நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

வியாழன் அன்று சப்ளை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், காளையின் போக்கு சற்று பாதித்தது!

ங்குச் சந்தையில் காணப்பட்ட தொடர் ஏற்றத்தின் காரணமாக நிஃப்டி 13,000 என்ற நிலையை எட்டியது. அதேபோல், பேங்க் நிஃப்டி குறியீட்டில் இன்னும் அதிக எதிர்பார்த்தபடியே 30,000 என்ற நிலையை ஏறக்குறைய எட்டியது.

ஆனால், அதன் பிறகு, சற்று பின்வாங்கியது. சந்தையில் சென்டிமென்ட் போதுமான அளவுக்கு நன்றாகவே இருந்தது. ஆனால், வியாழன் அன்று சப்ளை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், காளையின் போக்கு சற்று பாதித்தது. ஆனாலும், இறக்கம் பெரிய அளவில் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரம், இரண்டு நாள் வர்த்தக முடிவு நிலை இழந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கடந்த வாரக் கட்டுரையில் பீட்ச் ஃபோர்க் முறைப்படி தொடர்ந்து ஏற்றம் காணப்படும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறியிருந்தோம். ஆனால், காளையின் போக்கு சந்தையைப் போதுமான அளவு உயரத்துக்குக் கொண்டு செல்லவில்லை என்பது ஏமாற்றமே. சார்ட்டில் குறிப்பிட்டுள்ள படி, விலைநகர்வுகள் அவற்றின் ரெசிஸ்டன்ஸ் நிலையில் தோல்வி அடைந்துள்ளன. பேங்க் நிஃப்டி பேட்டர்ன் வரைபடத்தில் இடதுபுறமாகக் கட்டப்பட்டுள்ளது. அதில் விலை நகர்வுகள் உச்ச நிலையை எட்டிய பிறகு, இறக்கம் அடைந்திருப்பது தெரிகிறது.

நிஃப்டி விஷயத்தில் இறக்கமானது அதன் மீடியன் நிலையில் உள்ளது. இது இனிவரும் காலங்களில் சந்தையைப் பாதிக்குமா என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ரெசிஸ்டன்ஸ் நிலைகளில் மீண்டும் ஏற்றத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இறக்கத்துக்குப் பிறகான சில ஏற்றங்கள் உண்டாகலாம். ஆனால், பெரிய அளவில் ஏற்றத்தைத் தராது.

இதுபோன்ற ஊசலாடும் நிலையிலான பேட்டர்ன்கள் அவ்வப்போது உதவலாம். தினசரி சார்ட் பேட்டர்னில் அதன் சமீபத்திய உச்சங்களில் பெரிய அளவில் பிரச்னைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், விலைநகர்வுகள் ஆர்.எஸ்.ஐ அடிப்படையில் புதிய உச்சங்களை எட்டியுள்ளன. அதே நேரம், 60 நிமிட பேட்டர்னின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு சந்தையின் போக்கு விலகும் வகையிலான பேட்டர்ன்கள் தெளிவாக இருக்கின்றன. எனவே, சந்தையில் இனிவரும் வர்த்தக நாள் களில் ரியாக்ஷன் என்பது நடக்க வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

வியாழன் அன்றைய நிலையிலிருந்து நகர்வுகள் இறக்கத்தை நோக்கி தொடருமானால் சந்தையில் ரியாக்ஷனை நாம் பார்க்க முடியும். குறுகிய கால ஏற்றத்தின் போக்கானது இரண்டு குறியீடுகளும் வியாழன் அன்று உடைந்துள்ளது. இது மேலும் இறக்கம் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே உறுதி செய்கிறது.

வர்த்தகர்கள் சந்தையின் ரியாக்ஷன் அடிப்படையில் தங்களுடைய நிலைப்பாடுகளை விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம். அதே நேரம், நீண்ட கால முதலீட்டாளர்கள் ரியாக்ஷனுக்குக் காத்திருந்து அதன் பிறகு, இறக்கத்தின்போது வாங்கலாமா என்பதை முடிவு செய்யலாம்.

வாரோக் (VARROC)

தற்போதைய விலை ரூ.334.85

வாங்கலாம்

சில ஆட்டோ உதிரிபாக நிறுவனங்களின் பங்குகள் நல்ல டிமாண்டுடன் இருக்கின்றன. அவற்றில் தற்போது நல்ல செயல்பாட்டுடன் வாரோக் நிறுவனப் பங்கு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 20-ல் இந்தப் பங்கு உச்சத்தை எட்டிய பிறகு, இறக்கத்தைச் சந்தித்து வந்தது. தற்போது அந்த இறக்கம் முடிவுக்கு வந்து ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களுடன் உள்ளது.

இந்தப் பங்கு புதிய உச்சங்களை எட்டும் என்பதுடன், தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்தப் பங்கை ரூபாய் 315 ஸ்டாப் லாஸுடன் வாங்கலாம். குறுகிய காலத்தில் 385 வரை உயரும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

லெமன் ட்ரீ (LEMONTREE)

தற்போதைய விலை ரூ.34.75

வாங்கலாம்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் போன்றவையும் பாசிட்டிவான நிலையில் உள்ளன. இந்த கொரோனா பாதிப்பில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட துறைகளாக விமானச் சேவை மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது இந்தத் துறைகள் மீண்டுவந்து கொண்டிருக்கின்றன. தங்கும் விடுதி நிறுவனமான லெமன் ட்ரீ பங்கு மே 2019-க்குப் பிறகு, கடுமையான அழுத்தத்தில் இருந்து வந்தது. அதிகபட்சமாக 13 ரூபாய் வரை இறக்கம் கண்டது.

ஆனால், தற்போது மெல்ல மீண்டு வரத் தொடங்கி இருக்கிறது. இதன் சார்ட்டில் ஏற்றத்துக்கான பாட்டம் பேட்டர்ன் உருவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து ஏற்றம் காண்பதற்கான நல்ல வால்யூம்களுடன், மொமண்டமும் சிறப்பாக உள்ளது. இதன் அடுத்தகட்ட ரெசிஸ்டன்ஸ் ரூபாய் 37 என்ற நிலையில் உள்ளது. இந்த ரெசிஸ்டன்ஸ் தாண்டி வரும்பட்சத்தில் விலை நகர்வு 50-60 வரை உயரலாம். எனவே, ரூபாய் 28 ஸ்டாப் லாஸுடன் இந்த பங்கை வாங்கலாம்.

தேஜாஸ் நெட் (TEJASNET)

தற்போதைய விலை ரூ.106.95

வாங்கலாம்

இந்தப் பங்கில் பல வாரங்களாகத் தொடர் ஏற்றம் காணப்பட்டு வந்தது. நல்ல வலுவான மொமென்டம் இந்தப் பங்கை ஏற்றத்தின் போக்கில் வைத்திருக்க உதவியது. இந்தப் பங்கு ரூபாய் 132 என்ற நிலையைத் தாண்டி ஏற்றம் காண்பதற்கான சாத்தியங்களுடன் உள்ளது.

தற்போதைய போக்கு வலுவாகத் தொடரும் பட்சத்தில் இந்த நிலையைக் கடப்பது எளிதாக இருக்கும். எனவே, பங்கு 180 என்ற நிலையை வரும் ஆறு மாதங்களில் அடைய வாய்ப்புள்ளது. ரூ.95 ஸ்டாப் லாஸுடன் பங்கை வாங்கலாம்.