நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

டந்த மூன்று ஆண்டுகளாக ஏற்றத்தை மட்டுமே கண்டுவந்த நமது பங்குச் சந்தை, கடந்த ஒன்றரை மாத காலமாக இறங்கியபடியே இருக்கிறது. 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு சில தினங்கள்முன்பு நமது பங்குச் சந்தையானது தனது வாழ்நாள் உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் (29-01-2018) நடந்த வர்த்தகத்தின் முடிவில் நிஃப்டி 50 குறியீடு 11130 புள்ளிகளைத் தொட்டது. அதன் பிறகு, பஞ்சாப் நேஷனல் பேங்க் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு  காரணங்களினால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைய ஆரம்பித்தது. கடந்த 3-ம் தேதியன்று நிஃப்டி 50 குறியீடு 10154 புள்ளிகளைத் தொட்டது. இது உச்சத்திலிருந்து 8.8% குறைவாகும். இப்போதுள்ள நிலையில், இதைவிட சந்தைப் புள்ளிகள் குறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

சந்தை இனி தொடர்ந்து இறங்கத்தான் செய்யுமா, மீண்டும் அது ஏற்றத்தில் வர்த்தகமாகாதா என்கிற கேள்விகள் முதலீட்டாளர்களின் மனதில் இப்போது அடிக்கடி எழுகின்றன. இந்தக் கேள்விக்கு, பல பதில்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், சமீபத்தில் வெளியான பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

பி.என்.பி பரிபாஸ் ரிப்போர்ட்

பி.என்.பி பரிபாஸ் ரிப்போர்ட், நமது பொருளாதாரத்தின் மூன்று வீரர்கள் என நுகர்வு, முதலீடு மற்றும் அரசாங்கத்தைக் குறிப்பிடுகிறது. சமீபத்திய ஆர்.பி.ஐ ரிப்போர்ட்டின்படி, நம் நாட்டிலுள்ள நுகர்வோரின் நம்பிக்கை அதிகரித்துள்ளதையும், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. பர்சேஸ் சேல்ஸ் மேனேஜர் குறியீட்டின்படி, இந்தியாவில் தொழில்புரிவோரின் நம்பிக்கை அதிகரித்து வருவதால், வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது பொருளாதாரத்தில், பணமதிப்பு நீக்கத்துக்குப்பிறகு, பண சுழற்சியானது      (currency circulation) நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் – அக்டோபர் 2016-ம் ஆண்டு லெவல்களை தற்போது தொட்டிருக்கிறது. (பார்க்க, பக்கம் 22-ல் உள்ள வரைபடம்) இவைதவிர, விவசாயிகளுக்குக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, மக்கள் வீடு கட்டுவதை மானியங்கள் மூலம் ஊக்குவிப்பது, நெடுஞ்சாலைகள் அமைப்பது போன்றவற்றின் மூலம் அரசாங்கம் தனது செலவினங்களை முடுக்கிவிட்டுள்ளது.

மக்கள் கையில் பணம் அதிகமிருப்பது மற்றும் நிறுவனங்கள் தனி நபர்களுக்குக் கொடுக்கும் கடன்கள் ஆகிய காரணங்களால் இனிவரும் காலங்களில், நுகர்வு மற்றும் முதலீடு அதிகமாக இருக்கும். அரசாங்கத்தின் செலவு அதிகமாக்கப்படுவதாலும், தொழில்புரிவோரின் நம்பிக்கை அதிகமாக இருப்பதாலும் முதலீடு மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். நுகர்வு, முதலீடு மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்துள்ளதால், இனிவரும் காலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும் என பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!


இந்த ரிப்போர்ட் இப்படியிருக்க, நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இந்தியப் பொருளாதாரம் இனிவரும் காலங்களில் உன்னதமாக இருக்கும் என்பதுதான். நம்மை விட நமது வருங்காலச் சந்ததியினர் இன்னும் செல்வச் செழிப்போடு இருப்பார்கள்.  இந்தச் செழிப்பு நமது பங்குச் சந்தையில் பிரதிபலித்து, நாம் முதலீடு செய்துள்ள பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பிரதிபலிக்க நிறையவே வாய்ப்புண்டு. ஆகவே, முதலீட்டாளர்கள் ஒவ்வொரு வீழ்ச்சியையும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  மேலும், சந்தையானது தொடர்ந்து இறக்கத்திலேயே இருந்துவரும் இந்தச் சமயத்தில், சந்தையில் ஏற்கெனவே செய்துள்ள முதலீடுகளைத் திரும்ப எடுப்பதோ அல்லது தொடர்ந்து முதலீடு செய்யாமல் இருப்பதோ மிகப்பெரிய தவறாகும்.

காரணம், சந்தை தொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் போது முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும். இன்று பல லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது தங்களின் அடுத்த 5, 10, 15, 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஏற்படும்  தேவை களை நிறைவேற்றிக் கொள்ளத்தான். அப்படியிருக்கும் போது சந்தையின் ஒவ்வொரு  இறக்கத்தையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

எஸ்.ஐ.பி முறையில் இன்று கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள்  முதலீடு செய்துவருகிறார்கள். அவ்வாறு நீங்களும் செய்துவரும்பட்சத்தில், அந்த முதலீட்டைத் தொடர்ந்து செய்து வருவதே சரி. தவிர, நீண்ட காலத்துக்குத் தேவைப்படாத தொகை உங்கள் கையில் இருக்கு மானால், பக்கம் 24-ல் பரிந்துரை (பார்க்க, பரிந்துரைப் பட்டியல்) செய்யப்பட்டுள்ள ஃபண்டுகளில் உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக் கேற்ப எஸ்.டி.பி முறையில் முதலீடு  செய்யுங்கள். இந்த ஃபண்டுகள் அனைத்தும் பங்கு சார்ந்த ஃபண்டு கள் என்பதால், அவை அனைத்துக்கும் சந்தையை ஒட்டிய ரிஸ்க் உள்ளது. அந்தச் சந்தை ரிஸ்க்கை பல்வேறு ரிஸ்க் லெவல் களில் பிரித்துத் தந்துள்ளோம். இந்த ஃபண்டுகள் அனைத்தும் பல ஃபில்டர்களுக்கு உட்படுத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவை. மேலும், இந்த ஃபண்டுகள் அனைத்தும் தத்தம் கேட்டகிரியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருபவை.

இனி, பரிந்துரை செய்யப் பட்டுள்ள  ஃபண்டுகளைப் பற்றி...

  ஐசிஐசிஐ புரூ பேலன்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்ட்

இது ஒரு கலப்பின ஃபண்டாகும். 25,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. அதீத வருமானம் தருவது, இந்த ஃபண்டின் நோக்கமல்ல. மாறாக, சந்தை சரியும்போது முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதை தனது தலையாயக் கடமையாக எடுத்துக்கொண்டுள் ளது. பணவீக்கத்தைத் தாண்டி  ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சற்றுக் கூடுதலான வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

   பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்

இது ஒரு சிறிய ஃபண்ட் நிறுவனமென்றாலும், கடந்த சில வருடங்களாக இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பல திட்டங்கள் மிக நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இந்த பேலன்ஸ்டு ஃபண்டும் ஒன்று. கடந்த 1, 2 மற்றும் 3 வருட வருமானத்தில் பேலன்ஸ்டு ஃபண்ட் கேட்டகிரியில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 21.38% பங்குகளை வைத்திருந்தது. ஓரிரு மாதங்கள் முன்பு அந்தப் பங்குகள் முழுவதையும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரின்சிபல் நிறுவனத்துக்்கே விற்றுவிட்டது.

  ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் – பேலன்ஸ்டு


ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸில் ஈக்விட்டி, பேலன்ஸ்டு, கடன் (debt)  என மூன்று திட்டங்கள் உள்ளன. இது பேலன்ஸ்டு திட்டமாகும். பிற பேலன்ஸ்டு திட்டங்களைப்போல் அல்லாமல், தனது போர்ட்ஃபோலியோவில் பங்கு சார்ந்த போர்ஷனில் முழுக்க முழுக்க லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்துள்ளது.

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

   ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட்

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பல திட்டங்களின் ஃபண்ட் மேனேஜரான சிராக் சேத்தல்வத் இந்தத் திட்டத்தையும் நிர்வகித்து வருகிறார். ரூ.20,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. தொடர்ச்சி யாக நல்ல செயல்பாட்டினைக் கொண்டுள்ளது இந்தத் திட்டம்.

   ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட்

ரூ.8,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வரும் இந்த ஃபண்டை அஷ்வனி குமார் மற்றும் சைலேஷ் ராஜ் பான் நிர்வகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 80% வரை லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில் தனது முதலீட்டை வைத்துள்ளது. பங்குச் சந்தையை ஒட்டிய ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த லார்ஜ்கேப் ஃபண்ட் ஏற்றதாகும்.

  டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட்

ரூ.2,700 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வரும் இந்த மல்டிகேப் ஃபண்டை ஸோனம் உதாஸி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள 70% பங்குகளின் பி/இ விகிதத்தை, சென்செக்ஸ் குறியீட்டின் பி/இ விகிதத்தைவிட குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. இது ஒரு வேல்யூ ஸ்டைல் ஃபண்டாகும்.

  இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்


இந்த ஃபண்டின் பெயரில் உள்ளதுபோல, இது ஒரு கான்ட்ரா ஃபண்டாகும். அதாவது, சந்தை எந்தத் துறைகளை அல்லது எந்தப் பங்குகளை வாங்குகிறதோ, அவற்றை இந்த ஃபண்ட் வாங்காது. மாறாக, யாருமே தற்சமயத்தில் விரும்பாத துறைகளை/பங்குகளையே இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவுக்குத் தேர்ந்தெடுக்கும். கான்ட்ரா முறையில் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதால், இது ஒரு வேல்யூ அடிப்படையில் செயல்படும் ஃபண்டாகவும் உள்ளது. தொடர்ச்சியாக நல்ல செயல்பாட்டைக் கொண்டிருக்கும் இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

   பிரின்சிபல் குரோத் ஃபண்ட்

பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் நன்றாகச் செயல்பட்டுவரும் மல்டிகேப் ஃபண்டான பிரின்சிபல் குரோத் ஃபண்ட் தற்போது ரூ.600 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் 58% லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும் எஞ்சியது மிட்கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மல்டிகேப் திட்டங்களில், கடந்த 1, 2 மற்றும் மூன்று வருடங்களில், முதன்மையான வருமானத்தைத் தந்திருக்கக்கூடிய முதல் மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்று. 

   மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்


தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் மல்டிகேப் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இதன் போர்ட்ஃபோலியோவில் 85% லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளும், எஞ்சியது மிட்கேப் நிறுவனப் பங்குகளிலும் உள்ளது. இந்த ஃபண்டி னுடைய தாரக மந்திரம், தொடர்ச்சியான லாபத்தை ஈட்டித் தருவதே.

   ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட்

இது ஒரு மிட்கேப் ஃபண்டாகும். இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு ரூ.10,765 கோடியாகும். 2016-லிருந்து இருவர் டீம்  நிர்வகித்து வருகிறது. ஆகவே, இதன் குறுகிய கால வருமானம், நீண்டகால வருமானத்தைவிட நன்றாக இருக்கும். தற்போதிருக்கும் ஃபண்ட் மேனேஜர்களின்மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

   பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.19,000 கோடியாகும். இதன் போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 62% மிட்கேப் பங்குகளிலும், எஞ்சியது லார்ஜ்கேப் பங்குகளிலும் உள்ளது. கடந்த காலங்களில் முதலீட்டாளர்களுக்கு வருவாயைக் அள்ளிக் கொடுத்துள்ள ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.

   ஏ.பி.எஸ்.எல் ப்யூர் வேல்யூ ஃபண்ட்


ஆதித்ய பிர்லா குழுமத்தில் இருந்து வழங்கப்படும் மிட்கேப் ஃபண்டாகும். ரூ.3,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.12,231 கோடியாகும். தனது போர்ட்ஃபோலியோவில் 73 சதவிகிதத்தை மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. கடந்த 1, 3 மற்றும் 5 வருடங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   கேன் ரெபிகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட்

ரூ.3,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்துவரும் இந்த மிட்கேப் ஃபண்ட், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது 53% மிட் அண்டு ஸ்மால்கேப் பங்குகளிலும், எஞ்சியது லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும் உள்ளது. இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடியாகும்.

   ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்

தற்போது ரூ 2,400 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் முழுக்க முழுக்க மிட் (48%) அண்டு ஸ்மால்கேப் (52%) பங்குகளிலேயே தனது முதலீட்டை வைத்துள்ளது. இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.4,577 கோடியாகும். இந்த ஃபண்டின் சமீபத்திய உயர்தரமான செயல்பாட்டை வைத்தே நாம் பரிந்துரை செய்கிறோம்.

   ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.4,144 கோடியாகும். இந்த ஃபண்ட் தனது போர்ட் ஃபோலியோவில் 67 சதவிகிதத்தை ஸ்மால்கேப் பங்குகளிலும், 27 சதவிகிதத்தை மிட்கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. தற்போது ஸ்மால்கேப் ஃபண்டுகளில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ள ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.

இந்த ஃபண்டுகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில், சந்தை இறங்கிய இந்தச் சமயத்தில், நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யலாமே!

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

சிறு நகரங்களில் அதிகரிக்கும் ஃபண்ட் முதலீடு!

சிறு நகரங்களிலிருந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது கடந்த ஓராண்டுக் காலத்தில் 41% அளவுக்கு வளர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு பிப்ர வரி மாதக் கடைசியில் பி-15 நகரங்கள் (டாப் 15 நகரங்களுக்கு அடுத்தபடி யாக இருக்கும் நகரங்கள்) என்று சொல்லப்படும் நகரங்களிலிருந்து மியூச்சு வல் ஃபண்டில் முதலீடான தொகை ரூ3.08 லட்சம் கோடி ஆகும்.

இது, கடந்த பிப்ரவரி யில் ரூ.4.36 லட்சம் கோடி யாக உயர்ந்திருப்பது குறிப் பிடத்தகுந்த வளர்ச்சி ஆகும். சிறு நகரங் களிலுள்ள மக்கள் மோசடித் திட்டங்களில் பணத்தைப் போடுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டு கிறது!

இறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்!

யூரியாவுக்கு மானியம்... 2020 வரை நீட்டிப்பு!

விவசாயத்தில் யூரி யாவைப் பயன்படுத்து வதற்காக அளிக்கப்படும் மானியம் வருகிற 2020-ம் ஆண்டுவரை நீட்டிக்கப் படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.1,64,935 கோடி அளவுக்கு மானியம் வழங்க மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் யூரியாவுக் கான விலை கொஞ்சம்கூட உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டன் ஒன்றுக்கு ரூ.5,360 என்கிற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் சொல்லப் படுகிறது. பெரும்பகுதி யான மக்களிடம் இயற்கை விவசாயம் பிரபலமடைந்து வரும் இந்தக் காலத்தில், யூரியா மானியம்  இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தரப்படுமோ..?