
பங்குச் சந்தை முதலீடு... கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள்!

1 பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, தேவைக்குப் போக எஞ்சியுள்ள தொகையை மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும்.
2 ஓரிரு ஆண்டுகள் கழித்துப் பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற அவசியத் தேவைகளுக்குத் தேவைப்படும் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறு. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது என்பதால் குறுகிய காலத் தேவைக்கு வைத்திருக்கும் பணத்தை அதில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3 ஏற்ற இறக்கத்தைத் தாண்டி பங்குச் சந்தை, பணவீக்க விகிதத்தைவிட சுமார் 3-5 சதவிகிதம் அதிக வருமானம் கொடுக்கும். இதற்கு ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கத் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் ஐந்தாண்டுகள் வரை தேவைப்படாத தொகையை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது.
4 முதலீட்டுத் தொகையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறையும்.
5 எதிர்பார்த்த காலத்தைவிட விரைவாகவே, முதலீடு செய்த பங்கு விலை உயர்ந்து விட்டது என்றால், லாபத்தை அறுவடை செய்ய தயங்காதீர்கள். பங்குகளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, சேர்த்தீர்களோ, அதேபோல், பகுதி பகுதியாக விற்று லாபத்தைக் கூட்டுங்கள்.
-சேனா சரவணன்