நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

சந்தையின் வலுவான ஏற்றப்போக்கில் பங்குகள் உச்சநிலைகளை எட்டியதால், கடந்த வாரத்தின் தொடக்கத்தில் லாபநோக்கிலான விற்பனைக்கு வழிவகுத்தது. மேலும், சில  சாதகமான செய்திகள் வந்து சந்தையின் இறக்கத்தைக் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொண்டதோடு, நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இரண்டையும் இறக்கத்திலிருந்து சற்று மீட்டுக்கொண்டு வந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



கடந்த வாரத்தில் சந்தை இறக்கமானது மெதுவாக இருந்ததோடு, விலைகள் சற்று இறங்கி வாரத்தின் இறுதியில் குறைந்தபட்ச ரிட்ரேஸ்மென்ட் நிலையில் 23.6 சதவிகிதத்தை எட்டியது. எனினும், இறக்கத்தில் வாங்கும் வாய்ப்பு, வாரத்தின் இறுதியில்தான் வந்தது. இந்த நிலையிலும் நாம் ரிவர்சல் சிக்னலுக்குக் காத்திருக்க வேண்டும். ஏனெனில், சந்தை மேலும் இறக்கம் காண்பதற்கான வாய்ப்புகள் வரலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இறக்கத்திலிருந்து மீளும் வாய்ப்பு 23.6 - 38.2 என்கிற வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்புமுனை ரிட்ரேஸ்மென்ட் நிலையானது, 10215 என்ற நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில்தான் சராசரி சப்போர்ட் நகர்வையும் பார்க்க முடிவதுடன், ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் அதிகமாகத் தென்படுகிறது. எனவே, நல்ல க்ளஸ்டர் சப்போர்ட் இங்கே உருவாகக்கூடும். இந்த நிலையில், வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம். 

பேங்க் நிஃப்டியானது நிஃப்டியைக் காட்டிலும் தன்னுடைய நிலையில் தக்கவைத்துக்கொண்டும், எளிதில் மீண்டுவரும் நிலையிலும் இருந்தது. எனவே, கடந்த வாரத்தில் அடைந்த நிலைகளில் தன்னைத் தக்கவைத்துக்கொண்டு, வரும் வாரத்துக்கான தெளிவில்லாத கேண்டில் பேட்டர்ன்களையே உருவாக்கியுள்ளது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முந்தைய வாரத்தின் வலுவான பிரேக் அவுட் நிலைக்குப்பிறகு, அதன் பிரேக் அவுட் நிலைகளில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதால், பேங்க் நிஃப்டி தன்னுடைய போக்கில் வலுவாக இருப்பது தெரிகிறது. ஏதேனும் பாசிட்டிவ் செய்திகள் வந்தால் பேங்க் நிஃப்டி, வரும் வாரத்தில் புதிய நிலைகளுக்கு நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

சந்தை தனது சமீபத்திய உச்சங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை சந்தையை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவை வந்துள்ளன.

தற்போது  பல நாடுகளில் அரசியல் பதற்றநிலை இருந்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் உயர்ந்தது. இது, நிஃப்டியின் ஏற்றப் போக்கில் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறது. எனவே, வரும் வாரத்தின் தொடக்கத்தில் நகர்வுகள் ஒரு வரம்பில் இருப்பதைப் பார்க்கலாம். அதன்பின் புதுப்பிக்கப்பட்ட அட்வான்ஸ் நிலைகளை அடைய வாய்ப்புள்ளது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆக்ஸிஸ் பேங்க் (AXISBANK)

தற்போதைய விலை: ரூ.544.80

வாங்கலாம்

பொதுத்துறை வங்கிகளுக்குச் சாதகமாக சமீபத்தில் வந்த செய்தி சில தனியார் வங்கி களுக்கும் பாசிட்டிவாக மாறியது. அதில் சில காலத்துக்கு அழுத்தத்தில் இருந்துவந்த ஆக்சிஸ் பேங்கும் ஒன்று. ஆனால், அடுத்தடுத்துவந்த நெகட்டிவ் செய்திகள் புதிதாக இதில் இறக்கங்களை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இதன் பேட்டர்னைப் பார்க்கும்போது, இதில் ஏற்பட்டிருந்த கரெக்‌ஷன் ஒருவழியாக முடிவுக்கு வந்து, ஏற்றமடையத் தயாராக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படவிருப்பதாக வெளியான செய்தி, இந்தப் பங்கில் வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தப் பங்கில் ஏற்றத்தின் நகர்வுகளை எதிர்பார்க்கலாம். எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம்.  ரூ.580 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.520-ஆக வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

போடர் பிக்மென்ட் (PODDARMENT)

தற்போதைய விலை: ரூ.350.55


வாங்கலாம்


கெமிக்கல் நிறுவனப் பங்குகளுக்கு எதிர்காலம் தொடர்ந்து நன்றாக இருந்து வருவதோடு மட்டுமல்லாமல், சந்தையிலும் கெமிக்கல் நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றான போடர் பிக்மென்ட் நிறுவனப் பங்கில் தற்போது காளையின் போக்குப் புதிதாக உருவாகியிருக்கிறது. கடந்த வாரத்தின் இறுதியில், இந்தப் பங்கு புதிய உச்சங்களுக்கு நகர்ந்தது. இந்தப் பங்கின் பேட்டர்னில் மொத்தமாகவே ஏற்றத்தின் போக்கு வலுவாக இருப்பதால், மேலும் புதிய உச்சங்களுக்கு நகர அதிக வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரங்களில் இன்னும் விலை  உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 310-ஆக  வைத்துக் கொள்ளவும்.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மார்க்சன் பார்மா (MARKSANS)

தற்போதைய விலை: ரூ.48.95

வாங்கலாம்

பார்மா துறை நிறுவனமான இதன் செயல்பாடுகளும், ஐரோப்பிய கட்டுப்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கைகளும் சில காலத்துக்குக் கேள்விக்குறியாக இருந்தன. ஆனால், இந்தப் பங்கில் திடீரென்று ஏற்பட்ட ஆழமான சரிவுக்குப் பிறகு, பல மாதங்களுக்கு வரம்புக்குள் வர்த்தகமாகி வந்தது.

தற்போது இந்தப் பங்கின் போக்கில் ஏற்றத்துக்கான சிக்னல்களை சார்ட் பேட்டர்னில் பார்க்க முடிகிறது. இதன் வர்த்தகத்தில் வால்யூம்கள் உயர்ந்து வருவதால், இந்தப் பங்கின் போக்கில் வலுவான மொமென்டம் உருவாகி, பங்கை வாங்கும் ஆர்வமும் அதிகரித் திருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த மூன்று மாதங்களில் ரூ.75 வரை உயர வாய்ப்புள்ளது.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.