நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருக்கின்றன!

டந்த வாரத்தில் சந்தை சற்று மோசமாகவே இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் சந்தையில் காணப்பட்ட உற்சாகம், 12000 புள்ளிகளைக் கடக்கும் அளவுக்கு இருந்தது. அந்த உற்சாகம் கடந்த வாரம் காணாமல் போனது. இந்த மாதத்தில் மட்டும் நிஃப்டி 12000 புள்ளிகளைக் கடக்க மூன்று முறை முயற்சி செய்துள்ளது. பெரும்பாலான வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இந்த நிகழ்வைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இது நிகழ்ந்தால் ஏற்றமானது சிறப்பாக இருக்கும் என எண்ணினர். ஆனால், அப்படியொரு சிறப்பான ஏற்றம் நடக்கும் சாத்தியங்கள் காளையின் வசம் இல்லை.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

அதற்குப் பதிலாக இறக்கத்தின் போக்கிலான சென்டிமென்டில் இருந்து ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் மட்டுமே நமக்குக் கிடைத்தது. 14-ம் தேதி உச்சத்தை அடைந்த பிறகு, 11600 என்ற நிலைக்கு வரலாற்று இறக்கம் கண்டது. அதன் பிறகு 14-ம் தேதி அடைந்த உச்சத்தை நோக்கிய நகர்வுகள் இருந்து வந்த நிலையில், 29-ம் தேதி வியாழன் அன்று மீண்டும் 11660 என்ற நிலைக்குக் கீழே இறங்கி வர்த்தகமானது. இதனால் லோவர் பாட்டம் - லோவர் டாப் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. இது இறக்கத்தின் போக்கை மேலும் அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சூழல்களை சந்தை ஏற்கெனவே சந்தித்திருக்கிறது. குறிப்பாக, செப்டம்பர் இறுதியில் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் சந்தை 10790 என்ற நிலைக்கு இறங்கியது.

தற்போதைய நிலையிலிருந்து சந்தை மேலும் தொடர்ந்து இறங்குமானால், நாம் முந்தைய இறக்கநிலைகளில் நிர்ணயித்த சப்போர்ட் நிலைகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சந்தையில் லிக்விடிட்டி நன்றாக இருந்துவருவதால், இறக்கத்தின்போது முதலீடுகள் உள்ளே வரும். எனவே, பெரிய அளவில் சர்வதேச அல்லது உள்நாட்டு பாசிட்டிவ் செய்திகள் வராவிட்டால் இறக்கமானது சீராக இருக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருக்கின்றன. மேலும், msci rejig குறித்த சமீபத்திய செய்தி சந்தைக்குப் பாசிட்டிவாக இருப்பதால், இந்தியப் பங்குகளை வாங்குவதற்கான அழுத்தம் தொடர்ந்து இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பேங்க் நிஃப்டி தனது நகர்வில் முன்னேற்றம் கண்டுவருகிறது. தொடர்ந்து ஏற்றம் காண்பதுடன், முந்தைய உச்சங்களுக்கு சவால் விடவும் முயற்சி செய்கிறது. ஆனால், இங்கும் பங்கை வாங்குபவர்கள் தொடர்ந்து தக்க வைப்பதற்கான காரணிகளை எதிர்பார்க் கிறார்கள். இதனால் முந்தைய உச்சங் களுக்குள்ளேயே நகர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன. வங்கிகளின் காலாண்டு முடிவுகள் வந்தவண்ணம் உள்ளன. கோட்டக் மஹிந்திரா வங்கியின் முடிவுகள் சிறப்பாக வந்துள்ளது. தொடர்ந்து வரும் முடிவுகளும் எதிர்பார்த்தபடி அமைந்தால், பேங்க் நிஃப்டியின் நகர்வு ஏற்றத்துடன் இருக்கும். இதன்மூலம் நிஃப்டியின் நகர்வைக் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

சந்தையில் காளையின் போக்கு வருவதற்கான சாத்தியங்களுக்காகக் காத்திருக்க வேண்டி யிருக்கிறது. இருந்தாலும் 11500 என்ற நிலை வரையிலான இறக்கத்தை வாங்குவதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம். கவனமுடன் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளைக் கவனிக்கலாம்.

கிரிசில் (CRISIL)

தற்போதைய விலை ரூ.2,062.05

வாங்கலாம்

நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, புதிய உச்சங்களை அவ்வப்போது எட்டும் பங்குகளை எப்போதுமே கவனத்துக்குக் கொண்டுவருவது வழக்கம். கிரிசில் கடந்த வாரம் அதன் முந்தைய ஆண்டு உச்சத்தைத் தாண்டி ஏற்றம் கண்டிருக்கிறது. மொமென்டம், வால்யூம் இரண்டுமே சிறப்பாக இருந்தது. அதன் அதிகபட்ச இறக்கத்திலிருந்தே 62% ரீட்ரேஸ்மென்ட் நிலையை எட்டியிருக்கிறது. இதனால் வலுவான காளையின் போக்கில் இருக்கும் இந்தப் பங்கை ரூ.2,000 ஸ்டாப் லாஸுடன் வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.2,300 வரை உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

அதானி கிரீன் எனர்ஜி (ADANIGREEN)

தற்போதைய விலை ரூ.815.65

வாங்கலாம்

சந்தேகமே இல்லாமல், அதானி கிரீன் சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்துடன் காணப்படும் பங்காக உள்ளது. இது நிஃப்டி ஆல்பா 50 பட்டியலில் இடம்பிடித்திருப்பதோடு மட்டுமல்லாமல், நிஃப்டியை விடவும் சிறப்பான ஏற்றங்களைப் பதிவு செய்கிறது. குறிப்பிட்ட கன்சாலிடேஷன் முடிந்து, மீண்டும் புதிய உச்சத்துக்கு ஏற்றம் கண்டிருக்கிறது. மேலும், தொடர்ந்து ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. குறுகியகாலத்தில் ரூ.900 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.790 உடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் (CHOLAFIN)

தற்போதைய விலை ரூ.250.10

வாங்கலாம்

வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகளை நாம் பெரும்பாலும் பரிந்துரை செய்வதில்லை. ஆனால், சோழமண்டலம் ஃபைனான்ஸ் சிறப்பான காலாண்டு முடிவுகளுடன் வந்துள்ளது. எனவே, இதைப் பரிந்துரைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இதன் விலை நகர்வு சீரான ஏற்றத்தின் போக்கில் உள்ளது. தொடர்ந்து இந்தப் பங்கில் இறக்கத்திலிருந்து மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பும் போக்கு உள்ளது. இதனால் இதன் பேட்டர்ன்களில் உச்சபாட்டம்கள் உருவாகியுள்ளன. இதன் காலாண்டு முடிவுகள் தற்போதைய நிலையிலிருந்து ஏற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.275 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.242 வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.