நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே இருந்தது. ஆனாலும், நமது யூகமானது சந்தை பெரும்பாலும் இறக்கத்திலேயே தொடரலாம் என்பதாகவே இருந்தது. எனினும், கடந்த வாரத்தில் காளையின் போக்குச் சந்தையை ஆக்கிரமித்து, இறக்கத்திலிருந்து மேல்நோக்கி கொண்டு சென்றது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



வங்கிப் பங்குகள் பெரிய அளவில் ஏற்றமடையவில்லை என்றாலும், சந்தைக் குறியீடுகள் நன்கு ஏற்றம் கண்டன. நிஃப்டி, வாழ்நாள் புதிய உச்சத்தை எட்டியது. ஆனால், இடையில் இன்ட்ராடே விற்பனை நடக்க ஆரம்பித்ததும், நமக்குச் சற்று பயத்தை ஏற்படுத்தியது.இந்தப் பதற்றமான சென்டிமென்ட்டிலும் சிலர் லாங் பொசிஷனை எடுத்ததால், 10000 என்ற நிலைக்கு அருகிலிருந்து சந்தை ஏற்றம் காண ஆரம்பித்தது. 

டெரிவேட்டிவ் காரணிகளைப் பார்க்கும்போது, சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த தெளிவுகளை நமக்கு தருகிறது. புட் கான்ட்ராக்ட் ஷார்ட்ஸ்  அதிகரித்ததும் மற்றும் புட் கால்  விகிதமானது 1-க்குக் கீழேயிருந்து உயர்ந்து வாரத்தின் இறுதியில் 1.60-யை  அடைந்ததும் சந்தையைக் காளை ஆக்கிரமித்திருப் பதையும், சந்தையின் போக்கைத் தனது  கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் உணர்த்துகிறது. எனவே, சந்தை  மேலும் ஏற்றமடையும் என்றும் எதிர்பார்க்கலாம்.      

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளியாகும் சீஸன் தொடங்கிவிட்டது. எனவே, அது குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையில் சற்று இருக்கத்தான் செய்கின்றன. சந்தையின் எதிர்பார்ப்புகளை நிறுவனங்கள் நிறைவேற்றுமானால், சந்தையின் தற்போதைய ஏற்றப்போக்கு மேலும் வலுவடைவதை நாம் பார்க்கலாம். 

அதேபோல், எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் பொய்த்தாலும் தற்போதைய சந்தையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, ஒவ்வொருவரும் சந்தையைக் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். சந்தை வரலாற்றில் அக்டோபர் மாதம், உச்ச நிலைகளில் நின்றது கிடையாது. எனவே, சீஸனல் பேட்டர்ன்களும் சந்தையின் போக்கை தீர்மானிப்பதாகவே இருக்கும்.    

தற்போது சந்தை, வரலாற்றுப் புதிய உச்சத்தில் இருப்பதால், மேலும் ஏற்றமடையும் வாய்ப்புகளைப் பார்க்கலாம். ஆனால், காலாண்டு முடிவுகள் வெளியாகி வருவதால், சந்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பங்குகளைச் சார்ந்தே இருக்கும். வங்கிப் பங்குகள் மீண்டும் ஏற்றமடையத் தொடங்கியிருக் கின்றன. பேங்க் நிஃப்டி, 25000 நிலையை நோக்கி மீண்டும் ஏற்றமடைய வாய்ப்புள்ளது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சவுத் இந்தியன் பேங்க் (SOUTHBANK)

தற்போதைய விலை: ரூ.32.35

வாங்கலாம்

வங்கித் துறை பங்குகளில் கவனிக்கப்படாத  பங்காக சவுத் இந்தியன் பேங்க் உள்ளது. இந்தப் பங்கின் நகர்வுகள் சிறப்பாக இருப்பதுடன் நிலையாகவும் இருந்து வருகின்றன. இதன் சார்ட் பேட்டர்ன்களும் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளன. இது, பெரிய அளவில் பிரபலமல்லாத பங்கு என்பதால், வழக்கமாக பிற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிப் பங்குகளின் ஆதிக்கத்தில் கவனிக்கப்படாமல் இருக்கிறது.

ஆனால், கடந்த வாரத்தில் இதன் காலாண்டு முடிவுகள் வெளியானபிறகு, இந்தப் பங்கின் மீது கவனம் திரும்பியுள்ளது. இதன் சார்ட் பேட்டர்ன் ரூ.32-க்கு மேல் ஏற்றத்தின் போக்கில் நல்ல பிரேக் அவுட் நிலையைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த மூன்று மாதங்களில் இந்தப் பங்கு ரூ.44 வரை உயர வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

யுஃப்ளெக்ஸ் (UFLEX)

தற்போதைய விலை: ரூ.467.70

வாங்கலாம்

பிளாஸ்டிக் பேக்கேஜிங் துறை பங்குகள், சந்தையில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாகவே இருப்பதால், எண்ணெய் விலையோடு நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனங்கள் லாபமடைந்து வருகின்றன. அவற்றில் ஒன்றான யுஃப்ளெக்ஸ் நிறுவனப் பங்கில் தொடர்ந்து கொண்டிருந்த ஏற்றத்தின் போக்குக்கு, இடையில் கரெக்‌ஷன் ஏற்பட்டு, சில வாரங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்து வந்தது. அந்த நிலை தற்போது முடிவுக்கு வந்து, நல்ல பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கு, குறைவான ரிஸ்க் கொண்ட வாங்கக்கூடிய பங்காக இருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.530 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.430-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சரிகம இந்தியா (SAREGAMA)

தற்போதைய விலை: ரூ.568.20

வாங்கலாம்

தற்போது இந்த நிறுவனப் பங்கில், நீண்ட கால ஏற்ற இறக்கமில்லாத நிலையைத் தாண்டி புதிய பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. இந்தப் போக்கு, இந்தப் பங்கை மிகவும் கவனிக்கத்தக்கப் பங்காக மாற்றியுள்ளது.

எனவே, இந்தப் பங்கு ஏற்றத்தின் போக்கில், இதற்கு முந்தைய ரெசிஸ்டன்ஸ் நிலைகளையெல்லாம் தாண்டி, நல்ல மொமென்டத்தில் நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் பங்கை, தற்போதைய விலையில் வாங்கலாம். மூன்று மாத காலத்தில் ரூ.800 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.510-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.