Published:Updated:

பின்தங்கும் சீனா... இந்தியாவுக்கு 300 பில்லியன் டாலர் வாய்ப்பு..!

பின்தங்கும் சீனா...
பிரீமியம் ஸ்டோரி
News
பின்தங்கும் சீனா...

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 19

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலின் முடிவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்களித்து வந்த உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர். ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமான ராணுவ அதிகாரிகளும் உளவாளி களுமே தற்போது பொலிட் பீரோவில் அங்கம் வகிக் கின்றனர். இதனால் இன்றைக்கு மேற்கத்திய அரசுகள் சீனாவை ஏதாவது ஒரு வகையில் ஒடுக்குவதற்கான நடவடிக்கையை அன்றாடம் எடுத்துவரும் செய்திகளையே நாளேடுகளில் படிக்கிறோம்.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

அதுமட்டுமல்ல, கோவிட்-19-க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான நம்பகத்தன்மையுடன்கூடிய பரப்புரைகள் பெரிய அளவில் செய்யப்படாத காரணத்தால், அங்கு கோவிட் தொற்று நோய் குறையாமலே இருக் கிறது. அத்துடன் லாக்டௌன் களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பொருளாதார நடவடிக்கை களில் சுணக்கமும் அங்கே தொடர்கிறது.

சீனா சமுதாய, அரசியல், பொருளாதார ரீதியிலான சிக்கல்களைச் சந்தித்துவரும் அதே வேளையில், இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இயங்கிவருகிறது. ஆசியாவின் இரு முக்கியமான நாடுகளின் பொருளாதார மானது ஒன்றுக்கொன்று எதிர்திசையில் போய்க் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமாக, சீனாவில் சிக்கல்கள் அதிகரிக்க அதி கரிக்க, அங்கு நடந்துகொண் டிருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் (தொழில்கள்/உற்பத்தி போன்றவை) நிலைமை சீராக இருக்கும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. நம்முடைய கேள்வி என்னவெனில், எந்தெந்தத் தொழில்களை சீனாவில் இருந்து இந்தியா சட்டென அபகரித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பது பற்றித்தான். இதற்கான பதிலைப் பார்ப்போம்.

பின்தங்கும் சீனா... இந்தியாவுக்கு 
300 பில்லியன் டாலர் வாய்ப்பு..!

ஸ்மார்ட் போன்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய உபகரணங்கள்...

* உலக அளவிலான ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையின் அளவு 140 பில்லி யன் டாலர் ஆகும். இதில் கிட்டத்தட்ட கால் பங்கு அளவிலான ஸ்மார்ட் போன்களை (130 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள) சீனா ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்தியா ஆண்டொன்றுக்கு 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் களையே உற்பத்தி செய்கிறது.

* இந்தியாவின் உள்நாட்டு ஸ்மார்ட் போன் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட 27 பில்லியன் டாலர் அளவிலா னதாக இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 16 பில்லியன் டாலர் அளவிலான ஸ்மார்ட் போன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இந்தத் துறையில் இந்தியா வெற்றி பெற என்னென்ன தகுதிகளைக் கொண்டுள்ளது, எதன் அடிப்படையில் இந்தத் துறையில் இந்தியா பெரிய அளவிலான போட்டியாளராக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்?

ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்கிறது. மேலும், இந்தியா தனக்குத் தேவையான ஸ்மார்ட் போன்களில் 60% அளவிலான ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறது. இப்படி இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்தாலே அது ஸ்மார்ட் போன் உற்பத்தியில் இந்தியா தன்னுடைய பங்களிப்பைக் கணிசமாக விரிவாக்கம் செய்ய ஒப்பானதாகும். இங்கேதான் 1.1 பில்லியன் டாலர் அளவிலான பி.எல்.ஐ (Production Linked Incentives) பெருமளவில் உதவியாக இருக்கப் போகிறது. இந்தத் திட்டம் இந்தியாவின் உபயோகத் துக்குத் தேவைப்படும் ஸ்மார்ட் போன்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொள்ள பேருதவி யாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் நிலவிவரும் அதிக அளவிலான ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தைத் தாண்டி ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் டாலர் அளவிலான ஐபோன்களை உலக நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் இன்னமும் அதிக அளவிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து உலகநாடுகள் பலவற்றிலும் விற்பதற்கான திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஏர்பாட்களையும் உற்பத்தி செய்வதற் கான திட்டங்களைத் தீட்டிவருகிறது. கோவிட் லாக்டௌன்களின் காரணமாக 200 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை சீனாவில் உற்பத்தி செய்வதில் (ஃபாக்ஸ்கான் உற்பத்தி மையங்களில்) ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

பின்தங்கும் சீனா... இந்தியாவுக்கு 
300 பில்லியன் டாலர் வாய்ப்பு..!

இந்தத் துறையில் உருவாகக்கூடிய வாய்ப்பின் அளவு...

முன்பே கூறியபடி, புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் தன் மொத்த உற்பத்தியில் 25% அளவை இந்தியாவில் உள்ள உற்பத்தி மையங்களுக்கு 2025-ம் ஆண்டுக் குள் மாற்றியமைக்க நினைக்கிறது. இது அமெரிக்க டாலர் அளவீட்டில் கிட்டத் தட்ட 50 பில்லியன் டாலர்கள் அளவிலான (மொத்த உற்பத்தியில் 25% அளவு) உற்பத்தியாகும். ஒருவேளை, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டதில் 50% அளவிலான உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றினாலுமே (ஐபோன் மட்டும் – ஐபேட் மற்றும் ஏர்பாட்கள் தனி) அது அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் அளவிலான ஸ்மார்ட் போன் உற்பத்திக்கு வழிவகை செய்யும்.

நீண்ட கால அடிப்படையில் சீனாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பகுதி அளவிலான ஏற்றுமதியை அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இந்தியாவின் ஸ்மார்ட் போன் தேவையானது சராசரியாக ஆண்டொன்றுக்கு 12% என்ற அளவில் (நாமினல் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தில்) இருக்கும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்தால் அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 பில்லியன் டாலர் அளவிலான ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான வாய்ப்பு இந்தியாவில் உருவா வதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஏ.பி.ஐ மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகள்...

* ஏ.பி.ஐ-க்களுக்கான (ஆக்டிவ் பார்மெச்சூட்டிக்கல் இன்க்ரி டியண்ட்ஸ்) உலகளாவிய சந்தை யின் அளவு கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களாகும்.

* இதில் சீனாவின் ஏற்றுமதி 45% அளவில் இருக்கிறது. அதாவது, 90 பில்லியன் டாலர் என்ற அளவில்.

* இந்தியாவின் உள்நாட்டு ஏ.பி.ஐ தேவையானது கிட்டத் தட்ட 20 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர் அளவிலான ஏ.பி.ஐ-கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியா இந்தத் துறையில் எப்படி வெற்றிபெறும்?

ஏ.பி.ஐ-களைப் பொறுத்த வரை, சீனாவை நம்பி இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் தீர்மானமாக முடிவு செய்திருப் பதால், இந்தியாதான் அதற்கான மாற்றாக இருக்கிறது. ஏனென் றால், இந்தியாவில் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் இருக்கிறது. ஏ.பி.ஐ-கள் உற்பத்திக்கான ப்ராசஸ் கெமிஸ்ட்ரி (வேதிப் பொருள்கள் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம்) குறித்த ஞானமும் இந்தியாவில் அதிக அளவில் இருக்கிறது. மேலும், உலக நாடுகளில் இந்தியா மற்றும் சீனா தவிர வேறெந்த நாடும் ஏ.பி.ஐ-களைக் கணிசமான அளவில் உற்பத்தி செய்வதில்லை.

இந்தத் துறையில் உருவாகக்கூடிய வாய்ப்பின் அளவு...

சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஏபிஐ-களில் கால்பங்கு ஏற்றுமதிக் கான வாய்ப்பு இந்தியாவை நோக்கி வருகிறது என்று வைத்துக் கொண்டும், இந்தியாவின் உள்நாட்டு தேவை சராசரியாக 12% (நாமினல் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தில்) அதிகரிக்கிறது என்று வைத்துக்கொண்டும் கணக்கீடு செய்தால், இந்தத் தொழில் பிரிவில் கிட்டத்தட்ட 94 பில்லியன் டாலர் அளவிலான உற்பத்திக்கான வாய்ப்பு அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

மருத்துவத்துறை உபகரணங்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய விஷயங்கள்...

* உலக அளவில் இந்தத் துறை யின் சந்தை மதிப்பு 650 பில்லியன் டாலர். இதில் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் அளவிலான உபகரணங்களை சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தியாவின் உபயோகத்துக்கான தேவையின் மதிப்பு கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலராக இருக்கிறது. இதில் 10 பில்லியன் டாலர் அளவிலான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2 பில்லியன் டாலர் அளவிலான உபகரணங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படுகிறது.

இந்தியாவுக்கான வாய்ப்புகள்...

இந்தத் துறையில் இந்தியாவுடன் சீனாவை உற்பத்தி செய்யும் அளவுடன் ஒப்பீடு செய்து பார்த் தால், இந்தியா இதில் உற்பத்திச் செலவு குறைவு என்ற அடிப்படை யில் இந்தியாவால் போட்டி போட முடியாது. 2.5 பில்லியன் டாலர் பி.எல்.ஐ ஸ்கீம் நடைமுறையில் இருந்தாலுமே பெரிய அளவிலான உற்பத்தி செலவு ரீதியான போட்டியை இந்தியாவால் உருவாக்க முடியாது. ஆனால், மேற்கத்திய நாடுகள் நோய்களைக் கண்டறிய உதவும் மற்றும் நோய்களுக்கான மருத்துவம் செய்ய உதவும் கருவிகளுக்காக சீனாவை சார்ந்திருப்பதை இன்றைய சூழலில் பெரிய அளவில் விரும்புவதில்லை. இதுவே இந்தியாவுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

2016-ம் ஆண்டில் சீனாவின் தெரப்யூட்டிக் டிவைசஸ் (ஹியரிங் எய்ட்கள், ஆர்ட்டிஃபீஷியல் ஜாயின்ட்டுகள், பேஸ்மேக்கர்கள் போன்றவை – உடலுக்குள்ளோ, உடலின் மேலேயோ பொருத்தப்படும் ரகங்கள்) ஏற்றுமதியானது ஒட்டுமொத்த சீனாவின் மெடிக்கல் டிவைசஸ் ஏற்றுமதி யில் 31 % என்ற அளவில் இருந்தது. மேலும், சீனாவின் ஒட்டுமொத்த மெடிக்கல் டிவைசஸ் ஏற்றுமதியில் தெரப்யூட்டிக் மற்றும் டயக்னாஸ்டிக் டிவைஸ்களின் ஏற்றுமதி 52% பங்களிப்பைக் கொண்டிருந்தது. 2019-20-ம் ஆண்டில் உருவான கோவிட்-19 சார்ந்த உற்பத்தி பாதிப் பானது (ஆப்பிள் நிறுவனத்துக்கு நேர்ந்ததைப் போன்ற நிலைமை) மெடிக்கல் டிவைசஸ் உற்பத்தியையும் பாதிக்கவே செய்தது.

இந்தத் துறையில் உருவாகக்கூடிய வாய்ப்பின் அளவு...

இந்தத் துறையின் வளர்ச்சியானது 12% அளவில் (நாமினல் ஜி.டி.பி அளவில்) அடுத்த 10 ஆண்டுகளில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வகை வளர்ச்சியானது இந்தியாவில் மெடிக்கல் டிவைசஸ் உற்பத்தியை 70 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அடுத்த 10 வருடங்களில் எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தத் துறையில் முதலீடுகள் செய்யப்படுகிறதா?

* பாக்ஸ்டர், அபாட், 3எம், ப்ரான், பாஸ்டன் சயின்டிபிக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் முக்கியமான நிறுவனங்களாக இருக்கின்றன என்கிறது மத்திய அரசின் இது குறித்த இணையதள தரவு ஒன்று. கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சர்க்கரை நோயாளிகளின் அத்தியாவசிய தேவையான இன்சுலினைக் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் பாதுகாத்து வைக்க உதவும் வகை யிலான இன்சுலிகூல் மற்றும் இன்சுலிகூல்+ என்ற இரண்டு உபகரணங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

* சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் நிறுவனம் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வதேதராவில் உள்ள உற்பத்தி மையத்தில் மாலிக்யூலர் டெஸ்ட்டிங் கிட்டுகள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!

(இன்னும் சொல்கிறேன்)