
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964
இண்டெக்ஸ்
சந்தையில் இந்த வார வர்த்தகம் ஒரு கலவையான போக்கில் இருந்ததுடன், சந்தை எந்தத் திசையில் செல்கிறது என்பது குறித்துத் தெளிவில்லாமல் இருந்தது.

வியாழனன்று பேங்க் நிஃப்டியில் ஒரு வலிமையான உந்துதல் இல்லாமல் இருந் திருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். நிஃப்டி குறியீட்டை மிக உயரத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய பேங்க் இண்டெக்ஸ், எக்ஸ்பைரி நாளன்று ஏற்பட்ட கூர்மையான நகர்வுக்குக் கலவையான காரணங்கள் இருந்தன. கால் ஆப்ஷன் மற்றும் புட் ஆப்ஷன் ஆகிய இரண்டு கலவைகளையும் கொண்ட எக்ஸ்பைரி, டிமாண்ட் அதிகமான பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது, அந்நிய முதலீடு குறைந்தது, எம்.எஸ்.சி.ஐ குறியீடு மாற்றி அமைப்பு மற்றும் மாத இறுதி போன்றவைதான் இந்த வகையான விலை நகர்வுக்குக் காரணமாக அமைந்தன.
எப்போதாவது சில இண்டெக்ஸ் நகர்வுகளில் சென்டிமென்ட் அதிகரிக்கும்போது, மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலையில் ஏற்படும் தொடர் பாதிப்பு, சென்டிமென்ட் அடிப்படையில் விலையை நகர்த்துவதாகத் தோன்றும்.

கூடவே, பங்குச் சந்தைகளில் கொள்கை அளவில் சில மாற்றங்களும் அதாவது, பங்குகளின் மார்ஜின் அதிகரிப்பு, வர்த்தகத் தடை விதிக்கப் பட்ட பட்டியல்களுக்குப் பங்குகளை மாற்றுவது, எஃப் அண்டு ஓ-வில் பங்குகளை செட்டில் செய்யும் அமைப்பு போன்றவற்றைக் குறிப்பிட லாம். இவையெல்லாம் வர்த்தகத்தில் கூடுதல் குழப்பங்களை ஏற்படுத்தியது.
மேலும், நிதிநிலை முடிவுகள் வெளியாவது தற்போது முடிந்துவிட்டது. எனவே, சந்தைத் தனது நகர்வுக்காக மற்ற சில செய்திகளைத் தேட வேண்டியுள்ளது. இதுபோன்ற சமயங்களில், இந்தியப் பங்குச் சந்தையில் சர்வதேசச் செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தற்போதைக்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வது, டாலர் மதிப்பு கூடிக்கொண்டே போவது, அமெரிக்க பங்குச் சந்தை ஏற்ற இறக்கமான போக்குக்குத் திரும்பி யிருப்பது, வளரும் நாடுகளின் கரன்சிகளின் மதிப்புக் குறைந்துவருவது எனச் சர்வதேசச் செய்திகள் அத்தனை நல்லவிதமாக இல்லை. இது சந்தையில் ஒரு குறுகிய கால ஏற்ற இறக்கமான போக்குக்குக் காரணமாக வழிவகுக்கும் என்பதால், பங்கு வர்த்தகம் செய்வது கடினமாக இருக்கும்.
எனவே, குறிப்பிட்ட சில பங்குகளைத் தேர்ந்தெடுத்து வியாபாரம் செய்வது நல்லதாக இருக்கும். அதுவும்கூட குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். சந்தையின் போக்கு தெளிவாக இல்லை என்பதால், பங்குகளை விரட்டிச் செல் வதற்குப் பதில், ஓரமாக ஒதுங்கி இருந்து சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதே நல்லது.
ஜூன் மாத சந்தையின் தொடக்கம் இலேசான உயர்வுடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. என்றாலும், தொடர் ஏற்றத்துக்கான சாதகமான செய்திகள் வருவது நமக்கு அவசியமாக உள்ளது. இல்லையெனில், கடந்த மாதத்தில் நிஃப்டி 10300 புள்ளிகள் என்ற அளவுக்குக் குறைந்த நிலையில், அந்த நிலைக்கு மீண்டும் கீழிறங்கலாம். மாதத்தின் தொடக்கத்தில் கால் ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரஸ்ட் 11,000-மாக உள்ள போதிலும், ஜூன் மாதம் இந்த உயர்வை முறியடிக்க வாய்ப்பில்லை.

என்சிசி (NCC)
தற்போதைய விலை : ரூ.120.10
வாங்கலாம்
இந்தியாவில் பாலங்கள், நீர்வழித் தடங்கள் மற்றும் வீடுகள் கட்டும் பணிகளில் ஈடுபட்டுவரும் மிகப் பெரிய நிறுவனம் என்.சி.சி கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் கணிசமான புதிய பணி ஒப்பந்தங் களைப் பெற்று, வெற்றிகரமாக நிறைவேற்றி நம்பிக்கையோடு இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ரூ.115-120-க்கு அருகிலேயே நீண்ட காலமாக நிலைபெற்று தற்போது ஒரு பிரேக் அவுட்டை நோக்கிச் செல்கிறது. பங்கு விலையானது ரூ.150-160 வரை உயரக்கூடும். ரூ.110 ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

ஃபைஷர் இந்தியா (PFIZER)
தற்போதைய விலை : ரூ.2565.00
வாங்கலாம்
பங்குச் சந்தையானது முன்னாள் முன்னணி பார்மா நிறுவனப் பங்குகளுக்கு நல்ல மதிப்பைத் தர விரும்புகிறது. ஆனால், அதற்கேற்ப அவை செயல்படுவதில்லை. அதேநேரத்தில், நீண்ட காலமாகத் தளராமல் போராடும் ஃபைஷர் நிறுவனப் பங்கு, சார்ட்டில் நல்லதொரு பேட்டர்னைக் காட்டுகிறது.
புதிதாகப் பலரும் இந்தப் பங்கினை வாங்குவதால், விலை உயர்ந்து வருவதைக் காண முடிகிறது. இதன் பங்கு விலை பிரேக் அவுட்டாகி மேல்நோக்கிச் செல்கிறது. இதன் போக்கு வாங்குவதற்கான அறிகுறியுடன் சற்றுக் கவர்ச்சிகரமாக உள்ளது.
தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2,450 எனவும், இலக்கு விலை ரூ.2,650.

டைம் டெக்னோபிளாஸ்ட் (TIMETECHNO)
தற்போதைய விலை : ரூ.152.35
வாங்கலாம்
சமீபத்திய காலாண்டு முடிவு நன்றாக வந்ததால், இந்த நிறுவனப் பங்கைப் பலரும் புதிதாக வாங்கும் ஆர்வம் உருவாகியது. ஒரு சரிவுக்குப்பிறகு இதன் விலை நல்லபடியாக மேல்நோக்கி உயர்ந்தது.
பின்னர் கடந்த நான்கு மாதங்களாக இதன் விலை 50% கீழிறங்கியுள்ளது. தற்போது மீண்டும் மறுமலர்ச்சியுடன் மேலேறுவதற்கான சமிக்ஞை காட்டுவதுபோல் உள்ளது.
எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ரூ.140-க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். குறுகிய கால இலக்கு விலை ரூ.185-190.
தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.