நடப்பு
Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

பங்குச் சந்தை

##~##

சந்தையின் சூழ்நிலை சரியில்லாதக் காரணத்தினால் கடந்த இதழில் எந்தப் பங்கினையும் நான் பரிந்துரை செய்யவில்லை. மேலும், கடந்த வாரம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் எந்தப் பங்கும் சராசரி ஆகவும் இல்லை; அதேபோல இலக்கு விலையை அடைந்து வெளியேறவும் இல்லை. அதனால் நமது போர்ட்ஃபோலியோ எந்த மாறுதலும் அடையவில்லை.

சந்தையின் போக்கு எப்படி?

சென்செக்ஸ் 20000 புள்ளி களுக்கு மேலேயும், நிஃப்டி 6000 புள்ளிகளுக்கு மேலேயும் முடிவடைந்திருந்தாலும் பெரும்பாலான பங்குகளில் எந்தவிதமான ஏற்றமும் இல்லை. குறியீட்டில் இருக்கும் சில பங்குகள் உயர்ந்ததன் காரணமாக இந்த ஏற்றம் நடந் திருக்கிறது. குறிப்பாக, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் எந்தவிதமான ஏற்றமும் இல்லை. மாறாக, இறங்குவதற்கானச் சூழ்நிலை நிலவி வருகிறது. இருந்தாலும் இது காலாண்டு முடிவுகள் வெளியாகும் காலம் என்பதால் முடிவுகள் வெளிவருவதைப் பொறுத்து பங்குகளின் ஏற்றம் இருக்கும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

5920 புள்ளிகளுக்கு கீழே சந்தை செல்லாத வரை சந்தை யில் பெரிய இறக்கம் இல்லை. ஒருவேளை அதற்கும் கீழே செல்லும்பட்சத்தில் 5600 புள்ளிகள் வரை செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

போர்ட்ஃபோலியோ நிலைமை !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

ஏற்கெனவே சொன்னதுபோல சந்தை உயர்ந்திருந்தாலும், அனைத்துப் பங்குகளும் உயரவில்லை.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

இதற்கு நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளும் விதிவிலக்கல்ல. மாறாக, சில பங்குகள் இறங்கி இருப்பதால் நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் சிறிதளவு சரிந்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் 16 பங்குகள் இருக்கிறது. இன்னும் நான்கு பங்குகளை வாங்கிச் சேர்க்க முடியும் என்றாலும், இந்த வாரம் ஒரு பங்கை மட்டுமே வாங்குவோம். இந்த வாரம் டி.வி.எஸ். மோட்டார்ஸ் பங்கினை வாங்கவும்.

முதல்முறை வாங்கும்போது எப்போதுமே 2,500 ரூபாய்க்கு மட்டுமே வாங்குவோம். தற்போதையச் சூழ்நிலையில் பெரிய சரிவினை எதிர்பார்க்க முடியாததால் முதல்முறையே 5,000 ரூபாய்க்கு வாங்கவும். 25 சதவிகிதம் அதிகமானால் விற்றுவிடவும். அதேபோல, 25 சதவிகிதம் சரிந்தால் மீதமுள்ள 5,000 ரூபாய்க்கு சராசரி செய்யவும். சந்தை உச்சத்தில் இருப்பதால் போர்ட்ஃபோலியோவை கவனித்து வரவும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட் ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.