நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

கடந்த வாரம் முழுவதுமே காளையின் ஆதிக்கம் தொடர்ந்து இல்லாமல், ஒரு வரம்புக்குள் ஏற்ற இறக்கத்துடனான நகர்வுகளையே நாம் பார்த்தோம்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தை சற்று இலகுவாகவே தொடர்கிறது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட நகர்வுகளையே சந்தையில் மீண்டும் பார்க்க முடிந்தது. இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டன. குறிப்பாக, பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐ.டி போன்ற குறியீடுகள் தங்கள் நகர்வுகளில் நிலையாக இருந்தபோதும், நிஃப்டியில் இறக்கம் இருந்தது. இந்த இறக்கம், குறியீட்டிலிருந்த  பெரும்பாலான நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட இறக்கத்தினால் உருவானது. எனவே, பங்குகள் விற்பனை அதிகமாகவே நடந்தன.

தனியார் வங்கிகள் தடுமாறியபோதும் பொதுத் துறை வங்கிகள், தங்கள் நிலைகளில் உறுதியாக இருந்து, வங்கிக் குறியீட்டுக்குக் கோட்டையாக இருந்தன. ஐ.டி துறையில் சில முன்னணிப் பெரு நிறுவனப் பங்குகள் நிலைத்தன்மையுடன் இருந்ததால், மிட் கேப் ஐ.டி பங்குகளுக்கு டிமாண்ட் அதிகரித்தன.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையில் இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டதால், பாசிட்டிவ் சென்டிமென்ட் நிலைகுலைந்தது. மேலும், அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால், அந்த சென்டிமென்ட்  தாக்கம் சந்தையில் அதிகமாக இருந்தது. இதனால் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 10200 நிலைக்கு அருகில், 38 சதவிகித ரிட்ரேஸ்மென்ட் நிலைக்கு இறங்கியது. இந்த நிலை, 50 நாள் நகர்வின் சராசரியாக இருந்து, பல வர்த்தக நாள்களுக்கு சப்போர்ட்டாக இருந்தது.

இந்த நிலையில், அதிகமான பொசிஷன்கள் சந்தையில் எடுக்கப்பட்ட தாலும், வெள்ளிக்கிழமையன்று மூடீஸ் நிறுவனம் நம் பொருளாதார நிலையைத் தரம் உயர்த்தியதால் சந்தைக் குறியீடுகள் மீண்டும் உச்சத்தை அடைந்து, கடந்த வாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் சரிசெய்தன. எனவே, வரும் வாரத்துக்கான சென்டிமென்ட் பாசிட்டிவாகவே இருக்கிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



இந்த பாசிட்டிவ் செய்தி, நிஃப்டிக்கு 10100 என்ற நிலைக்கு அருகில் அடித்தளமாக உருவாகலாம். எனவே, இந்த நிலையை நிஃப்டியின் புதிய சப்போர்ட் நிலையாக எடுத்துக்கொள்ளலாம். தற்போதுள்ள அல்லது புதிய லாங் பொசிஷன்களுக்கு ஸ்டாப்லாஸ் நிலையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பேங்க் நிஃப்டி நன்றாகவே ஏற்றம் கண்டது. கிட்டதட்ட புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதோடு, முடிவில் தன்னுடைய நகர்வுகளில் வலுவான போக்கையும் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இரண்டு குறியீடுகளும் வரும் வாரத்தில் சிறப்பாகச் செயலாற்றும் என்று எதிர்பார்க்கலாம். 

வாரத்தின் இடையில் ஏற்படும் இறக்கங்களை முதலீடு செய்யும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத இறுதிக்குமுன்  குறியீடுகள் புதிய உச்சங்களை அடைய வாய்ப்புண்டு.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ்.ஆர்.எஃப் (SRF)

தற்போதைய விலை: ரூ.1,773.05

வாங்கலாம்

ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவுகளில் உள்ள ரசாயன நிறுவனங்கள் நல்ல ஏற்றத்தை நோக்கி நகர்கையில்,  லார்ஜ் கேப் பிரிவில் உள்ள நிறுவனங்கள் அமைதியாக இருக்கின்றன. எஸ்.ஆர்.எஃப்., கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கமில்லாத நிலையிலேயே தொடர்ந்துவந்தது. ஆனால், கடந்த வாரத்தின் இறுதியில் இந்தப் பங்கின் விலை நகர்வுகள், முந்தைய வரம்புகளின் உச்சங்களைக் கடந்து பிரேக்அவுட் ஆகியிருக்கின்றன. கடந்த வாரத்தில் இந்தப் பங்கில் தெரிந்த நல்ல மொமென்டம், வரும் வாரங்களில் பிரேக்அவுட் ஆகி, புதிய உச்சங்களை அடையும் என்பதைக் காட்டுகிறது. எனவே, தற்போதைய விலையில் லாங்க் பொசிஷனுடன் வாங்கலாம். ரூ.1,825 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.1725-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பவர் மெக் புராஜெக்ட்ஸ் (POWERMECH)

தற்போதைய விலை: ரூ.742.10

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கு, பட்டியலான பிறகு இறக்கம் கண்டது. கடந்த பல மாதங் களுக்கும் மேலாக இறக்கத்தையே சந்தித்து வந்தது. இதனால் இந்தப் பங்கின் விலை மார்ச் 2017-ல் ரூ.390-க்கு இறங்கியது. அதன்பிறகு இந்தப் பங்கில் வலுவான ஏற்றத்தைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், இந்த ஏற்றம் இடையில் தடைபட்டு, ஏற்ற இறக்கமில்லாத நிலையில் சில காலம் நீடித்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் மீண்டும் இந்தப் பங்கில் காளையின் ஆதிக்கத்தைப் பார்க்க முடிகிறது.  இந்தப் பங்கில் புதிய உச்சங்களை அடைவதற்கான ஏற்றத்துக்குரிய மொமென்டம் உருவாகி யிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் ரூ.840 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.710-க்குக்கீழ்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதானி என்டர்பிரைசஸ் (ADANIENT)

தற்போதைய விலை: ரூ.156.60

வாங்கலாம்


நீண்ட காலமாக பக்கவாட்டிலேயே நகர்ந்துவந்த இந்தப் பங்கில், தற்போது மீண்டும் ஆர்வம் திரும்பியுள்ளதைச் சமீபத்திய நகர்வுகளைப் பார்க்கும்போது தெரிகிறது. கடந்த வாரத்தின் இறுதியில் இந்தப் பங்கு, தனது முந்தைய வரம்பு களிலிருந்து பிரேக்அவுட் ஆகியிருப்பதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், வரும் வாரங்களில் மேலும் ஏற்றமடைந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது. இதன் உடனடி டார்கெட் நிலை ரூ.165-170 என்ற வரம்பில் இருக்கிறது. ஆனால், இதன் வார சார்ட் பேட்டர்னைப் பார்த்தால், இதற்கு மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.150-க்குக்கீழ்.   

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.