நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகி வருவதால், இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு, பெரும்பாலும் குறிப்பிட்ட  பங்குகளைப் பொறுத்தே இருக்கிறது. வங்கிப் பங்குகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றன. ஆனால், ஆயில், காஸ் மற்றும் மெட்டல் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டு நம் நம் கவனத்தை ஈர்த்தன.

சிறு முதலீடுகள் தொடர்ந்து நிலையாகச் சந்தைக்குள் வந்துகொண்டிருப்பதால், வரும் வாரத்தில்  மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு, அவை ஏற்றம் காண் பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சர்வதேசக் காரணிகள் தொடர்ந்து பாசிட்டிவாக இருப்பதால், அவை நம் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சற்று தயக்கமான சென்டி மென்டுடனேயே தொடர்ந்து சந்தையை மேல்நோக்கி நகர்த்திச் செல்லும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!நிஃப்டி நிலையான ஏற்றத்தைக் கண்ட போதிலும், அந்தத் தாக்கம் பிற முக்கிய குறியீடுகளில் தென்படவில்லை. கடந்த வாரம் பேங்க் நிஃப்டியில் எந்த பாசிட்டிவ் நகர்வும்  ஏற்படவில்லை. காரணம், வங்கிப் பங்குகளின் மோசமான நிதிநிலை முடிவுகள் வந்ததே. குறிப்பாக, ஆக்சிஸ் பேங்க். இதன் இரண்டாம் காலாண்டு முடிவு மிகவும் மோசமாக வந்ததால்,  கடந்த புதன்கிழமை அதன் பங்கு விலை 9 மாத குறைந்த விலையை அடைந்தது.

நிஃப்டி குறியீட்டின் சார்ட்டில், ஹைலைட் டுகளுக்கு மேலே உள்ள பேண்ட் பேட்டர்ன்கள், காளையின் ஆதிக்கத்தில் சந்தை இருப்பதையே காட்டுகிறது. நிஃப்டியில் காணப்படும் நிலையான நகர்வுகளும், வலுவான காளையின் போக்கை நமக்கு உணர்த்துகிறது. மேலும், அது ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டைத் தொடர்ந்து அதிகரித்து, ஏற்றத்தின் நகர்வு களைக் கட்டுப்படுத்தும் காரணிகளைக் குறைத்து, பாசிட்டிவ் போக்கில் தொடர்ந்து சந்தையின் செயல்பாடு நிலைபெறவும் செய்திருக்கிறது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில், குறுகிய காலத்தில் பெருமளவிலான ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஏற்பட்டதிலிருந்து சந்தையில் வாங்கும் செயல்பாடு, நிலையாக இருப்பதைக் காட்டுகிறது. மேலும், கடந்த வாரத்தில் ஒரு வரம்புக்குள் சந்தை நகர்வுகள் இருந்தன.  நிஃப்டி, மேலும் ஏற்றமடையும் அறிகுறியாகவே இருக்கிறது. இதனால் நிஃப்டியின் அடுத்த உடனடி   டார்கெட்டுகள் 10325 மற்றும் 10493 புள்ளி களில் உள்ளன. நிஃப்டியில் உற்சாகப் படுத்தும் நகர்வுகள் இருக்கலாம்.

ஆனால், உச்ச நிலைகளில் நாம் எப்போதுமே கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில், சந்தை நிறுவனங் களின் காலாண்டு  நிதிநிலை முடிவுகளைப் பொறுத்து அது இருப்பதால், பாசிட்டிவான பங்குகளில் நம் கவனம் இருக்க வேண்டும். இந்த நிலையில், நம் தவறான சிந்தனைகள் உச்ச நிலைகளில் இருக்கும்போது சந்தையில் பங்கு பெறாமல் நம்மைத் தடுக்கவும் செய்யலாம்.

ஆனால், சந்தை குறித்த அலசல்களைத் தொடர்ந்து படித்து புரிந்துகொண்டவர் களுக்கு நன்றாகவே தெரியும். இறக்கத்தில் நல்ல பங்குகளில் தயங்காமல் தாராளமாக முதலீடு செய்யலாம். எனவே, பங்குச் சந்தையில் பலனடைய வேண்டுமென்றால் தொடர்ந்து அதில் பங்கு பெற வேண்டும். 

தற்போது ஐ.டி மற்றும் வங்கிப் பங்கு களில் குறிப்பிடத்தக்க நகர்வுகள் இல்லாமல் இருப்பதால், நிஃப்டி தனித்து செயலாற்றுகிறது. எனவே, எக்ஸ்பைரி எதிர்நோக்கி இருக்கும் நிஃப்டிக்கு, வரும் வாரம் சற்று கடினமாகவே இருக்கும். அதேசமயம், இரண்டாம் காலாண்டு முடிவுகள் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை நமக்குத் தரலாம்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பாலசோரே அலாய்ஸ் (ISPATALLOY)

தற்போதைய விலை: ரூ.85.65 (பி.எஸ்.இ)

வாங்கலாம்

பாலசோரே அலாய்ஸ், சிறப்பு வகை ஃபெர்ரோ அலாய் வகைகளை உற்பத்தி செய்கிறது. மேலும், ஃபெர்ரோ குரோம், சார்ஜ் குரோம் ஆகியவற்றைப் பெருமளவில் நுகரும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், டூல் ஸ்டீல் உள்ளிட்டவற்றையும் உற்பத்தி செய்கிறது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு இந்த நிறுவனப் பங்கின் விலை, இறக்கத்தின் போக்கில் நகர்ந்து ரூ.45 என்ற நிலையில், கிளவுட்  சப்போர்ட் நிலையை அடைந்தது, அதன்பிறகு ஏற்றமடையத் தொடங்கியது. தற்போது, அதன் சமீபத்திய உச்சமான ரூ.70 என்ற நிலையில், வலுவான பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. இந்தப் போக்கு இந்தப் பங்கை மேலும் ஏற்றமடையச் செய்து, புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

இந்தப் பங்கில் இருக்கும் நிலையான வால்யூம் வர்த்தகத்தைப் பார்த்தால், இந்தப் பங்கை ஏற்றத்தில் ரூ.88 வரையிலும், இறக்கத்தில் ரூ.80 வரையிலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.77-ஆக  வைத்துக்கொள்ளவும். இந்தப் பங்கு ரூ.96 வரை உயர வாய்ப்புண்டு.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹேவல்ஸ் இந்தியா (HAVELLS)

தற்போதைய விலை: ரூ.547.35

வாங்கலாம்

இந்தப் பங்கை முன்பே சில மாதங்களுக்குமுன்  பரிந்துரைச் செய்திருந்தோம். கடந்த புதன்கிழமை இந்தப் பங்கில் நாம் கண்ட ஏற்றம் மற்றும் இறக்கத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட முதலீடு கள், இந்தப் பங்கின் காளையின் போக்குக்குக் காரணமாயின. அக்டோபரில் இந்தப் பங்கில் நிலையாக அதிகரித்த ஓப்பன் இன்ட்ரெஸ்ட், இந்த மாதத்தின் தொடக்கத்தில் சார்ட் பேட்டர்னில் நாம் பார்த்த சிறிய கேன்டில் பேட்டர்ன்களிலிருந்து, புதன்கிழமையன்று அதன் குறுகிய கால உச்சமான ரூ.529 என்ற நிலையைத் தாண்டி நகரச் செய்துள்ளது. பங்கின் விலை மீண்டும் எழுந்து வந்திருப்பதால் ரூ.550 என்ற நிலையிலும் மற்றும் இறக்கத்தில் ரூ.537-540 என்ற வரம்பிலும் லாங் பொசிஷனை எடுக்கலாம். குறுகிய காலத்தில் ரூ.571 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.528 வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (IBULHSGFIN)

தற்போதைய விலை: ரூ.1,360.70


வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கின் விலைநகர்வுகள் கொஞ்சம் உறுதியுடன் இருக்கின்றன. இந்தப் பங்கில் காளையின் போக்கு இருப்பதைக் காட்டும் போலிங்கர் பேண்டின் அளவு அதிகரித்திருப்பதால், இதன் இரண்டு பெரிய அகலமான கேன்டில் பேட்டர்ன்கள் புதிய உச்சங்களை நோக்கி இந்தப் பங்கை எடுத்துச் செல்லலாம். இந்தப் பங்கின் முந்தைய உச்சநிலையிலிருந்த கரடியின் போக்கு, கடந்த இரண்டு நாள்களில் காணாமல் போய், பங்கில் திருப்பங்களை ஏற்படுத்தி, புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்துள்ளது. ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் கடந்த சில நாள்களாக இந்தப் பங்கில் நிலையாக இருந்துவருகிறது. இதனால் இந்தப் பங்கை வாங்குவதில் பலரும் ஆர்வமுடன் இருப்பதும் தெளிவாகிறது. 

இந்தப் பங்கின் விலை நகர்வுகள் வலுவான மொமென்டத்தில், ஏற்றத்தின் போக்கில் இருப்ப தால், ரூ.1,363 என்ற நிலையிலும், இறக்கத்தில் ரூ.1,345-1,350 என்ற வரம்பிலும் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,330 வைத்துக் கொள்ளவும். ரூ.1,388 வரை உயர வாய்ப்புள்ளது.

தொகுப்பு: ஜெ.சரவணன் 

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.