நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்!

மார்ச் காலாண்டு முடிவுகள் - ஒரு பார்வை

2017
-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.7% இருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். முதல் காலாண்டில் 5.6%, இரண்டாவது காலாண்டில் 6.3%, மூன்றாவது காலாண்டில் 7% எனச் சீராக முன்னேற்றமடைந்து வந்த நமது நாட்டின் பொருளாதார விகிதம், தற்போது 7.7 சதவிகிதமாக உள்ளது. நான்காம் காலாண்டில் இந்த அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டாலும், முழு நிதியாண்டுக்குமான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாகவே உள்ளது. இது, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 0.4% குறைவாகும்.  

காலாண்டு முடிவுகள்!

வளர்ச்சிக்கு உண்மையான காரணம்   
   
அதிலும் 2017-18-ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கான அதிக பங்களிப்பு அதிக வரி விதிப்பு மூலம்தான் கிடைத்துள்ளதே தவிர, பொருளாதார நடவடிக்கைகளால் அல்ல. எனவே, ஜி.டி.பி வளர்ச்சிக்குப் பொருளாதார செயல்பாடுகள், விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை இன்னும் அதிக தேவையாக உள்ளது.   
   
நிறுவனங்களின் செயல்பாடு   
   
2017-18-ம் நிதியாண்டில் பல்வேறு துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட்டே தீரவேண்டும். வேளாண் துறை வளர்ச்சி, முந்தைய நிதியாண்டைக் காட்டி லும் 3% குறைவடைந்துள்ளது. அதேபோன்று, சுரங்கத் துறை வளர்ச்சி 10%, உற்பத்தித் துறை வளர்ச்சி 2.2% குறைந்துள்ளது. நுகர்பொருள் பயன்பாட்டு வளர்ச்சி 2% குறைந்துள்ளது.  
    
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புச் சேவைகள் போன்றவை 0.8% வளர்ச்சியடைந்து உள்ளன. அதேபோல நிதித் துறை, ரியல் எஸ்டேட்  போன்றவை 6.6% வளர்ச்சியடைந்துள்ளன.        

காலாண்டு முடிவுகள்!

முடிவடைந்த மார்ச் காலாண்டில் நிறுவனங் களின் வருவாய் சுமார் 10.8% வளர்ச்சி அடைந்து உள்ளது. அதேநேரத்தில்,  செலவினங்கள் அதை விட அதிக வேகமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வரிக்குப் பிந்தைய லாபம் 1.7% என மோசமான நிலையில் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.    
  
துறை ரீதியான பார்வை
      
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் உலோகங்கள் மற்றும் சுரங்கம், பெரு நிறுவனங்கள், சிமென்ட் மற்றும் கட்டுமானத் துறை போன்றவற்றின் விற்பனை வளர்ச்சி அதிகரித்து, நிகர லாபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதேசமயம், இன்ஜினீயரிங் மற்றும் மூலதன பொருள்கள், நுகர்வோர் பொருள்கள் மற்றும் வாகனத் துறை போன்றவை இதுபோன்ற வளர்ச்சியைக் காட்டவில்லை.   
   
நிதித் துறையின் (வங்கிகள்) நிகர லாப வளர்ச்சியும் குறைந்துள்ளன. பொதுத் துறை வங்கிகள், சில தனியார் வங்கிகள் மற்றும் சில சிறிய வங்கிகளின் வாராக் கடன் பிரச்னையே இந்த லாப குறைவுக்குக் காரணமாக இருந்தது. 

காலாண்டு முடிவுகள்!

ஐ.டி துறையைப் பொறுத்தவரை, அது ஆச்சர்யப்படத்தக்க வகையில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஐ.டி நிறுவனங்களின் லாப விகிதத்தில் லேசான சரிவு காணப்பட்டாலும், நான்காம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே நடுத்தர அளவு ஐ.டி நிறுவனங்களின் லாப விகிதம் அதிகரித்து வருவது இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.    
  
முதலீட்டு வியூகம்   
   
இந்தச் சூழலில் நமது முதலீட்டு வியூகம் எப்படி இருக்க வேண்டும்? பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எவையெவை நல்ல முடிவுகளைக் காலாண்டு அறிக்கையில் காட்டியுள்ளனவோ, அந்த நிறுவனங்களின் பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். எந்தத் துறையில் எந்தப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிற விவரத்தை 30-ம் பக்கம் பார்க்கவும்.  
    
தொகுப்பு: பா.முகிலன்   

கலைச் சொற்கள்!

நி
றுவனங்களின் காலாண்டு முடிவுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம். 

காலாண்டு முடிவுகள்!


இ.பி.எஸ்.! (Earnings per share)

ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ். எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பி/பி.வி.! (Price to Book Value)

நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

புத்தக மதிப்பு! (Book Value)

ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்!  (Market Capitalization)

ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

முக மதிப்பு! (Face Value)

ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

செயல்பாட்டு லாப வரம்பு! (Operating Profit Margin)

நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை, அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம் செயல்பாட்டு லாபம். இந்த லாபம், விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

பி/இ விகிதம்! (Price to Earnings Ratio)


ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.சரவணன்.  

காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!
காலாண்டு முடிவுகள்!

 தொகுப்பு: தெ.சு.கவுதமன், கே.எஸ்.தியாகராஜன், எம்.வி.அச்சய சங்கர்