நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சரியும் இண்டிகோ... என்னதான் காரணம்?

சரியும் இண்டிகோ... என்னதான் காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
சரியும் இண்டிகோ... என்னதான் காரணம்?

சரியும் இண்டிகோ... என்னதான் காரணம்?

ண்டிகோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த  திங்கள் முதல் வியாழன் வரையிலான நான்கு நாள்களில் 19% குறைந்துள்ளது. பங்கின் விலை குறைவது இனிவரும் நாள்களிலாவது நிற்குமா என்கிற கவலையில் இருக்கிறார்கள் இந்தப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள்.  

சரியும் இண்டிகோ... என்னதான் காரணம்?

இந்தப் பங்கின் விலை திடீரெனக் குறைய மூன்று காரணங்கள். இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியை சில நாள்களுக்குமுன்பு ராஜினாமா செய்தார் ஆதித்யா கோஷ். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் கடந்த காலத்தில் வளர்ந்தமாதிரி மீண்டும் வளருமா என்கிற சந்தேகம்  முதலீட்டாளர்களிடம்  ஏற்பட, இந்தப் பங்கினை விற்கத் தொடங்கியதால், விலை குறையத் தொடங்கியது முதல் காரணம்.

இரண்டாவது காரணம், ஆதித்யா கோஷின் ராஜினாமா செய்தி, பங்குச் சந்தைகளுக்குத் தெரியும்முன்பே வெளியே கசிந்திருக்குமோ, அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சிலர்  இன்சைடர் டிரேடிங் செய்திருக்கலாமோ என்கிற சந்தேகம் செபிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் மேற் கொண்ட வர்த்தகங்கள் தொடர்பான புள்ளி விவரங்களைக் கேட்க, பங்கு விலை சரிந்திருக்கிறது. 

மூன்றாவது காரணம், இண்டிகோ நிறுவனத்தின் லாபம் கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 73.3% குறைந்திருப்பது. நம் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் வருமானம் 19.6% அதிகரித்த போதிலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, ரூபாய் மதிப்பு குறைந்ததால்தான் லாபம் குறைந்துள்ளதாகச் சொல்கிறது அந்த நிறுவனம். இந்தப் பங்கின் விலை இனி எப்படி இருக்குமோ..?

- ஆகாஷ்