நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கான (எஃப்.ஐ.ஐ-கள்) வரம்பை ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகப்படுத்தியதால், இந்த வாரம் பங்குச் சந்தை சில சாதகமான எதிர்பார்ப்புகளுடனேயே தொடங்கியது. ஆனால், ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்குகளை வாங்க எஃப்.ஐ.ஐ-கள் அதிக ஆர்வம் காட்டாததால் ஏற்பட்ட திருப்பம், சந்தையின் சென்டிமென்டை மாற்றி அமைத்தது. இந்த வாரம் மீண்டும் ஒருமுறை 80% லார்ஜ்கேப் பங்குகளுடன் இண்டெக்ஸ் நகர்வு வலுவான அறிகுறியைக் காட்டவில்லை. 
சந்தையின் போக்கு பெரும்பாலும் நடுநிலையைக் காட்டிய நிலையில், வாரத் தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய சந்தை, கடைசி இரு தினங்களில் மீண்டதற்கு ஷார்ட் கவரிங்தான் முக்கியக் காரணமாக அமைந்தது. மெட்டல், ஆட்டோ மற்றும் ஐ.டி துறைப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டார்களின் ஆர்வம் ஸ்திரமாகக் காணப்பட்டது. ஆனால், மிட்கேப் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போதைக்கு சந்தையை முடுக்கிவிடுவதற்கான உள்நாட்டு நிகழ்வுகளோ அல்லது செய்திகளோ ஏதும் இல்லாத நிலையில், வெளிநாட்டு நிகழ்வுகள் அல்லது செய்திகள்தான் சந்தையின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும். சந்தைகள் தற்போது செய்திகளின் பிடியில் உள்ளதோடு, எந்தவிதமான போக்கிலும் நிலைகொள்ள முடியாமலும் உள்ளன. சந்தையின் ஏற்றமான போக்கு நீடிப்பது பாசிட்டிவ்வான எண்ணத்தை ஏற்படுத்தினாலும், அது பங்குகளை விற்பதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது என்பதால், அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை அது குறைக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



சார்ட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, விலை குறையும் போதெல்லாம் பங்குகளை வாங்கி, சந்தை ஏற்றமடையும்போதெல்லாம் விற்கும் அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நிஃப்டிக்கான அதிகபட்ச உயர்வாக, 2018 ஜனவரியின் உச்சத்துக்குச் சவால் விட்டு, அதையும் தாண்டும் வகையில், 10850 புள்ளிகள் வைத்துக்கொள்ளலாம். குறைந்த பட்சமாக, 10570 புள்ளிகள் வைத்துக் கொள்ளலாம். இது, மார்ச் இறுதிக்குப் பின்னர் சமீபத்தில் காணப்பட்ட உயர்வின் மூன்றில் ஒரு பங்கு என்பதோடு, அதுதான் நிஃப்டியை 10380 முதல் 10350 வரை, கொண்டு செல்லுமா என்பதைக் காண்பதற்கான முக்கிய ஆதரவாக அமையும். மேலும், அங்கேதான் ஒரு வலுவான மீட்சிக்கான சப்போர்ட்  உருவாகக்கூடும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டி, 26000 முதல் 27000 புள்ளிகள் இடையே ஒரு வலுவான ஃபிபோனாச்சி சீரீஸ் மற்றும் மீடியன் லைன் ரெசிடன்ஸில் இருக்கும். இந்த வரம்பிலிருந்து வெளியேவரும் வரைக்கும் இண்டெக்ஸில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து நீடிப்பதால், அது தொடர்ந்து நிஃப்டியின் ஏதாவது ஒரு பக்க நகர்வுக்கான ஓர் ஊக்கியாக இருக்கும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் (GODREJCP)
 
தற்போதைய விலை: ரூ.1,164.70

வாங்கலாம்


கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ், நுகர்வோர் விற்பனைப் பொருள்கள் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம், சோப்பு, திரவ சோப்புகள், தலைமுடி சாயப் பொருள்கள் மற்றும் டாய்லெட் கிளீனர்கள் தயாரிப்பில் தனிக்கவனம் செலுத்திவருகிறது. கடந்த ஆண்டும், அதற்குமுன்பும் எல்லாத் தயாரிப்புப் பொருள்களும் கொண்ட பேலன்ஸான  ஃபோர்ட்ஃபோலியோ உருவாக்குவதற்காக தனது தயாரிப்புகளில் சில மறுசீரமைப்புகளைச் செய்தது. அதன் காரணமாக மிகவும் வலுவான காலாண்டு முடிவுகளைக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதன் நீண்ட கால ரெசிஸ்டன்ஸ் 1,130-1,150-க்கு அருகே பிரேக் அவுட்டாகி, மேலும் முன்னேறப் பார்க்கிறது. குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.1,225-க்கு அதிகரிக்கக்கூடும். ஸ்டாப்லாஸ்           ரூ.1125-ஆக வைத்து முதலீடு செய்யவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் (VIPIND)

தற்போதைய விலை: ரூ.432.00

வாங்கலாம்


இந்த நிறுவனத்தின் வலுவான நான்காம் காலாண்டு முடிவுகளின் காரணமாகத் தொடர்ச்சியாக, இதன் பங்குகளில் பிராஃபிட் புக்கிங் (பங்குகளை விற்று லாபம் பார்த்தால்) நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

பங்கின் விலையானது மூவிங் ஆவரேஜ் அருகே நிலைபெற்றிருக்கும் சமயத்தில்,  மொமென்டம் இண்டிகேட்டர்கள் பங்கின் விலை உயரக்கூடும் என சுட்டிக் காட்டுகின்றன. பங்கின் விலை இறங்கும்போது எல்லாம் முதலீட்டாளர்களிடையே ஆர்வம் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. தற்போதைய விலையில் இதன் பங்குகளை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.409 வைத்துக்கொள்ளவும். நடுத்தர கால இலக்கு விலை ரூ.490.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

க்ருஹ் ஃபைனான்ஸ் லிமிடெட் (GRUH)

தற்போதைய விலை: ரூ.362.55

வாங்கலாம்


ரிசர்வ் வங்கி, அண்மையில் ரெப்போ வட்டியை உயர்த்திருப்பது நிதி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை (போனஸ்) அளித்தது. இதனை அடுத்து பங்கு விலை மேலும் உயரத் தொடங்கியுள்ளது.

இந்த விலை உயர்வானது, பங்கை ஏற்றத்தின் போக்குக்கு மாற்றியிருக்கிறது. தற்போதுள்ள விலையில் மற்றும்     ரூ.330-க்கு இறங்கும் வரை முதலீடு செய்யலாம். ரூ.315-க்கு கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். குறுகிய கால இலக்கு விலை ரூ.415.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.