நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

எல்லோரும் எதிர்பார்த்த இறக்கம் இப்போது வந்திருக்கிறது. நிஃப்டி அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியபிறகு, எப்போது அதிலிருந்து இறக்கம் காணும் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.  அதன்படியே கடந்த வாரத்தின் மூன்று வர்த்தக தினங்களில் தக்கவைக்கப்பட்டிருந்த உச்ச நிலை யானது வாரத்தின் இறுதியில் இறங்கி, இரண்டு நாள்களுக்குச் சந்தைகள் சரிவைக் கண்டு, நிஃப்டி 10,000 புள்ளிகளுக்குக் கீழ் இறங்கி வர்த்தகம் முடிந்தது.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாரத் தொடக்க நாள்களில் வலுவான விலை ஏற்றங்கள் இருந்ததால், அதிக அளவிலான லாங் பொசிஷன்களைப் பார்க்க முடிந்தது. இந்த லாங் பொசிஷன்களைக்கொண்டு செயல்பட்டுவந்த சந்தை, அடுத்தடுத்த நாள்களில் அவற்றின் மீதான வலுவை இழந்து, கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று பெரிய அளவிலான பங்கு விற்பனைகளில் முடிந்தது.

உள்ளபடி பார்த்தால், கடந்த வாரத்தில் இந்த இறக்கத்தை நாம் சந்திக்க வேண்டிய நிலையிலேயே இல்லை.ஏனெனில்,பெரிய அளவில் நெகட்டிவான செய்திகள் இல்லை.பெரிய அளவில் போர்ட்ஃபோலியோக்களை வைத்திருப் பவர்களும் விற்பனையில் ஈடுபடவுமில்லை. இந்த இறக்கமானது பெரும்பாலும் லாங் பொசிஷன் களிலிருந்து வெளியேறிய வர்த்தகர்களால் மட்டுமே நடந்திருக்கிறது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



வங்கிகளும் வாரத்தின் தொடக்கத்தில் நன்றாகச் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், ஆரம்பத்தில் அடைந்த ஏற்றத்தை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. பொதுத்துறை வங்கிகள் சிலவற்றில் ஓப்பன் இன்ட்ரஸ்ட்டுகள் உருவாகின. ஆனால், தனியார் வங்கிகளின் செயல்பாட்டில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, பேங்க் நிஃப்டியானது 25,000 புள்ளிகளைத் தாண்டிய நிலையில், இரண்டு வர்த்தக நாள்களுக்கு அதேநிலையில் இருந்து, பின்னர் தனது ஏற்றத்தின் போக்கை நிறுத்திக்கொண்டது.  

இரண்டு குறியீடுகளின் வீக்லி சார்ட்களிலும் கரடியின் ஆதிக்கம் கொண்ட பேட்டர்ன்கள் உருவாகியிருக்கின்றன. எனவே, வரும் வாரத்தில் விலை நகர்வுகள் எதுவும் வலுவாக இல்லாதபட்சத்தில் சில நாள்களுக்குக் கரடியின் ஆதிக்கம் தொடர்வதற்குத்தான் வாய்ப்புள்ளது. எனவே, வரும் வாரத்தில் சற்றுப் பொறுமை யாக இருக்க வேண்டியது அவசியம் என்றே இந்த வீக்லி கேண்டில் பேட்டர்ன் நமக்குச் சொல்கிறது.

ஆனால், வரும் வாரத்தின் ஆரம்ப வர்த்தக நாள்களில் நடக்கும் நகர்வுகள், சந்தையின் போக்கு எப்படியிருக்கும் என்பதற்கான அறிகுறிகளை நமக்குத் தரலாம். குறுகிய கால இறக்கமானது நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் 9950-9900 என்ற நிலை வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,  சந்தை இறக்கமானது தற்காலிகமானதாக இருப்பதாலும் சந்தை ஏற்றத்தின் போக்கில் தொடர்வதாலும் சப்போர்ட் நிலை வரை விலை இறங்கினால், அதை வாங்கும் வாய்ப்பாகவே எடுத்துக் கொள்ளலாம்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

  டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் (TVSELECT)

தற்போதைய விலை: ரூ.296.80

வாங்கலாம்

கடந்த வாரத்தில் வலுவான விலை நகர்வுகளைக் கண்ட பங்குகளில் ஒன்றாக டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது. இந்தப் பங்கில் ஏற்பட்ட வலுவான விலை நகர்வுகளின் மொமென்டம், அதைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு சென்றது. இதன் சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, ஏற்ற இறக்கம் இல்லாத நிலையை முடித்து ஒரு பிரேக் அவுட் நிலையை அடைந்து, வலுவான ஏற்றத்தின் போக்கு உருவாவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.அதன்படி தற்போது
உருவாகியிருக்கும் பிரேக் அவுட் நிலையானது, சில மாதங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்த பிறகே உருவாகியுள்ளது. எனவே, இந்தப் பங்கின் விலையில் ஏற்றமானது மேலும் சில காலத்துக்குத் தொடரும். அடுத்த எட்டு வாரங்களில் ரூ.360 வரை உயரலாம். ரூ.280-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

  தேனா பேங்க் (DENABANK)

தற்போதைய விலை: ரூ.31.35

வாங்கலாம்

பொதுத்துறை வங்கிப் பங்குகள் வாங்கப்படுவது சந்தையில் சில காலமாகவே தவிர்க்கப்பட்டு வந்தன. அதனால், அவற்றில் பெரும்பாலானவை விலை இறக்கங்களுக்கு உள்ளாயின. ஆனால், கடந்த வாரத்தில் அவற்றில் பெரும்பாலான பங்குகளில் மீண்டும் ஏற்றத்தை நோக்கிய விலைநகர்வுகளைப் பார்க்க முடிந்தது. பல பொதுத்துறை வங்கிப் பங்குகளில் வலுவான விலைநகர்வும், நல்ல வால்யூம்களில் வர்த்தகமும் நடப்பதைப் பார்த்தால், ஏதோ சில நிகழ்வுகள் அல்லது செய்திகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த வகையில் பார்க்கும்போது, பொதுத்துறை வங்கிப் பங்குகளில் தேனா பேங்க் பங்கை நாம் கவனிக்கலாம். இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்குவது, குறைவான ரிஸ்க் கொண்ட தாகும். மேலும், இதன் தினசரி மற்றும் வார சார்ட் பேட்டர்ன்களில் நல்ல விலை நகர்வு களை உண்டாக்கும் நீண்ட வரம்புகளைக் கொண்ட கேண்டில்களைப் பார்க்க முடிகிறது. எனவே, இந்தப் பங்கு ஓரிரு மாதத்தில் 15-20% விலையேற்றம் அடைய வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம்.  ரூ.28 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி.சி (ITC)

தற்போதைய விலை: ரூ.268.45

வாங்கலாம்

எஃப்.எம்.சி.ஜி துறையின் முன்னணிப் பங்குகள், சந்தையில் வலுவான அம்சத்துடன் இருக்கின்றன.ஆனாலும், அவற்றில் சிறந்ததாக ஐ.டி.சி உள்ளது. சமீபத்தில்வந்த நெகட்டிவ் செய்தி இந்தப் பங்கில் தாக்கத்தை ஏற்படுத்தி, கடந்த சில வாரங்களுக்கு இறக்கம் அடைய செய்தது. தற்போது இதன் விலைநகர்வு, ஏற்றத்தின் போக்கில் 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலையை அடைந்துள்ளது. இது, அதன் 50 நாள் மூவிங் ஆவரேஜ் அருகிலுள்ளது. இது, கடந்த காலத்தில் சப்போர்ட் நிலையாக இருந்தது. எனவே, இந்தப் பங்கில் இறக்கமானது இந்த நிலையில் முடிந்து, ஏற்றத்துக்கான நகர்வு களுக்குத் தயாராகியிருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.300-310 வரை உயர வாய்ப்புண்டு. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.240. 

தொகுப்பு: ஜெ.சரவணன் 

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.