைய விலையில் எடுக்கலாம். மீண்டும் இந்தப் பங்கை வாங்குவதற்கான சூழல் உருவாகும் வரை காத்திருந்து, ஏற்றத்துக்கான அறிகுறிகள் தென்படும்போது முதலீடு செய்யலாம்!

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.