நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண்,
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை நன்றாக ஏற்றம் கண்டதன் விளைவு, நிஃப்டி குறியீடானது அதன் ஆல்டைம் உச்சத்தை அடைந்துள்ளது. 

கடந்த வாரம் வர்த்தகம் நல்ல சென்டி மென்டில், நல்ல வரம்பில் நடந்திருக்கிறது. சந்தையின் நகர்வு வரம்பு பெரியதாகவும் பாசிட்டிவாகவும் இருந்தது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் மற்ற முன்னணி குறியீடுகளைக் காட்டிலும் நன்றாகவே ஏற்றம் கண்டன. ஆக மொத்தத்தில் சந்தை, தனது ஏற்றத்தின் போக்கில் நிலையாக வர்த்தகமானது.

 சிறு முதலீட்டாளர்களின் வர்த்தகம் அதிகமாகியிருப்பது குறைந்த விலைப் பங்குகள், விலை அளவிலும் வால்யூம் அளவிலும் உயர்ந்திருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

வரும் வாரத்துக்கான போக்கைப் பார்க்கும்போது, சந்தை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்கான வாய்ப்புகளையே கொண்டிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நம் சந்தை மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு பாசிட்டிவாகவே தொடர்கிறது. மேலும், 2018-ல் எப்படி இருக்கும் என்பது குறித்து தரகு நிறுவனங்கள் அனைத்தும் பாசிட்டிவான அறிக்கையையே வெளியிட்டுள்ளன.  

வங்கிப் பங்குகள் மீண்டும் ஏற்றமடைய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, தனியார் வங்கிப் பங்குகள். நிஃப்டி மேலும் ஏற்றமடைந்து வர்த்தக மாவதற்கு இவற்றின் நகர்வுகள் மிகவும் அவசியம்.

பொதுத்துறை வங்கிகளுக்குப் பாசிட்டிவான செய்திகள் வந்திருப்ப தால், அவை தனது வர்த்தகத்தில் ஏற்றத்தின் போக்கைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அவை மேலும் ஏற்றமடைய வாய்ப்புள்ளன. அதேசமயம், சற்று அழுத்தத்தில் இருந்துவரும் ஐடி துறை, நிஃப்டியின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நிஃப்டி நன்றாக ஏற்றமடைய வேண்டுமெனில், ஐடி துறை பங்குகளில் வலுவான ஏற்றம் இருக்க வேண்டியது அவசியம்.

பார்மா துறை பங்குகளுக்கான தேவையில் மீண்டும் முன்னேற்றம் தெரிகிறது. எனவே, பார்மா துறை சந்தையின் போக்கில் பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் வாரத்திலும் சந்தை தனது ஏற்றத்தின் போக்கில், தன்னைத் தக்க வைத்துக் கொண்டு ஏற்றமடையும் என்பதால், விரைவிலேயே 11000 என்ற நிலையை நிஃப்டி அடைய வாய்ப்புள்ளது.

வாரத்தின் இடையில் 10300-10400 என்ற வரம்புகளில் இறக்கமடைந்தால், அந்த இறக்கங்களை, வாங்கும் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிவிஆர் (PVR)
தற்போதைய விலை: ரூ.1,419
வாங்கலாம்


பிவிஆர் பங்கின் தினசரி சார்ட் பேட்டர்னைப் பார்க்கையில், சில வர்த்தக தினங்களுக்குமுன் இதன் விலை, இறக்கத்தின் போக்கில் இருந்த ரெசிஸ்டன்ஸ் நிலையை உடைத்து, பின்னர் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் வர்த்தகமானது. இப்போது இந்தப் பங்கின் விலை, அதன் ரெசிஸ்டன்ஸ் நிலையை மீண்டும் அடைந்துள்ளது. 

அதேசமயம், உடைத்த ரெசிஸ்டன்ஸ் நிலை அதன் சப்போர்ட்டாக மாறியிருப்பது சார்ட்டில் தெரிகிறது. மேலும், விலை நகர்வில் இருக்கும் ஏற்றத்துக்கு அதன் மொமென்டத்தில் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 60-க்கு மேல் முன்னேற்றம் அடைந்து சப்போர்ட்டாக இருக்கிறது.

எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,475-க்கு ஏற்றமடைய வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.1,400-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (L&TFH)
தற்போதைய விலை: ரூ.175.15
வாங்கலாம்


எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு அக்டோபர் 2017-ல் ரூ.213.35 என்ற நிலையில் உச்சத்தை அடைந்தபின் 25% வரை இறங்கியது.  ரூ.162.7-165.31 என்ற வரம்பை ஆதரவாக எடுத்துக்கொண்டு மேல்நோக்கி ஏற்றமடைய ஆரம்பித்தது.

இந்த சப்போர்ட் வரம்பில், ஃபிப் கன்ஃப்ளூயன்ஸ் ஜோனில் ட்ரெண்ட் லைன் சப்போர்ட் நிலையும் உள்ளது. இதன் வார சார்ட்டில் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த்  இண்டெக்ஸ் (ஆர்எஸ்ஐ) மிக நன்றாகவே உயர்ந்து, 80-க்கு மேல் உள்ளது.

ஃபிப் கன்ஃப்ளூயன்ஸ் ஜோன் 40-க்கு மேல் உயர்ந்து, 46-ல் டபுள் பாட்டம் பேட்டர்னை உருவாக்கியிருக்கிறது. ஃபிப் மற்றும் ஆர்.எஸ்.ஐ ஆகிய இரண்டு இண்டிகேட்டர்களும், இந்தப் பங்கில் காளையின் போக்கு இருப்பதையே காட்டுகின்றன. எனவே, இந்தப் பங்கில் இறக்கம் ஏற்பட்டால், வாங்கும் வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளுங்கள். ரூ. 208 வரை உயர வாய்ப்புள்ளது.

கோல்கேட் பால்மோலிவ் (COLPAL)
தற்போதைய விலை: ரூ.1,100.70
வாங்கலாம்


எஃப்.எம்.சி.ஜி துறையில் நிலையாகவும், சந்தையில் இறக்கம் குறைவாகவும் வர்த்தகமாகும் பங்காக கோல்கேட் பால்மோலிவ் உள்ளது. சமீபத்தில் இந்தப் பங்கு, இச்சிமோக்கு க்ளவுட் ஜோனுக்குமேல் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இறுக்கமான வரம்பில், நீண்ட கேண்டிலாக ஏற்றமடைய விடாமல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையை உடைத்து ஏற்றமடையும் போது, இச்சிமோக்கு க்ளவுட் ஜோன் நிலை யிலிருந்து பிரேக் அவுட் ஆகி புதிய ஏற்றத்துக்குத் தயாராகும். இந்தப் பங்கின் இன்ட்ரா டே விலை நகர்வுகள் க்ளவுட் வரம்பில் நிலையாக இருப்பதோடு பிரேக் அவுட் ஆகவும் முயற்சிக்கிறது.

இதன் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் தினசரி காலவரம்பில் 60-க்கும் மேல் சப்போர்ட்-ஆக மாறி ஏற்றத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்தப் பங்கில் ஏற்றத்தின் போக்கு தொடர்ந்து இருக்கும் என்பதால், இந்தப் பங்கை வாங்கலாம்.   

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.