பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

என்.எம்.டி.சி, செயில், ஏ.சி.சி ரிசல்ட் எப்படி?

காலாண்டு  முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

இந்த வாரம் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட முக்கிய நிறுவனங்களின் தொகுப்பை இங்கு பார்ப்போம்.

ஹிண்டால்கோ (Hindalco)

காப்பர் மற்றும் அலுமினியம் தயாரிப்பில் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த முதன்மையான நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 95.79% உயர்ந்து ரூ.3,675 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 43.8% உயர்ந்து ரூ.50,272 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா சென்ற காலாண்டில் 38% உயர்ந்து ரூ.7,624 கோடியாக உள்ளது. நிறுவனம் சென்ற காலாண்டில் முன் எப்போதும் இல்லாத அதிகபட்ச லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அலுமினியம் விலை தற்போது உச்சத்தில் உள்ளதால் வரும் காலங்களில் இந்த நிறுவனத் தின் பங்கு விலை மேலும் உயரும் என்று பல பங்கு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஸொமேட்டோ (Zomato)

சென்ற ஆண்டு பங்கு வெளியிட்ட உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் கணிசமாகக் குறைந்து, ரூ.67 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.353 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 82.7% உயர்ந்து, ரூ.1,112 கோடியாக உள்ளது. புதிய உணவு டெலிவரிகளின் எண்ணிக்கை 93% அதிகரித்துள்ளது. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதன் பங்கு வெளியீட்டு விலைக்குக் கீழ் இறங்கி வர்த்தகமாகியது.

என்.எம்.டி.சி, செயில், ஏ.சி.சி ரிசல்ட் எப்படி?

பவர் கிரிட் (Power Grid)

மின்சார க்ரிட்கள் தயாரிப்பில் அரசுத் துறை சார்ந்த முதன்மையான நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 2% குறைந்து, ரூ.3,293 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 3% உயர்ந்து, ரூ.10,447 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.5.50 வழங்குகிறது.

என்.எம்.டி.சி (NMDC)

இரும்புத் தாது தயாரிப்பில் அரசுத் துறை சார்ந்த முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 5% குறைந்து, ரூ.2,050 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 34.87% உயர்ந்து, ரூ.5,874 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடண்ட் ரூ.5.73 வழங்குகிறது. இரும்புத் தாது விலைக் குறைவு காரணமாக சென்ற வாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சற்றுக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

ஹீரோ மோட்டோ கார்ப் (Hero Motorcorp)

இரு சக்கர வாகனம் தயாரிப்பில் முதன்மை யான நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 19% குறைந்து ரூ.686 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 34.87% உயர்ந்து ரூ.7,883 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.5.73 வழங்குகிறது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனம் தயாரிப்பதற்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. மேலும், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான ஏதர் மற்றும் கோகோரோ நிறுவனங்களில் இந்த நிறுவனம் அதிக அளவு முதலீடு செய்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ.60 டிவிடண்ட் வழங்குகிறது.

செயில் (SAIL)

ஸ்டீல் உற்பத்தியில் அரசுத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 4.11% உயர்ந்து ரூ. 1,468 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 27.28% உயர்ந்து ரூ.25,246 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.3.55 என்று சென்ற ஆண்டின் அளவிலிருந்து சற்று உயர்ந்து ரூ.3.7 ஆக உள்ளது.

கோல் இந்தியா (Coal India)

நிலக்கரி தயாரிப்பில் அரசுத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 47.74% உயர்ந்து ரூ.4,558 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 20.04% உயர்ந்து ரூ.23,686 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.5.01 என்று சென்ற ஆண்டின் அளவிலிருந்து கணிசமாக உயர்ந்து ரூ.7.4 ஆக உள்ளது. மேலும் ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.5 வழங்குகிறது.

ஏ.சி.சி (ACC)

முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 40.56% உயர்ந்து ரூ.281 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 1.96% உயர்ந்து ரூ.4,145 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.25.16 என்று சென்ற ஆண்டின் அளவிலிருந்து குறைந்து, ரூ.14.95 ஆக உள்ளது. மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிய தொழிலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த நிறுவனத்துக்கு சாதகமான தாகப் பார்க்கப்படுகிறது.

ப்ரிக்கால் (Pricol)

கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் ரூ.13.31 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.379 கோடியாக உள்ளது. கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஆட்டோ மொபைல் துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் லாப விகிதம் சென்ற காலாண்டில் குறைந்து உள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் லாப விகிதம் சென்ற காலாண்டில் சற்றுக் குறைந்துள்ளது.

சன் டிவி (Sun TV)

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொலைக்காட்சி சேவைகள் வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 5.71% உயர்ந்து, ரூ.471 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 6.67% உயர்ந்து, ரூ.1,060 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.11.30 என்று சென்ற ஆண்டின் அளவிலிருந்து சற்று உயர்ந்து ரூ.11.96 ஆக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்