நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

சந்தையின் அபரிமிதமான ஏற்றம் ஒருநாள் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட் அதற்கான காரணமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றுகூட, பட்ஜெட்டினால் சந்தையில் நெகட்டிவ் போக்கு உண்டாக்கும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அன்றைய தினம் சந்தை நல்ல ஏற்றத்தில்தான் வர்த்தகமாகத் தொடங்கியது.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், பட்ஜெட் எதிர்பார்த்தபடி இல்லாத தால், சந்தையில் சற்று நெகட்டிவ் போக்கு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமையன்று இறக்கம் மிக அதிகமாகவே இருந்தது. முதலில் மிட்கேப் பங்குகள் இறக்கமடைய ஆரம்பித்தன. பின்னர் இறக்கமானது லார்ஜ்கேப் பங்குகளிலும் ஏற்பட்டது. இதனால், சந்தைக் குறியீடுகள் அதிக அளவில் இறக்கமடைந்து சமீபத்திய குறைந்தபட்ச நிலையை அடைந்தன.

நிஃப்டி அதன் சமீபத்திய உச்சத்திலிருந்து 4%  வரை இறக்கம் கண்டுள்ளது. இது, கடந்த 2017-ல் அடைந்த அதிகபட்ச இறக்கத்துக்கு அருகில் இருக்கிறது. எனவே, இந்த இறக்கம் மேலும் தொடர்ந்து இருக்குமானால், கடந்த 13 மாதங்களில் சந்தை அடையும் முதல் அதிகபட்ச  இறக்கமாகவே இருக்கும். அப்படி நடந்தால் அது சமீப காலத்தில் நாம் பார்த்திராத நிகழ்வாகவே இருக்கும்.

இந்த இறக்கம் சற்று அதிகமாக இருப்பதால், நிச்சயம் கவலைக்குரியதுதான். ஏனெனில், போர்ட்ஃபோலியோ மதிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடம் முழுவதும் தடையேதும் இல்லாத காளையின் ஓட்டத்தை அனுபவித்துவந்த நிலையில், தற்போது கரடியின் ஆதிக்கம் மீண்டும் வந்திருப்பதாகத் தெரிகிறது. வரும் வாரத்தில் இறக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து சந்தையின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும். 

கடந்த இதழில் நிஃப்டிக்கு 10500 என்ற நிலையில், ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இப்போது அந்த நிலையைத் தக்கவைப்பதே சந்தைக்குச் சற்று சவாலாக இருக்கும் நிலை ஏற்பட்டிருப்ப தாகவே தெரிகிறது.

மேன் இண்டஸ்ட்ரீஸ் (MANINDS)

தற்போதைய விலை: ரூ.121.35

வாங்கலாம்

சந்தை இறக்கத்தில் இருப்பதால் நல்ல பேட்டர்ன்களைக் கொண்டிருக்கும் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியி ருக்கின்றன. மேன் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் நகர்வுகளில் நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருந்தது. தற்போது அதன் சப்போர்ட் நிலைகளுக்கு இறங்கி வாங்கக்கூடிய விலையில் இந்தப் பங்கு இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



வீக்லி சார்ட்டுகளில் அதிகபட்ச வால்யூம்களுடன் இறக்கம் அடைந்து, சப்போர்ட் நிலையில் குறைவான நீளம் கொண்ட கேண்டில் பேட்டர்ன் உருவாகியிருப்பதால், இந்தப் பங்கில் இறக்கமானது முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது. இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். மூன்று மாதங்களில் ரூ.140-க்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.115-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBILIFE)


தற்போதைய விலை ரூ.718.30

வாங்கலாம்


கடந்த வாரத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்குகள் சற்று பரவாயில்லை என்கிற ரீதியில் வர்த்தகமாயின. பட்ஜெட்டிலும் இந்தத் துறைக்குச் சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. எனவே, இந்தத் துறை பங்குகளில் ஏற்றத்தின் போக்குக்கு வாய்ப்பிருக்கிறது. அவற்றில், எஸ்.பி.ஐ லைஃப் பங்கின் சார்ட்பேட்டர்னில் அதன் முந்தைய ரெசிஸ்டன்ஸ் நிலையில் பிரேக் அவுட் நிலை உருவாகியிருக்கிறது. வரும் வாரத்தில், இதன் விலை ரூ.720-யைக் கடக்குமானால் ரூ.750 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூ.700-யை ஸ்டாப்லாஸாக வைத்து வாங்கலாம்.
  
பாம்பே டையிங் (BOMDYEING)

தற்போதைய விலை: ரூ.191.75

வாங்கலாம்


கடந்த மூன்று வாரங்கள் இந்தப் பங்கில் தொடர்ந்து இறக்கம் இருந்துவந்தது. ஆனால், தற்போது முந்தைய ஏற்றத்தின் 50 சதவிகித ரிட்ரேஸ்மென்ட் நிலையில் நல்ல சப்போர்ட் நிலையை அடைந்திருக்கிறது. மேலும், இதன் ஆசிலேட்டர் டிஐ கோடுகள் எலியட் ஆசிலேட்டருடன் இணைந்து, ஏற்றத்துக்கான பேட்டர்னை உருவாக்கியிருக்கிறது.

எனவே, இந்தப் பங்கு அதன் தற்போதைய நிலையிலிருந்து ஏற்றமடையும் வாய்ப்புடன் இருக்கிறது. தற்போதைய விலையிலிருந்து இறங்கினாலும் வாங்கலாம். குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.230 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 182-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.