நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனங் களின் ஜூன் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
சென்ற ஏப்ரல் 1-ம் தேதி 17465 புள்ளிகள் என்ற நிஃப்டி குறியீடு ஜூன் காலாண்டில் கடுமையான சரிவைச் சந்தித்தது. பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, வங்கிகளில் வட்டி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இந்தப் பெரிய சரிவைச் சந்தித்தது. வரும் காலாண்டில் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பங்கு விலை உயர வாய்ப்பிருப்பதால், ஜூன் காலாண்டு முடிவுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


சென்ற வாரம் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட சில முன்னணி நிறுவனங்களைப் பார்ப்போம்.

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services)

நமது நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5.2% அதிகரித்து, ரூ. 9,478 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 16.2% அதிகரித்து, ரூ.52,758 கோடியாக உள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.8 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. பல முன்னணித் தரகு நிறுவனங்களின் கணிப்பைவிட லாபம் குறைந்த தால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 5% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. பல்வேறு பொருளாதாரக் காரணிகள் காரணமாக ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் வரும் ஆண்டில் மந்தமாகும் என்று முன்னணி வெளிநாட்டு பங்குத் தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் தெரிவித்திருக்கிறது.

சென்ற காலாண்டில் அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளும் 40% வரை சரிந்துள்ளன. அதிக ஆட்களை பணி அமர்த்தியதும், ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தித் தந்ததும் லாப விகிதம் குறைந்ததற்கு முக்கியமான காரணங்கள் என டி.சி.எஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது கையிருப்பில் கணிசமான அளவு ஒப்பந்தங்கள் உள்ளதாகவும், பொருளாதாரத் தேக்க நிலையானது தற்போதைய நிலையில் பெரிய பாதிப்புகளை தமது நிறுவனத்தில் ஏற்படுத்தாது என்றும் டி.சி.எஸ் தெரிவித்துள்ளது.

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

டி மார்ட் (D Mart)

முன்னணி ரீடெயில் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5 மடங்கு உயர்ந்து, ரூ.680 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்து, ரூ.9,807 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், பல சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் முழுமையாக இயங்கவில்லை. ஆனால், சென்ற காலாண்டில் எந்தத் தடையுமின்றி முழுமையாக அனைத்து நாள்களிலும் தமது சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் வேலை செய்ததன் காரணமாக இந்த அதிக வருவாயை ஈட்டியுள்ளதாக இந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)

மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.4% அதிகரித்து, ரூ.3,283 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 16.9% அதிகரித்து, ரூ.23,464 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்குகிறது. இந்தத் தொகையையும் சேர்த்து சென்ற ஆண்டில் ஒரு பங்குக்கு ரூ.42 டிவிடெண்ட் வழங்கியுள்ளது.

ஆனந்த் ரதி வெல்த் (Anandh Rathi Wealth)

சென்ற ஆண்டு ஐ.பி.ஓ வெளியிட்ட முன்னணி முதலீட்டுச் சேவை வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 33% அதிகரித்து, ரூ.39.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 35.7% அதிகரித்து, ரூ.133 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் முதலீட்டு கலவை யின் அளவு சென்ற காலாண்டில் 15% அதிகரித்து, ரூ. 32,961 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள் சென்ற காலாண்டில் சிறப்பாக உள்ள தாகவும் அதிக வாடிக்கையாளர் களைப் புதிதாக சென்ற காலாண்டில் சேர்த்துள்ளதாக வும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா கார்ப் (Delta Corp)

முன்னணி கேசினோ மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி சேவைகள் வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ஜூன் காலாண்டில் 3.3% அதிகரித்து, ரூ.218 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் லாபம் 8% அதிகரித்து, ரூ.57.13 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.25 டிவிடெண்ட் வழங்குகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக கடுமையான அழுத்தத்தில் இருந்த விருந்தோம்பல் துறை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதை இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் காட்டுகின்றன.

கோவா கார்பன் (Goa Carbon)

முன்னணி மெட்டல் துறை சார்ந்த நிறுவனம் இது. இதன் நிகர வருமானம் ஜூன் காலாண்டில் ரூ.206 கோடியாக உள்ளது. நிகர வருமானம் சென்ற காலாண்டைவிட கணிசமாக உயர்ந்து, ரூ14.5 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்