நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!

நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வாரத்தின் ஒரு நாள் நல்லதொரு இறக்கத்திலும், இரண்டு நாள்கள் ஏற்றத்திலும், இன்னொரு இரண்டு நாள்கள் கிட்டத்தட்ட சமநிலையிலும் முடிவடைந்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 28 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. புதிய உயரத்தைத் தொட்ட நிஃப்டி, மீண்டும் ஏறுமுகத்துக்கு மாறிவிட்டதைப்போன்ற தோற்றம் சந்தையில் தொடர்கிறது. பாசிட்டிவ் செய்திகளும் சென்டிமென்டுமே நிஃப்டியை மீண்டும் புல்லிஷாகத் தொடரச்செய்கிறது எனலாம்.

நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!

வரும் வாரத்தில், இன்ஃப்ளேஷன் டேட்டா வெளிவர இருக்கிறது.மேலும், காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பும் போக்கும் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் எனலாம். 10650 மற்றும் 10450-க்குள்ளேயே நிஃப்டி சிறிதுகாலம் சிக்கிக்கொள்ள வாய்ப்பி ருப்பதைப் போன்ற டெக்னிக்கல் சூழலே தற்போது நிலவுகிறது. எஃப் அண்டு ஓ ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டை வைத்துப் பார்த்தால் 10400, 10300, 10500, 10200, 10000 போன்ற புட் ஜனவரி மாத ஆப்ஷன்களிலேயே அதிக அளவிலான ஓப்பன் இன்ட்ரெஸ்ட் இருந்தது. அதற்கு அடுத்தபடியாகவே 10600 மற்றும் 10700 கால் ஆப்ஷன்களில்  அதிக அளவிலான ஓப்பன் இன்ட்ரெஸ்ட் இருந்தது. பெரிய அளவிலான டெக்னிக்கல் சூழல்கள் இல்லாததால் செய்தி களும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!

எனவே, செய்திகளின்மீது கவனம் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும். டெக்னிக்கலாக ஓரளவு புல்லிஷாகவே இருக்கின் றது என்றாலும், திடீர் திருப்பங்கள் வந்துவந்து போவதற்கான வாய்ப்பும் நிறையவே இருக்கிறது. எனவே, ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் வியாபாரத்தைத் தவிருங்கள்.வால்யூம் குறைந்தாலோ, ஏற்ற இறக்கம் அதிகரித்தாலோ வியாபாரத்தின் அளவைக்  கணிசமாகக் குறைத்துக்கொள்வதே நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

நிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்!

எஃப் & ஓ பகுதியைப் படிக்க:
http://bit.ly/2m18atU