
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964
இண்டெக்ஸ்
இந்திய பங்குச் சந்தை மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தைக் கண்டிருக்கிறது. சந்தை இந்த வேகத்தில் ஏற்றத்தின்போக்கில் தொடர்ந்து இருக்குமானால், நிஃப்டி அதன் இலக்கு நிலையான 11000 வரம்பை விரைவில் அடையும்.

கடந்த வாரத்தில் ஒரு சில வர்த்தக நாள்களில் பங்கு விற்பனையையும் சற்றுப் பார்க்க முடிந்தது. ஆனாலும், பங்கு விற்பனை பெரிய அளவில் இல்லை. காரணம், லாங் பொசிஷன்கள் அதிகமாக இருந்ததால், பங்கு விற்பனை குறைந்து சந்தை மீண்டும் அதன் ஏற்றப்போக்கில் தன்னைத் தக்க வைத்துக்கொண்டு, இருமடங்கு வேகத்தில் நகர்ந்தது.
பங்குச் சந்தைத் தன்னை எதுவும் பாதிக்காத படிக்குத் தன் போக்கில் வலுவாக இருக்கிறது. தற்போது சந்தையைப் பாதிக்கும் எந்தக் காரணி களும் தெரியவில்லை. கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில்கூட உச்ச நீதிமன்ற நீதிபதி களின் செய்தியாளர்கள் கூட்டம் சந்தையைப் பாதித்தது. அதுவும் இப்போது தடம்தெரியாமல் போய்விட்டது.

சர்வதேச சந்தைகளும் தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால், நம்முடைய சந்தையின் போக்கு வலுவாகவே தொடர்கிறது. முதலீடுகளும் குவிந்த படியே உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பாசிட்டிவான சென்டிமென்டுடன் தினசரி வர்த்தகத்தில் முதலீடுகளைக் குவித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் சந்தையின் ஏற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த துறைகள், ஐ.டி மற்றும் வங்கித் துறைதான். இந்த இரண்டு துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளும் நிஃப்டி-யில் பெரும்பான்மை பங்கு வகிப்பவை. எனவே, இந்த இரண்டு துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளும் சிறப்பாகச் செயல்படும்போது சந்தையின் போக்கு ஏற்றத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

தனியார் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்த்ததுபோல பாசிட்டிவாக இருப்ப தால், காளையின் போக்கைத் தக்கவைக்கப் போதுமானதாக இருக்கின்றன. வங்கிகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்திருப்பதாக ஒரு செய்தி பரவுகிறது. ஆனால், உண்மையில் அது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால், அந்த வதந்தியும் வங்கிப் பங்குகளின் ஏற்றத்துக்குக் காரணமாகியிருக்கிறது. தற்போது பேங்க் நிஃப்டி 27000 புள்ளிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ந்து வெளியாகும் நேரம் இது. பெரும்பாலும் இதுவரை முடிவுகள் பாசிட்டிவாகவே வந்துகொண்டிருக் கின்றன. சந்தை பாசிட்டிவாகவே தொடருமானால், ஏற்றம் மேலும் தொடரவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், தற்போது முதலீட்டாளர்களைச் சந்தையில் தக்கவைத்திருக்கும் காரணியாக நிறுவனங்களின் முடிவுகள் இல்லை என்பதுதான்.
சந்தைத் தொடர்ந்து காளையின் போக்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வாரத்தின் இடையில் இறக்கங்களை வாங்குவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விகாஸ் எகோடெக் (VIKASECO)
தற்போதைய விலை: ரூ.42.10
வாங்கலாம்
பாசிட்டிவான செய்திகள் மற்றும் சில அரசு நடவடிக்கைகள்மீது இருக்கும் எதிர்பார்ப்பு களால், இந்த நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மீது நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பங்கின்மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி, பங்கின் விலைநகர்விலும் ஏற்றத்தைப் பார்க்க முடிகிறது. இந்தப் பங்கின் போக்கு நன்றாக இருப்பதோடு, எல்லா இறக்கத்தின்போதும் முதலீடுகள் இந்தப் பங்கில் குவிவதையும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் இந்தப் பங்கு அதன் போலிங்கர் பேண்டின் மிட் பேண்டிலிருந்து மீண்டும் அதன் சப்போர்ட் நிலையை நோக்கி இறங்கி யிருக்கிறது.
இதன் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (RSI) பாசிட்டிவான ரிவர்சல் சிக்னலுடன் நன்றாக இருப்பதால், இந்தப் பங்கின் விலை மேலும் ஏற்றமடைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். விரைவிலேயே ரூ.52 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.36-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

சுந்தரம் ஃபாஸ்னர் (SUNDRMFAST)
தற்போதைய விலை: ரூ.556.15
வாங்கலாம்
இந்த ப்ளூ சிப் பங்கு முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதன் வலுவான போக்கில் இருந்து இன்னும் இறங்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும், மாதமும் புதிய உச்சங்களை அடைந்தபடிதான் இருக்கிறது. தற்போது, அதன் புல்பேக் முடிவுக்கு வந்து அதன் போலிங்கர் பேண்ட் நிலையை சப்போர்ட் நிலையாகக் கொண்டு மீண்டும் ஏற்றமடைய தயாராக இருக்கிறது. ஏற்றத்துக் கான இன்டிகேட்டர்கள் நல்ல மொமென்டத்தில் இருப்பதால், இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.600-க்கு உயர வாய்ப்புள்ளது. இந்தப் பங்கினைத் தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.540-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

லிங்கன் பார்மா (LINCOLN)
தற்போதைய விலை: ரூ.237.45
வாங்கலாம்
பார்மா பங்குகளுக்கு இருந்த அழுத்தம் மெல்ல நீங்கி, மீண்டும் சந்தையில் அவற்றுக்குத் தேவையும் உருவாகி வருகிறது. எனவே, பார்மா பங்குகளின் சமீபத்திய இறக்கங்களை வாங்கும் வாய்ப்புகளாக முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. பார்மா துறையின் முன்னணிப் பங்குகள் ஏற்கெனவே ஏற்றமடைந்து வர்த்தகமாகத் தொடங்கி விட்டன.
தற்போது பெரும்பாலான மிட் மற்றும் ஸ்மால் கேப் பார்மா பங்குகள் ஏற்றமடையத் தயாராக இருக்கின்றன. அவற்றில் ஒன்று, லிங்கன் பார்மா. இந்தப் பங்கின் வர்த்தகப் போக்கு நன்றாகக் கவர்ச்சி கரமாக இருக்கிறது.
தற்போது, அதன் சமீபத்திய ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து மீண்டு ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.260 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.225-க்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.