
காலாண்டு முடிவுகள்
நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை பல நிறுவனங் கள் வெளியிட்டு வருகின்றன. சில நிறுவனங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)
பிர்லா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 22.8% குறைந்து, ரூ.1,313.5 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 1.6% உயர்ந்து, ரூ.12,016.8 கோடியாக உள்ளது.
நிலக்கரி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததுதான், இந்த நிறுவனத்தின் லாப விகிதம் குறைய முக்கியமான காரணம். நாட்டில் இன்ஃப்ரா துறை வளர்ச்சி வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும் என்பதால், வரும் காலத்தில் சிமென்ட்டின் தேவை அதிகரிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்சி பேங்க் (HDFC Bank)
நமது நாட்டின் முதன்மையான தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 17.6% உயர்ந்து, ரூ.8,834 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 12.1% உயர்ந்து, ரூ.17,684 கோடியாக உள்ளது. வங்கியின் வாராக்கடன் சென்ற காலத்தைவிட குறைந்துள்ளது.
காசா (CASA) என்று அழைக்கப்படும் கரன்ட் மற்றும் சேவிங்ஸ் அக்கவுன்டில் உள்ள தொகை அதிகரித்துள்ளது. வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கடன் அட்டை வழங்க ஆர்.பி.ஐ விதித்த தடை கடந்த காலாண்டில் நீக்கப்பட்டதால், புதிய கடன் அட்டை வழங்குவது அதிகரித் துள்ளது. இவ்வாறு கடந்த காலாண்டு முடிவுகள் அனைத்து அம்சங்களிலும் சிறப்பான வளர்ச்சியை வங்கித் தரப்பில் கொண்டுள்ளதாக இருக்கிறது.

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 1.6% உயர்ந்து, ரூ.3,265 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படை யில் 46.6% உயர்ந்து ரூ.7,789 கோடி யாக உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வருடாந்தர அடிப் படையில், 38% புதிய வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. மேலும், சென்ற ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11,135 பணியாளர்களை நிறுவனம் புதிதாக நியமித்துள்ளது.
ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடென்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது. காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, இந்த நிறுவனப் பங்குகளை வாங்கும்படி பல முன்னணி பங்குத் தரகு நிறுவனங் கள் பரிந்துரை செய்துள்ளன.
இன்ஃபோசிஸ் (Infosys)
நமது நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 20.48% உயர்ந்து, ரூ.29,602 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 11.89% உயர்ந்து ரூ.5,421 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் எபிட்டா வருடாந்தர அடிப்படையில் 9.17% உயர்ந்து ரூ.8,355 கோடியாக உள்ளது. நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் ரூ.11.42 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.12.88 ஆக உயர்ந்துள்ளது. ரூ.1,700 என்ற அளவில் வர்த்தக மாகும் இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.2,000 வரை அதிகரிக்கும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.
விப்ரோ (Wipro)
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 20.16% உயர்ந்து ரூ.14,720 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 6.39% அதிகரித்து ரூ.2,387.40 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 8.8% உயர்ந்து ரூ. 3,597.60 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3.94 ஆக இருந்த இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் தற்போது ரூ.4.37 ஆக உயர்ந்துள்ளது.
அவென்யூ சூப்பர் மார்க்கெட் (Avenue Super Market)
முன்னணி ரீடெயில் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 110% உயர்ந்து ரூ.418 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 46.6% உயர்ந்து ரூ.7,789 கோடியாக உள்ளது. இதன் பங்கின் இ.பி.எஸ் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.7.92 ஆக உள்ளது. காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகள் தனது உச்சபட்ச நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
எல் & டி இன்ஃபோடெக் (L&T Infotech)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற ஜூன் காலாண்டைவிட 11.1% அதிகரித்து ரூ.551.7 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டைவிட 8.8% அதிகரித்து ரூ.3,767 கோடியாக உள்ளது.
இரண்டாவது காலாண்டின் அதிகபட்ச லாபத்தை சென்ற செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் ஈட்டியுள்ளதாக மகிழ்ச்சியுடன் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைண்ட்ட்ரீ (MindTree)
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 34.28% அதிகரித்து ரூ.2,586.2 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 57.23% அதிகரித்து ரூ.398.9 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத் தின் எபிட்டா வருடாந்தர அடிப்படையில் 45.97% உயர்ந்து, ரூ.605.5 கோடியாக உள்ளது. நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் ரூ.15.41 என்ற கடந்த கால அளவில் இருந்து ரூ.24.2 ஆக அதிகரித்துள்ளது.
டாடா காபி (Tata Coffee)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படை யில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 26.55% உயர்ந்து ரூ.53.66 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 1.4% உயர்ந்து ரூ.546.63 கோடியாக உள்ளது.
ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் (Hatsun Agro Products)
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 20.75% உயர்ந்துரூ.1,544.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 3.96% அதிகரித்து ரூ.5,833 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா வருடாந்தர அடிப்படையில் 5.76% உயர்ந்து ரூ.179.43 கோடியாக உள்ளது.
தொகுப்பு: எஸ்.பிரமேஷ்