நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், ‘சில வரம்புக்குள் ஏற்ற இறக்கத்துடன் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இருக்கும்’ என்கிற நம்முடைய எதிர்பார்ப்பு சரியாகவே இருந்தது. ஆரம்பத்தில் சந்தை சற்றுப் பலவீனத்துடன் வர்த்தகமாகியதால், நிஃப்டியில் இறக்கம் ஏற்பட்டு 10100 என்ற நிலைக்குச் சென்றது. ஆனால், 10000 என்ற நிலையில் நிஃப்டிக்கான சப்போர்ட் வலுவாக இருந்ததால், (இதைக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்) அந்த நிலையைத் தாண்டி இறங்கவில்லை.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சப்போர்ட் நிலையை நெருங்குவது ஏற்றத்துக்கான அறிகுறி இல்லையென்றாலும் கூட, நிஃப்டி கடந்த வார இறுதியில் மீண்டும் சற்று ஏற்றமடைந்தது. இந்த அறிகுறி, சந்தை மீண்டும் காளையின் ஆதிக்கத்துக்குச் செல்லும் என்பதை உறுதி செய்தது. சந்தை மீண்டு வருவதற்குச் சாதகமான எந்தப் பாசிட்டிவ் செய்தியும் இல்லாத நிலையிலும் சந்தை மீண்டு எழுந்தது. எனவே, சந்தைக்கு எதிரான நிலைப்பாட்டில் யோசிக்காமல் சந்தையின் போக்கில் முடிவுகளை எடுப்பது நல்லது.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!பேங்க் நிஃப்டி, நிஃப்டியின் வேகத்துக்கு நிகராகச் செயல்படவில்லை. பெரும்பாலும், எப்போதும் ஒன்றாகவே நகரும். இவை இரண்டுக்குமிடையே முரண்பாடுகள் தெரிந்தன. சந்தைத் தனக்கான போக்கில் நிலையாகத் தன்னைத் தக்கவைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதேசமயம் நிஃப்டியின் ஏற்றத்துக்கு வங்கிகளும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த வாரத்தில் சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கித் திரும்பியதற்குக் காரணமாக எஃப்.எம்.சி.ஜி பங்குகள் இருந்தன. இவற்றின் ஏற்றம் நிஃப்டி குறியீட்டில் ஏற்றத்தைக் கொண்டுவந்தது.

கடந்த வாரத்தில் நடந்த குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், நிஃப்டியில் லோயர் டாப், லோயர் பாட்டம் பேட்டர்ன் உருவாகியிருப்பதைச் சந்தையின் போக்கில் திருப்புமுனை ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கலாமா என்பதுதான். அது உண்மை எனில், டவ் தியரி தரும் நம்பிக்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வெவ்வேறு குறியீடுகள் அவற்றின் போக்கை ஒன்றையொன்று உறுதி செய்வதாக இருக்கும் என்று  சிலர் வாதிடுவார்கள். ஆனால், உண்மையில் பேங்க் நிஃப்டி அல்லது மிட்கேப் குறியீடு ஏதேனும் ஒன்று, ஒரே மாதிரியான பேட்டர்ன்களைக் கொண்டிருக்கா விட்டால் சந்தையின் போக்கில் ஏற்படுத்தும் மாற்றத்துக்கு எதிராகச் செயல்படலாம். இவை அனைத்துமே நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 10250 என்ற நிலையைத் தாண்டி வர்த்தகமாவதோடு, வரும் வாரத்தில் சந்தை, தன்னை அந்த நிலையில் தக்கவைத்துக்கொண்டால் மட்டுமே உறுதியாகும்.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எனவே, வரும் வாரத்துக்கான போக்கை அதுதான் தீர்மானிக்க இருக்கிறது. முதலில், நிஃப்டியில் ஏற்றத்துக்கான போக்கு நிலையாக இருக்க வேண்டும். இரண்டாவது, தனியார் வங்கிகளின் உதவியுடன் பேங்க் நிஃப்டியில் சில பாசிட்டிவான நகர்வுகள் இருக்க வேண்டும். மூன்றாவது, பிற துறைகள் குறிப்பாக எஃப்.எம்.சி.ஜி, ஆயில் போன்ற துறைகளின் போக்கு சிறப்பாக இருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்குமானால், நிஃப்டியின் முந்தைய உச்சமான 10400 என்ற நிலையை அடையவும், அதைத் தாண்டி வர்த்தகமாகவும் வாய்ப்புள்ளது. 

குஜராத் தேர்தல் நெருங்குவதால், சந்தை மேலும் ஒரு வரம்புக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. எனவே, வரும் வாரத்திலும் 10100-10300 என்ற வரம்புகளில் சந்தை வர்த்தகமாகலாம். இந்த நிலையைத் தாண்டி நகர, சில பாசிட்டிவான செய்திகள் அவசியமாக உள்ளன. இதுவரையிலும் சந்தை,கரடியின் சவால்களை எதிர்கொண்டிருக்கும் காளையின் போக்கில்தான் தொடர்கிறது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் லிட் (RKFORGE)

தற்போதைய விலை: ரூ.802.60

வாங்கலாம்

அமெரிக்காவிலிருந்து கிளாஸ் 8 ட்ரக் ஆர்டர்கள் அதிகரித்திருக்கும் செய்தி, பாரத் ஃபோர்ஜ் மற்றும் ஆர்கே ஃபோர்ஜ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் பாசிட்டிவாக உள்ளது. ஆர்கே ஃபோர்ஜ் நிறுவனப் பங்கு, கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்து வந்தது. தற்போது இந்தச் செய்தியால், இந்தப் பங்கில் வலுவான ஏற்றத்தின் போக்கைக் கடந்த வார இறுதியில் பார்க்க முடிந்தது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, அடுத்து வரும் சில மாதங்களுக்கு இந்தப் பங்கில் ஏற்றத்தின் போக்குத் தொடரும் என்று நம்பலாம். இதன் சார்ட்டில் நல்ல சப்போர்ட் நிலையையும் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். சில வாரங்களில் ரூ. 850 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.785-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிரி இண்டஸ்ட்ரீஸ் (KIRIINDUS)

தற்போதைய விலை: ரூ.560.10

வாங்கலாம்


இதன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லாததால், இந்தப் பங்கில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், இந்தப் பங்கில் சில காலம் இறக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. ஆனால், ஒரு மாத கால ஏற்ற இறக்கமில்லாத நிலைக்குப் பிறகு, இந்தப் பங்கில் மீண்டும் ஏற்றத்தின் போக்கிலான நகர்வுகளைப் பார்க்க முடிகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகமும், காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லாததற்குக் காரணத்தைக் கூறி விளக்கமளித்ததோடு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தது. இந்தப் பங்கில் தற்போது உருவாகியுள்ள மொமென்டம், இதன் நகர்வுகளில் மீள் எழுச்சியை உறுதி செய்கிறது. எனவே, இந்தப் பங்கு குறுகிய காலத்தில் ரூ.600 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.550-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் (STRTECH)

தற்போதைய விலை: ரூ.292.45

வாங்கலாம்


 இந்தப் பங்கை முன்பே சில முறை பரிந்துரைச் செய்திருக்கிறோம். இந்தப் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது தொடர்ந்து நன்றாகவே செயலாற்றி வந்திருக்கிறது. தொடர்ந்து காளையின் போக்கில் இருந்து வந்த இந்தப் பங்கு, கடந்த சில வாரங்களாக ஒரு வரம்புக்குள் ஏற்ற இறக்கமில்லாத நிலைக்குச் சென்றது. கடந்த வார இறுதியில் அந்த நிலையிலிருந்து மீண்டும் ஏற்றமடைய இந்தப் பங்குத் தயாராகியிருப்பதாக அறிகுறி தெரிகிறது. இது ரூ.290 என்ற நிலையைத் தாண்டி நகரும்போது உறுதியாக ஏற்றமடையும் என்று நம்பலாம். அப்படி ரூ.290-ல் பிரேக் அவுட் ஆகி ஏறுகிறது எனில் ரூ.325 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ்  ரூ.280-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.