
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
கடந்த வாரத்தில் நமது பங்குச் சந்தைகள் பெரும்பாலும் நிச்சயமற்ற தன்மையுடன் காணப்பட்டது. ஆனால், காளைகள் அதனை முறியடித்து முன்னேறியிருக்கிறது. அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, சிரியா பிரச்னை உள்ளிட்ட அனைத்து சிக்கல்களும் காளையின் ஏற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆக்ஸிஸ் பேங்க் பற்றி நெகட்டிவ் செய்திகள் வந்தாலும், வெள்ளிக்கிழமையன்று அதன் பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன. மோசமான செய்திகளால் பங்குகளின் விலை ஏற்றம் காண்பதற்கான மற்றொரு உதாரணம் இதுவாகும். இதேபோல், வெள்ளிக்கிழமையன்று பொதுத்துறை வங்கிப் பங்குகளில் எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் பேங்க் போன்ற பங்குகளின் விலையும் அதிகரித்தது.
நிஃப்டி அதன் முக்கிய நிலையான 10645-யைத் தாண்டி இருக்கிறது. இந்த நிலையில், இதற்குமுன் கரடிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நிஃப்டி அதன் ஏற்றத்தின் போக்கில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நிஃப்டி தினசரி சார்ட்டில் சந்தையானது 10529 மற்றும் 10645 இடையே வர்த்தகமாகி வந்திருக்கிறது. இது சந்தை மேல்நோக்கி பயணிக்க அதிக வாய்ப்புள்ளது. நிஃப்டி 9960 புள்ளி களிலிருந்து மேலேறி வருவது, மற்றொரு வலிமையான அறிகுறியாகும். நிஃப்டியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் 10760 புள்ளிகளில் காணப்படுகிறது. அதனைத் தாண்டினால் 10930-ஆக உள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி பேங்க் நிஃப்டி 25409 புள்ளிகளில் காணப்பட்டது. பின்னர் இது இறங்கி 24745-க்கு வந்தது. இந்த இறக்கம் முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாகும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு வர்த்தக தினங்களில் குறியீடுகள் அதிக ஏற்றம் கண்டுள்ளன.
நிஃப்டி அதன் சிக்கலான ரெசிஸ்டன்ஸான 10650-யைத் தாண்டிவிட்டது. பேங்க் நிஃப்டி 25800-யைத் தாண்டினால்தான் இந்த நிலை உருவாகும். பேங்க் நிஃப்டி அதன் வார சார்ட்டில் 25680 ரெசிஸ்டன்ஸாக உள்ளது.

டிவிஸ் லேப்
தற்போதைய விலை
வாங்கலாம்
பார்மாத் துறையானது கடந்த சில மாதங்களாகச் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. இந்தத் துறை சார்ந்த பங்கு களிலிருந்து, இந்தப் பங்கானது மிகக் குறைந்த சரிவையே கண்டுள்ளது. இந்தப் பங்கு அதன் ரிட்ரேஸ்மென்ட்டிலிருந்து 78.6% மீண்டிருக்கிறது. இதன்மூலம் பெரிய அளவில் உருவான பியரிஷ் கேண்டிலை உடைத்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இந்தப் பங்கில் உருவான நெருக்கமானது இசிமோகு க்ளவுட் லெவலை நன்கு சப்போர்ட் செய்கிற மாதிரி உள்ளது. இந்தப் பங்கின் தினசரி சார்ட்டானது, இதன் சமீபத்திய சரிவிலிருந்து நன்கு அதிகரித்து, நிலையான விலைப்போக்கை நோக்கிச் செல்வதாக இருக்கிறது. இந்தப் பங்கின் மொமென்டம் இண்டிகேட்டர்களும், ஆர்.எஸ்.ஐ-யும் காளையின் போக்கில் கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன், இந்தப் போக்கில் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கலாம். எனவே, இந்தப் பங்கு இப்போதிருக்கும் நிலையிலிருந்து மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம். இதன் இலக்கு விலை 1,238 ஆகவும், ஸ்டாப் லாஸ் 1,178-ஆகவும் வைத்துக்கொள்ளலாம்.

இன்ஃபோசிஸ்
தற்போதைய விலை ரூ.1,181
வாங்கலாம்
1028 என்கிற நிலையில் இரண்டு பெபனாசி ரிட்ரேஸ்மென்ட் நடந்துள்ளது. 546 மற்றும் 277-ல் இருக்கும் பிவெட் பாயின்ட்டானது 1075 - 1103 மற்றும் 1239 - 1300-ல் கிளஸ்டர் இருப்பதைக் காட்டுகிறது. இதில் கீழ் கிளஸ்டரானது பிக் புல் கேண்டிலை உடைத்திருப்பது, இந்தப் பங்கில் காளைகளின் நடமாட்டம் உருவாகியிருப்பதை உணர்த்துகிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்தப் பங்கின் விலையானது ஆதரவு விலைக்குள்ளேயே இருப்பது, இந்தப் பங்கில் காளையின் போக்கில் செல்வதற்குத் தயாராகி வருவதைக் காட்டுகிறது. தினசரி சார்ட்டினைப் பார்த்தால், ஆதரவு நிலை உறுதியான நிலையை அடைந்ததுடன், பிற குறியீடுகளும் பலமடைந்து வருவதையே காட்டுகிறது. எனவே, இந்தப் பங்கினை தற்போதைய சந்தை விலையில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 1,230-ஆக வைத்துக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் 1,154-ஆக வைத்துக் கொள்ளலாம்.

பாரத் பிஜிலி
தற்போதைய விலை ரூ.1,654
வாங்கலாம்
பாரத் பிஜிலி பங்கு சந்தையில் நன்கு அறியப்பட்ட நிறுவனம் ஆகும். கடந்த பல ஆண்டுகளில் இந்தப் பங்கு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்தப் பங்கு நல்லதொரு ஏற்றத்தைக் கண்டு வருவதுடன், புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பங்கின் விலை நிலைபெற்று, மேலே செல்வதற்கான வாய்ப்பு சார்ட்டில் நன்றாகவே தெரிகிறது. இதற்கு உதவி செய்கிறமாதிரி மூவிங் ஆவரேஜின் தற்போதைய நிலையும் உள்ளது. இந்தப் பங்கின் மொமென்டம் இண்டிகேட்டரும் விலை இன்னும் உயரும் என்பதையே உணர்த்துகிறது. இந்த நிலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். அடுத்த ஆறு மாதங்களில் இந்தப் பங்கின் விலை 2,000-த்தைத் தொட வாய்ப்புள்ளது. 1,600-யை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளலாம்.
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.