நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், சந்தையின் போக்கைத் தீர்மானிக்க முடியாத சூழலில் வர்த்தகர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழலில், செய்திகளின் தன்மையைப் பொறுத்தே சந்தை நகரும். மேலும், நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் அறிவிப்பு, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


எனவே, அதுதொடர்பான செய்திகள் பெரிய அளவில் இனி இருக்காது. இந்த நிலையில், சந்தை சர்வதேச நிகழ்வுகளைப் பொறுத்து வர்த்தகமாகும். ஆனால், சமீப வர்த்தக நாள்களில் பெரும்பாலும் பாசிட்டிவ் போக்கு என்பதே இல்லாமல் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் ஆரம்பித்தது என்றாலும், வார இறுதி நாள் என்பதால், விற்பனை சற்று அதிகமாக இருந்ததால் வர்த்தகம் நிறைவுபெறும்போது மிக மோசமான நிலையில்தான் நிறைவடைந்தது. இதனால், வரும் வாரத்துக்கான கேண்டில் பேட்டர்னும் மோசமானதாகவே இருக்கிறது. மேல்நோக்கிய ஷேடோ கேண்டிலைப் பார்க்கும்போது, ஏற்றத்துக்கான வாய்ப்புகளைச் சந்தை நிராகரித் திருப்பது தெரிகிறது. குறியீடுகள் குறைந்தபட்ச நிலைக்கு இறங்கியதால், தொடர்ந்து இறக்கத்துக்கான வாய்ப்புகளையே கொண்டிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பி.என்.பி குறித்த செய்தி வங்கித் துறையைப் பலமாக பாதித்திருக்கிறது. பெரும்பாலான வங்கிப் பங்குகள் இதனால் பாதிக்கப்பட்டு, விலை குறைந்ததோடு பேங்க் நிஃப்டியும் இறக்கத்தைச் சந்தித்தது. வங்கிப் பங்குகளின் உதவி இல்லாததால், நிஃப்டியிலும் இறக்கம் நன்றாகவே தெரிந்தது. மேலும், பிற துறைகளிலும் பெரிய அளவில் ஏற்றமில்லாததால் சந்தைத் தொடர்ந்து சுணக்கத்துடன், இறக்கத்தின் போக்கிலேயே தொடர்ந் தது. எனவே, வரும் வாரத்துக்கான சந்தையின் போக்கு அவ்வளவு பிரகாசமானதாகத் தெரியவில்லை.

ஆனாலும், வரும் வாரம் சந்தைக்கு மிக முக்கியமான ஒரு வாரமாக இருக்கிறது. ஏனெனில் சந்தையின் தற்போதைய நகர்வுகளானது, முந்தைய வாரங்களில் உருவான சப்போர்ட் நிலைகளைப் பயமுறுத்துவதாக இருக்கும் என்பதால், நெகட்டிவான செய்திகள் வந்தால், காளையின் போக்குக்குத் தடையாக மாறிவிடும்.

அதேசமயம், இந்த இறக்கத்தின் போக்கில் பாசிட்டிவான செய்திகள் ஏதேனும் வருமானால், அவை சந்தையின் இறக்கத்தைக் கட்டுப்படுத்தி, ஏற்றத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். எனவே, இந்தச் சூழ்நிலையில் சற்றுப் பாதுகாப்பு உணர்வுடன்தான் சந்தையை அணுக வேண்டும். வரும் வாரத்தில், சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து செயல்படுவது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நவ பாரத் வென்சர்ஸ் லிமிடெட் (NBVENTURES)

தற்போதைய விலை: ரூ. 146.65

வாங்கலாம்

இந்த நிறுவனம் டைவர்சிஃபைடாக செயல்பட்டு வருவதால், நீண்ட காலத்தில் பங்கில் நல்ல பேட்டர்ன் மற்றும் நிலையான வளர்ச்சி இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஏற்றத்துக்கான பிரேக் அவுட் நிலைக்காகக் காத்திருக்கிறது. ஏனெனில், இதில் பில்ட் அப் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் இருந்துவருகிறது. இந்தப் பங்கில், ஏற்றத்தை உறுதிசெய்யும் நல்ல சப்போர்ட் நிலையையும் சூப்பர் டிரெண்ட் அறிகுறியையும் பார்க்க முடிகிறது. இதனால், இந்தப் பங்குக்கு நல்ல ஸ்டாப்லாஸ் நிலையும் கிடைத்திருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். 3 - 6 மாத காலத்தில் ரூ.200 வரை உயரலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் (FORTIS)

தற்போதைய விலை: ரூ.  137.70

வாங்கலாம்

பங்கின் விலைநகர்வும் செய்திகளும் முரணாக இருக்கும்போது பங்கில் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஃபோர்டீஸ் பங்கில் செய்தி நெகட்டிவாக இருந்தாலும், விலை நகர்வுகள் பாசிட்டிவாக உள்ளன. இந்தப் பங்கு அதிகபட்சமாக ரூ.105  வரை இறங்கியது. இந்த நிலையில், இறக்கமானது முடிவுக்கு வந்து, ஏற்றத்துக்கான வாய்ப்புகளுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பங்கின் சார்ட்டில், மார்னிங் ஸ்டார் பேட்டர்ன், அதன் பாட்டம் நிலையில் உருவாகி ஏற்றமடைந்து, தற்போது ரூ.150 வரை உயர்ந்தது.

ஆனால், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தப் பங்கு மீண்டும் இறக்கமடைந்து வாங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதன் ரெசிஸ்டென்ட் ரூ.160 என்ற நிலைக்கு உயரும் வாய்ப்புள்ளதால், தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.125-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

செயில் (SAIL)

தற்போதைய விலை: ரூ. 87.90

வாங்கலாம்

சந்தையில் காளையின் போக்கில் மெட்டல் துறை பங்குகள் நன்றாக செயலாற்றின. செயில் பங்கு தனது இறக்கத்திலிருந்து மீண்டு ஏற்றமடைந் திருந்தாலும் மற்றவற்றை போலவே இன்னும் ஏற்றமடைவதற்கான சாத்தியங்கள் இதில் இருக்கின்றன.

சமீபத்தில் இதன் நிதிநிலை முடிவுகளும் பாசிட்டிவாக வந்திருப்பதால், இந்தப் பங்கில் மேலும் கவனம் அதிகரித்துள்ளது. ரூ.96 என்ற நிலையில் பிரேக் அவுட் ஆகி நல்ல மொமென்டத்தில் ஏற்றமடைந்து, ரூ. 120 வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.85-க்குக் கீழ் வைத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.