
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964
இண்டெக்ஸ்
கடந்த வாரத்தில் சந்தை அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்ததால், தற்போதைய சந்தையின் போக்கு குறித்த ஒவ்வொருவர் பார்வையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஆனாலும், இறக்கம் என்பது நிஃப்டி 10000 புள்ளிகளுக்குக் கீழ் போகாமல் இருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்த சப்போர்ட்டாகத் தொடர்கிறது. மேலும், இறக்கங்களிலிருந்து தொடர்ந்து மீண்டு ஏற்றமடையவும் செய்வதால், பெரிய அளவில் சந்தையைப் பாதிக்கும் நிகழ்வு ஏதும் நடக்காதபட்சத்தில் இந்த வருடம் சந்தை, 10000 புள்ளிகளில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற ஊக்கத்தைச் சந்தை செயற்பாட்டாளர்களுக்குக் கொடுப்பதாக இருக்கிறது. ஆண்டின் இறுதியில் இருப்பதால், வரும் எக்ஸ்பைரி வாரத்தில் சந்தை சரியும் அளவுக்கான நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இல்லை.

கடந்த வார நகர்வுகள், வரும் வாரத்துக்கான போக்குக்குக் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்து வதாகவே இருக்கிறது. குஜராத் தேர்தல் முடிவுகள் மீதிருந்த அதீத எதிர்பார்ப்பு, குஜராத்தில் பா.ஜ.க தன்னைத் தக்கவைத்துக் கொண்டதால் சந்தை பாசிட்டிவ் போக்கில் வர்த்தகமானது. அதேசமயம், இந்தக் காரணத்தினால் திங்களன்று சந்தை அடைந்த ஏற்றம் நீடிக்கவில்லை. நிஃப்டி, தனது தற்போதைய ரெசிஸ்டன்ஸ் நிலையைத் தாண்டி நகர்ந்தால் மட்டுமே சந்தையின் போக்கு மேலும் வளர்ச்சியை நோக்கியிருக்கும்.

நிஃப்டி, தன் உச்ச நிலைகளில் வீரியம் குறைந்து அமைதியாகவே இருக்கிறது. இதனால், நிஃப்டி இந்த வருட இறுதியை இளைப்பாறும் நிலையில்தான் நிறைவு செய்யும். நிஃப்டியின் வாழ்நாள் அதிக உச்சமாக இருக்கும் 10530 புள்ளி என்ற நிலையை அடைவது நிஃப்டிக்குக் கடினமான ஒன்றாகவே தொடர்கிறது. மினி ஃபிட்ச் ஃபோர்க்கில் தேர்தலினால் உருவான ஏற்ற இறக்கம்தான் தெரிகிறது. சந்தையின் போக்கில் காளையின் ஆதிக்கம் தொடர வேண்டுமெனில், அதன் மொமென்டத்தை அதிகரிக்கத் தேவையான நிகழ்வுகள் அவசியமானதாக உள்ளன.

நிஃப்டியானது இங்கே குறிப்பிட்டுள்ள உடனடி ரெசிஸ்டன்ஸைத் தாண்டி நகர வேண்டியிருக்கிறது. இது நடக்காத நிலையில் நீண்ட வார இறுதி விடுமுறை வருவதால், லாப நோக்கிலான விற்பனையைப் பார்க்க முடிகிறது. அதனால், முதல் இறக்கமானது 10400 புள்ளிகள் வரை இருக்கலாம். அதிகபட்சமாக 10250-10280 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது.
பேங்க் நிஃப்டியிலும் கடந்த வாரத்தில் வலுவான ஏற்றங்களைப் பார்க்க முடிந்தது. இது, அதன் நீண்டகால ஏற்றத்தின் போக்குக்கான சப்போர்ட் நிலையை அடைந்திருக்கிறது. பேங்க் நிஃப்டியில் ஏற்பட்ட அடுத்தடுத்த ஏற்ற நகர்வுகள் குறியீட்டை அதன் சப்போர்ட் நிலைகளுக்கு மேல் தக்கவைத்துக்கொள்ள உதவியாக இருந்தன. உச்ச நிலைகளை அடைவதற்கான ஆர்வம் இல்லாத நிலையிலும், தற்போது பேங்க் நிஃப்டியானது நிஃப்டியைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது.
வரும் வாரத்தில் சந்தை செயல்பாடு குறைவாக இருக்கும் என்பதோடு எக்ஸ்பைரியும் சேர்ந்து இருப்பதால், சந்தை சற்று ஏற்ற இறக்கத்தில்தான் வர்த்தகமாகும். மேலும், குறிப்பிட்ட பங்குகளின் நகர்வுகளைப் பொறுத்தே சந்தையின் செயல்பாடு இருக்கும் போக்கு தொடர்வதால், பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப் பார்த்து முடிவு களை எடுக்கவும். வர்த்தகத்தைக் கவனமாகச் செய்து, ஏற்றத்தில் லாபத்தை எடுக்கலாம்.

எஸ்கார்ட்ஸ் (ESCORTS)
தற்போதைய விலை: ரூ.741.25
வாங்கலாம்
விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தனது திறனை முழுமையாகப் பயன்படுத்திப் போட்டி நிறுவனங்களைவிட லாபத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனப் பங்கின் சார்ட்டிலும் இந்த வருடம் அடைந்த ஏற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்தப் பங்கில் கடந்த மாதம் நெகட்டிவ் போக்கு உண்டானபோது லாப நோக்கிலான விற்பனை அதிகமானதால் அதன் சப்போர்ட் நிலை வரை இறங்கியது. கடந்த இரண்டு வாரமாக இந்தப் பங்கு மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் வலுவான ஏற்றத்தையும் பதிவு செய்திருக்கிறது. ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸும் இந்தப் பங்கில் புதிதாக மொமென்டம் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. எனவே, இந்தப் பங்கு மீண்டும் ஏற்றத்தின் போக்கில் நகரும்போது ரூ.780 வரை உயர வாய்ப்புள்ளது. இதன் சார்ட்டில் வால்யூம்கள் நன்றாக இருக்கும்போது ரூ.743க்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகும் போதும், 725 வரை இறக்கத்திலும் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.713-ல் வைத்துக்கொள்ளவும்.

கன்சாய் நெரோலக் பெயின்ட்ஸ் (KANSAINER)
தற்போதைய விலை: ரூ.561.60
வாங்கலாம்
இந்த நிறுவனம், தனது பெயின்டிங் பிசினஸ் செயல்பாடுகளில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து பிசினஸை மேம்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்களால் இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து வந்தது. ஆனால், கடந்த செப்டம்பரில் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதன் பிறகு இந்தப் பங்கில் ஒரு வரம்புக்குள் வர்த்தகம் நடந்து வந்தது. தற்போது மீண்டும் இந்தப் பங்கின் போக்கில் ஏற்றத்தைப் பார்க்க முடிகிறது. இதன் சார்ட்டில் சராசரி நகர்வுகள் சிறப்பாக இருக்கின்றன. மேலும், அதன் சமீபத்திய உச்சங்களைத் தாண்டி நகரவும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் அதன் நகர்வுகள் 525-530 என்ற நிலைக்குச் சிரமமில்லாமல் நகர்ந்தது. லாப நோக்கிலான விற்பனையும் இந்தப் பங்கில் நிலவும் காளையின் போக்கை எதுவும் செய்யவில்லை. எனவே, இந்தப் பங்கைத் தற்போதைய விலையிலும் 535-540 வரை இறக்கத் திலும் வாங்கலாம். ஏற்றத்தில் 560-லும் இறக்கத்தில் 537-540 என்ற நிலையிலும் லாங் பொசிஷன்களை எடுக்கலாம். ரூ.601 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.524-ல் வைத்துக் கொள்ளவும்.

டிவி டுடே நெட்வொர்க் (TVTODAY)
தற்போதைய விலை: ரூ.416.35
வாங்கலாம்
இதன் விலை நகர்வுகள் வலுவாக இருக்கின்றன. இதன் தினசரி சார்ட் பேட்டர்ன் கேண்டில்களில் இருந்து வந்த ஏற்ற இறக்கமில்லாத நிலை, தற்போது இந்தப் பங்கில் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால் முடிவுக்கு வந்து புதிய உச்சங்களுக்கு நகர இருக்கிறது; கடந்த சில நாள்களாக இந்தப் பங்கில் காணப்படும் மீள் ஏற்றம், ஏற்றத்தின் போக்கை உறுதி செய்கிறது. இதன் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக் கொண்டு, வரும் வாரத்தில் ஏற்றமடைவதற்கான வாய்ப்பு களையும் கொண்டிருக்கிறது. இந்தப் பங்கை வாங்கும் ஆர்வம் தொடர்ந்து இருப்பது, கடந்த சில நாள்களாக நிலவும் இந்தப் பங்கின் விலையில் தெரிகிறது. இந்தப் பங்கின் விலை நகர்வுகள் வலுவான மொமென்டத்தில் வர்த்தகமாகலாம் என்பதால் தற்போதைய விலையிலும், இறக்கத்தில் 399 வரையிலும் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.438 வரை உயர வாய்ப்புள்ளது.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.