நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!

காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

ந்தியப் பொருளாதாரம் 2018-19-ம் நிதியாண்டில் 7.4% வளர்ச்சி அடையும் என்றும், 2019-20-ம் நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம்  7.5 சதவிகிதமாக இருக்கும் என்றும்  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) அறிக்கை தெரிவிக்கிறது.  

காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!

அதேசமயம், சர்வதேசத் தரமதிப்பீட்டு ஏஜென்சியான ஃபிட்ச், 2018-19-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும் என்றும், 2019-20-ம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சி காணும் என்றும் சொல்லியிருக்கிறது. 

காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!



முடிந்த 2017-18-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நமது ஜி.டி.பி வளர்ச்சி 7.7 சதவிகித மாக உள்ளது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி ஆகும். 

அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அதிக வட்டி விகிதம், வங்கிகளில் வாராக் கடன் அதிகரிப்பது போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரம் சிலபல பிரச்னைகள் எதிர்கொண்டிருக்கிறது. 

மத்திய, மாநில அரசுகளின் முதலீடுகள் தேக்கநிலையில் இருக்கும் சுழலில், தனியார் முதலீட்டை முடுக்கி விடுவதன் மூலமே இந்தியப் பொருளா தார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும்.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டால் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். தற்போதைய நிலையில், பெரிய நிறுவனங்கள், செலவு குறைப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன. இதற்குப் பல நிறுவனங்கள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. மேலும், பல நிறுவனங் கள் புதிய பொருள்கள் அறிமுகம், விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி கண்டுவருகின்றன.  

காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் பங்குகள்!

குறிப்பாக, வாகனம், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் தயாரிப்பு,  சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்தப் போக்கு அதிக மாகக் காணப்படுகிறது. இதனால், தனிப்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம் வளர்ச்சி காண ஆரம்பித்து உள்ளது. இது, இந்த நிறுவனப் பங்கு களிலும் கூடியவிரைவில் எதிரொலிக்கும்.  
       
காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் எந்தெந்தத்  துறையில் எந்தப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்கிற விவரத்தை அட்டவணையில் பார்க்கவும்.

தொகுப்பு: பா.முகிலன்