நடப்பு
தொடர்கள்
Published:Updated:

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

புதிய   வருடத்தில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறோம். இந்த வருடமும் பங்குச் சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சிக்கான பாசிட்டிவ் காரணிகளைக் கொண்டி ருக்கின்றன. சந்தையின் வளர்ச்சியில் பங்கெடுத்து, இந்த ஆண்டும் நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் விருப்பம். எனவே, நாணயம் விகடன் வாசகர்களுக்காக 2018-ம் ஆண்டில் நல்ல வருமானம் தரக் கூடிய ஐந்து பங்குகளைப் பரிந்துரைக்குமாறு பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் பரிந்துரைத்த பங்குகள் இங்கே...

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!
டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

துறை: சிறப்பு சில்லறை வர்த்தகத்துறை

பங்கு: வக்ராங்கி (Vakrangee)

ந்த நிறுவனம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியாவின் கடைக்கோடி நுகர்வோரையும் சென்றடையும் வகையில், மிகப்பெரிய சில்லறை வர்த்தக நெட்வொர்க்கை உருவாக்குவதில் மிகவும் ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் நிதித்துறை மற்றும் சமூக மாற்றங்களுடன், டிஜிட்டல் இந்தியா, திறன் மேம்பாட்டு அம்சங்கள், வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் போன்றவற்றால் அனைவருக்கும் அடிப்படைப் பொருள்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனைத் தனக்கான வாய்ப்பாக வக்ராங்கி நிறுவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது.   

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

ஃபண்டமென்டல் அடிப்படையில் இந்தப் பங்கைப் பார்க்கும்போது, மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்த நிறுவனத்தின் சந்தை செயல்பாடு வலுவாக இருக்கிறது. மேலும், காலாண்டு நிதிநிலை அடிப்படையில் இதன் நிகர லாப வளர்ச்சி 13 சதவிகிதத்தில் ஆரோக்கியமாக இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.220-லிருந்து சமீபத்திய 1:1 போனஸ் பங்கு அறிவிப்புக்குமுன் ரூ.740-க்கு உயர்ந்திருக்கிறது. போனஸ் பங்கு வழங்கப்பட்டபிறகு ரூ.385-லிருந்து ஏற்றமடைந்து ரூ.410-420 என்ற வரம்பில் இருக்கிறது.

இந்தப் பங்கு, ஏற்றத்துக்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால், தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டு அடிப்படையில் இந்தப் பங்கின் விலை 15%  - 25% வரை ஏற்றமடைய வாய்ப்புள்ளது.   

துறை: ஆட்டோமொபைல் பாகங்கள் 

பங்கு: எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

டந்த 60 ஆண்டுகளாக எக்ஸைட் நிறுவனம் இந்தியாவின் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. அதற்கிருந்த நற்பெயரை நன்றாகப் பயன்படுத்தி வளர்ச்சியும் அடைந்திருக்கிறது.

இந்த நிறுவனம் 2.5-லிருந்து 20600 ஆம்பியர் ஹவர் திறன் வரையிலான தரமான லெட் ஆசிட் ஸ்டோரேஜ் பேட்டரிகளை வடிவமைப்பது, உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது எனச் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டோமோட்டிவ், பவர், டெலிகாம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரீஸ், ரயில்வே, சுரங்கம் மற்றும் பாதுகாப்புத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தனது பிசினஸை விரிவுபடுத்தியிருக்கிறது. 

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியில் ஆட்டோமொபைல் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடையும் என்பதால், பேட்டரிகள், டயர்கள் மற்றும் உபகரணங்கள் துறையும் நல்ல வளர்ச்சியை அடையும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. எனவே, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மேலும் ஏற்றமடைவதற்கு வாய்ப்புள்ளது.

இந்தப் பங்கு, அதன் சமீபத்திய 52 வார உச்ச நிலையான ரூ.249 என்ற நிலையைத் தாண்டி வர்த்தகமாக வாய்ப்புள்ளது. தற்போது இந்தப் பங்கில் உள்ள ஏற்றத்தின் போக்குத் தொடர்ந்து, அதன் சமீபத்திய ரெசிஸ்டன்ஸ் நிலையான       ரூ.224-232 நிலையைத் தாண்டி நகருமானால் புதிய வர்த்தக வரம்புக்கு, அடுத்த ஒரு வருடத்தில் நகர வாய்ப்புள்ளது. ஓராண்டு அடிப்படையில் இந்தப் பங்கு  ரூ.282-294 வரை உயரலாம்.

துறை: இரும்பு மற்றும் ஸ்டீல்

பங்கு: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்

ந்த நிறுவனம், ஸ்டீல் துறையில் முன்னிலையில் இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தை விற்பனை வருவாயில் முந்தியிருக் கிறது. இந்தப் பங்கின் தற்போதைய விலை ரூ.264. அதன் சமீபத்திய 52 வார உச்ச நிலையான ரூ.277-க்கு அருகில் இருக்கிறது. மெட்டல் துறை பங்குகள் ஏற்ற இறக்கத்தில் இருந்த போதும், கடந்த ஒரு வருடத்தில் சிறப்பான ஏற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. மெட்டல் துறையில் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பொது முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

செப்டம்பர் 2017-க்குப் பிறகிலிருந்து தற்போது வரை இந்தப் பங்கு ரூ.229-275 என்ற வரம்பில் வர்த்தகமாகி வருகிறது.

தற்போது பொருளாதார வளர்ச்சிமீது இருக்கும் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்தப் பங்கு, அதன் தற்போதைய வரம்பிலிருந்து பிரேக் அவுட் ஆகி, ரூ.300/ ரூ.325/ ரூ.348 வரை ஒரு வருட காலத்தில் உயரும் வாய்ப்பு உள்ளது. 

துறை: ஏர்லைன்

பங்கு: ஸ்பைஸ்ஜெட்

ந்தியாவில் உள்நாட்டு ஏவியேஷன் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. அரசின் சிறு மெட்ரோ நகரங்களை இணைக்கும் ‘உடான்’ திட்டம் மூலமும் சிறு விமான நிலையங்கள் நாடு முழுவதும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியி ருப்பது, எதிர்காலத்தில் ஏவியேஷன் துறை மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

ஏவியேஷன் துறையில்,ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக நல்ல நிதி நிலை முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து 31 மாதங்களாகத் தனது விமான சேவையில் 90 சதவிகித ஆக்குபென்சியுடன் வளர்ந்து வருகிறது. எனவே, நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கு வளர்ச்சி யடைவதற்கான வாய்ப்புகளுடன் இருக்கிறது. அடுத்த 2-3 வருடங்களில் இந்திய ஏவியேஷன் சந்தை, உலகின் டாப் 3 இடங்களுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நிறுவனப் பங்குக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இந்தப் பங்கு சமீபத்தில் ரூ.130-150 என்ற வரம்பில் வர்த்தகமாகி, அதன் 52 வார உச்சத்துக்கு மிக அருகில் சென்றது. ரூ.150 என்ற நிலையைத் தாண்டி நகரும்போது ரூ.170-185 வரம்பு வரை உயர்ந்து, அடுத்த ஒரு வருடத்தில் ரூ.200-210 வரை அதிகபட்சமாக உயர வாய்ப்புள்ளது. 

- ஜெ.சரவணன்

டார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

துறை: வங்கி
பங்கு: யெஸ் பேங்க்

ஹெச்
.டி.எஃப்.சி.யுடன் போட்டிப்போடும் அளவுக்கு இல்லையென் றாலும் யெஸ் பேங்க், நிதி ஆண்டு அடிப்படையில் சிறப்பான நிதிநிலை முடிவுகளைத் தந்திருக் கிறது. மற்ற வங்கிகளோடு ஒப்பிட்டால்,  நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர் களின் அடிப்படையில், இதன் நிகர லாப வளர்ச்சி 20.27 சதவிகிதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, இந்தப் பங்கு அதன் 52 வாரக் குறைந்தபட்ச விலையான ரூ.295-லிருந்து மீண்டு ஏற்றமடையத் தொடங்கி இருக்கிறது. தற்போது  ரூ.312 என்ற நிலையில்  நீண்டகால வளர்ச்சிக்கான வாய்ப்புடன் நகர்கிறது.  அடுத்த ஓராண்டில் ரூ.360-430 என்ற வரம்பில்  வர்த்தகமாகலாம்.