நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

ந்தியப் பங்குச் சந்தையின் இந்த ஆண்டுக்கான போக்கை, தினசரி நிகழ்வுகளே தீர்மானித்து வருகின்றன. சந்தை, சில தடுமாற்றங் களுக்குப்பிறகு உயர்ந்த நிலையிலேயே தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக நிஃப்டி குறியீடு மீள்வதற்காகச் சில முயற்சிகளை மேற்கொண்டது. இதன்பிறகு மத்திய பட்ஜெட்டுக்காக சந்தை காத்திருந்தது. அந்த முயற்சிகளின் பலனை வெள்ளியன்று காலையில் காண முடிந்தது. நிஃப்டி 12000 புள்ளிகளில் கரடியின் ஆதிக்கம் சிறிது காணப்பட்டது. இதனால், சந்தையின் போக்கு எச்சரிக்கை செய்கிறது. தற்போது பட்ஜெட்டுக்குப் பிந்தைய விளைவாக, பங்கின் விலை இறங்கினால் வாங்கவும். சந்தையின் ஏற்றத்தில் அதனை விற்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தபிறகு நிஃப்டி இண்டெக்ஸ் தற்போது மேல்நோக்கி நகர முயற்சி செய்கிறது. ஆனால், சார்ட்டில் தெரியக்கூடிய பெரிய அளவிலான சரிவு, அதன் நகர்வில் வாரக் கடைசியில் ஏற்பட்ட பெரிய மாறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, காளையின் போக்கு தொடர்வதாகத் தெரிகிறது. ஆனால், இறக்கத்தில் பங்குகளை வாங்குவதே விவேகமான ஒன்றாக இருக்கும்.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

நிஃப்டி 11765 என்ற புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது. அடுத்தகட்ட ஆதரவு நிலை 50 நாள் மூவிங் ஆவரேஜ் 11725 புள்ளிகள் வரம்பில் உள்ளது. இதுவே அடுத்த வாரம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப் பதற்கான முக்கிய வரம்பாக தற்போது உள்ளது. மொமென்டம் இண்டிகேட்டர் ஏற்றப்போக்கு இருக்கும் என்பதைக் காட்டுகிறது. இது நிஃப்டியை ஓரளவு மேல்நோக்கி இழுத்துச் செல்லும் என எதிர்பார்க்க வைக்கிறது.

இன்னொரு பக்கம், பேங்க் நிஃப்டியால் தொடர்ந்து முயற்சி செய்தும் 31800 புள்ளி களில் ஏற்பட்ட தடைகளை விலக்க இயல வில்லை. பேங்க் நிஃப்டி ஒவ்வொரு வாய்ப்பிலும் 31800 புள்ளிகளைக் கடக்க முயற்சி செய்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சந்தை மீள்வதற்கானதொரு முயற்சி யாகவே பட்ஜெட்டை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் சில சங்கடங்களை ஏற்படுத்துகிறது. பேங்க் நிஃப்டி 31800 புள்ளிகளைக் கடந்தால் மேலும் மேல்நோக்கிய நகர்வுக்கான வழி கிடைக்கலாம். பேங்க் நிஃப்டியின் அந்த நகர்வு, நிஃப்டி மீள்வதற்கு உதவும். வரவிருக்கும் வாரம் முதலீட்டாளர்களைச் சந்தையை நோக்கி ஈர்க்கும் காலமாக இருக்கக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBILIFE)

தற்போதைய விலை: ரூ.753.55

வாங்கலாம்

கடந்த மார்ச் மாத காலாண்டு முடிவில், இந்த நிறுவனம் நல்ல லாபத்தைத் தந்திருக்கிறது. இதன் பங்கின் விலை வரைபடம் வலுவாக, அதே சமயத்தில் ஏற்றத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

மேலும், மொமென்டம் இண்டிகேட்டர் பங்கு விலையின் ஏற்றத்தை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது. சில பிராஃபிட் புக்கிங் நடந்தாலும் இந்தப் பங்கானது ஏற்றத்தைத் தக்கவைத்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

குறுகிய காலத்தில் பங்கின் விலை 900 ரூபாய் வரை செல்லக்கூடும். தற்போதைய விலையில் அல்லது 675 ரூபாய்க்கு இறங்கும் வரையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் 630 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

லிண்டே இந்தியா (LINDEINDIA)

தற்போதைய விலை: ரூ.530.90

வாங்கலாம்.

பட்ஜெட் 2019 உரையில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருப்பது, இந்த நிறுவனப் பங்குக்குச் சாதகமான விஷயம். 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் பங்கின் விலை இறக்கத்தைச் சந்தித்தாலும், கடந்த சில வாரங்களாக இந்த நிறுவனத்தின் சாதகமான செயல்பாடுகள் இதன் பங்கு விலையை ஏற்றத்தில் வைத்திருக்கிறது. இதே நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என எதிர்பார்க்கலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.640.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாரிகோ (MARICO)

தற்போதைய விலை: ரூ.378.80

வாங்கலாம்.

எஃப்.எம்.சி.ஜி துறை சமீப காலமாக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துறையைச் சேர்ந்த மாரிகோ நிறுவனத்தின் பங்கு விலையும் ஏற்றத்தில் இருந்து வருகிறது. முந்தைய உச்சத்தை உடைப்பதற்கான போக்கு காணப் படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இறக்கத்தைச் சந்தித்தது. அதன் பிறகு பங்கு விலையானது தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவருகிறது. பங்கின் விலை 380 ரூபாய் என்கிற நிலையை அடையும்போது, மேலும் அதிக ஏற்றத்தைக்க் காணும். வருகிற நாள்களில் பங்கு விலையின் ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற சில வாரங்கள் வரை இந்த நிலை தொடரும் என மொமென்டம் உணர்த்துகிறது. அடுத்த சில மாதங்களின் பங்கின் விலை ரூ.425-க்கு உயரக்கூடும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர்

(டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.