நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

பாசிட்டிவான செய்திகள் கடந்த வாரத்தில் சந்தையை மேலும் ஏற்றத்தை நோக்கிக்கொண்டு சென்றன. நிஃப்டி புதிய உச்சங்களை அடைந்தது. ஏற்றத்தின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவ தால், இப்போது குறுகிய காலத்திலேயே சந்தை பெரிய உச்சங்களை அடைந்துவிடுகிறது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தப் போக்கு எல்லோருக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதேநேரம், இந்த வேகம் மிக அதிகம் என்ற எச்சரிக்கை உணர்வும் இருக்க வேண்டும்.

சந்தை இந்த உச்சநிலைகளை அடையக் காரணம், லார்ஜ்கேப் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவாக இருப்பதால் தான். பெரும்பாலான முன்னணி நிறுவனப் பங்குகள் நல்ல நிதிநிலை முடிவுகள் காரணமாக உயர்ந்து வர்த்தகமாவதால், சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வருகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



தனியார் வங்கிப் பங்குகளின் ஏற்றம், பேங்க் நிஃப்டியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நிஃப்டி கடந்த வாரத்தில் அடைந்த உச்சங்களுக்கும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. மேலும், நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பொதுத்துறை வங்கிகளுக்கான மறுமூலதனம் குறித்த அறிவிப்பும் வெளியாகியது. ஆனால், இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததுபோல், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுத்துறை வங்கிக் குறியீடுகள் இறக்கத்தையே பதிவு செய்தன. ஆனாலும், பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகப் போக்கு இன்னும் நல்ல நிலையில்தான் இருக்கிறது. எனவே, இனிவரும் நாள்களில் அதில் ஏற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.  

ஐ.டி துறை பங்குகளும் சந்தையின் ஏற்றத்துக்கு உதவும் வகையில் வர்த்தகமாயின.

வரும் வாரம் முழுவதும் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் மற்றும் பட்ஜெட் நிகழ்வுகளின் ஆதிக்கத்தில்தான் சந்தையின் செயல்பாடு இருக்கும். வாரத்தின் தொடக்க நாள்களில் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு செய்திகள் வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்து வதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தின் இறுதி நாள்களின் சந்தையின் செயல்பாடு, பட்ஜெட் நிகழ்வுகளைப் பொறுத்து இருக்கும். எனவே, வரும் வாரத்தில் வர்த்தக முடிவுகளை எடுப்பது சற்றுக் கடினமாகவே இருக்கும். லாங்க் பொசிஷன்களில் இருப்பவர்கள் நிஃப்டியில் 10500 என்ற நிலையை ஸ்டாப்லாஸாக எடுத்துக்கொள்ளலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இஸ்மோ (IZMO)

தற்போதைய விலை: ரூ.84.95

வாங்கலாம்


ஐ.டி துறையைச் சார்ந்த பங்குகளின் விலை நன்றாக ஏற்றம் கண்டு வருகின்றன. முன்னணி நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயலாற்றி வருவ தால், முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் ஐ.டி துறையின் பிற மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் மீதும் பாசிட்டிவாகவே இருக்கிறது.

இஸ்மோ நிறுவனப் பங்கின் மாத சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, அதில் நல்ல ரவுண்டிங் பாட்டம் உருவாகி ஏற்றத்துக்கான வாய்ப்புகளுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, இந்தப் பங்கு தற்போது ஏற்றம் கண்டு பிரேக் அவுட்-ஆகத் தயாராக இருக்கிறது.

இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த ஆறு வாரங்களில் ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.75-க்குக்கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விம்டா லேப்ஸ் (VIMTALABS)

தற்போதைய விலை: ரூ.215.90

வாங்கலாம்


இந்தப் பங்கை இதற்குமுன் விலை குறைவாக இருக்கும்போது பரிந்துரை செய்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த ஏற்றத்தை இந்தப் பங்கு அடைந்து, தற்போது பிரேக் அவுட் ஆகி, நல்ல வால்யூம் மற்றும் மொமென்டத்தில் புதிய உச்சங்களை அடையும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தப் பங்கில் மீண்டும் முதலீடு செய்யலாம். சில வாரங்களில் இந்தப் பங்கு ரூ.240 வரை உயர வாய்ப்புள்ளது.  வாரத்தின் இடையில் ரூ.200 வரை  இறங்கினாலும் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.190-க்குக்கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

பாலாஜி அமைன்ஸ் (BALAMINES)

தற்போதைய விலை: ரூ.747.10

வாங்கலாம்


இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் நல்ல ஏற்றத்தின் போக்கைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. ஏற்ற இறக்கமில்லாத நிலையைத் தொடர்ந்து இந்தப் பங்கு ஏற்றமடைந்து, புதிய உச்சங்களை அடையத் தயாராக இருக்கிறது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரு கெமிக்கல் மீது மத்திய அரசு, பொருள் குவிப்பு வரி (Anti Dumping Duty) விதிக்க வாய்ப்பிருக்கிறது. அது நடந்தால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் அந்த கெமிக்கல் விலை அதிகரிக்கும்.  பாலாஜி அமைன்ஸ் தயாரிப்புக்கும் தேவை அதிகரித்து விற்பனை உயரும் என்பதால், நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரிக்கும்.

எனவே, அது இந்தப் பங்கில் புதிதாக ஏற்றத்தின் போக்கை உருவாக்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இந்தப் பங்கு ரூ.900 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.675-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.