
கம்பெனி பயோடேட்டா
இந்த வாரம் நாம் பார்க்கப்போவது இந்தியாவின் முன்னணி சிந்தடிக் ரப்பர் (நைட்ரைல் ரப்பர் மற்றும் ஹை ஸ்டைரீன் ரப்பர்) மற்றும் சிந்தடிக் லேடெக்ஸ் (நைட்ரைல், விபி லேட்டெக்ஸ், எக்ஸ் எஸ்பி மற்றும் அக்ரிலிக் லேட்டெக்ஸ்) போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான அப்கோடெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
உற்பத்திப் பொருள்கள்...
சிந்தடிக் ரப்பரானது வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், ஹோஸ்கள், கேஸ்கட்டுகள், அரிசியில் இருந்து உமியை நீக்குவதற்கான ரோலர்கள், பிரின்ட்டிங் மற்றும் இண்டஸ்ட் ரீயல் ரோலர்கள், ப்ரிக்ஷன் மெட்டீரியல்கள், பெல்ட்டிங் மற்றும் காலணிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் லேட்டக் ஸானது காகிதம் மற்றும் காகிதத்தால் ஆன போர்டுகளில் மீது பூசவும் கார்ப்பெட்டு களின் அடிப்பகுதியாக வைப்பதற்கும், டயர் கார்ட் டிப்பிங்குக்கும் ஏனைய கட்டுமானங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக வகையிலான எமல்ஷன் பாலிமர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி மையங்கள் மகாராஷ்டிராவில் உள்ள டலோஜா (மும்பைக்கு 50 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் ஜே.என்.பி.டி துறைமுகத்துக்கு 35 கிலோ மீட்டர் தொலை விலும் உள்ள இடம்) எனும் இடத்திலும், குஜராத்தில் உள்ள வலியா (தஹிஜ் மற்றும் கண்ட்லா துறைமுகத்துக்கு அருகில்) எனும் இடத்திலும் இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப தயாரிப்பு களையும் அவற்றின் தரத்தையும் மாற்றிக்கொள்ளும் அளவுக்கான உற்பத்தி வசதியுள்ள டெக்னாலஜியை சிறந்த முறையில் தொடர்ந்து மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆராய்ச்சியகத்தில் பயன்படுத்தப் படும் பகுப்பாய்வு கருவிகள், சிறந்த கருவிகளைக் கொண்ட பைலட் பிளான்ட்டுகள் (முன்னோட்டம் பார்ப்பதற்கேற்ற சிறிய அளவிலான உற்பத்தி வசதி) மற்றும் இந்தத் துறையில் செயல்பட்டுவரும் பெருநிறுவனங்களுடன் தொழில்நுட்ப ரீதியாகத் தொடர்ந்து தொடர்பில் இருப்பது போன்றவை இந்த நிறுவனத்தை சிறப்பாக செயல்படுவதற்கான காரணிகளாக இருக்கின்றன.
இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகள் சார்ந்த ஆராய்சிகளை செய்துகொள்வதற்காகச் சொந்தமாக ஒரு ஆராய்ச்சி மையத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையமானது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and Industrial Research (DSIR), Ministry of Science and Technology, Government of India) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்சமயம் (செப்டம்பர் 2022 இறுதி நிலவரப்படி) 47 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நிறுவனத்தின் வரலாறு...
1980-ம் ஆண்டில் ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். மகாராஷ்டிராவில் உள்ள டலோஜா எனும் இடத்தில் வினைல் பைரிடின் லேட்டக்ஸ் மற்றும் ஸ்டைரீன் – ப்யூட்டாடையீன் லேட்டக்ஸ் என்ற இரண்டு வகை லேட்டக்ஸை உற்பத்தி செய்வதில் முன்னோடி நிறுவனமாக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1991-ம் ஆண்டில் தனியானதொரு நிறுவனமாகப் பிரித்து நிறுவப்பட்டு அப்கோடெக்ஸ் லேட்டிசஸ் லிமிடெட் என்ற பெயரில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 1998-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 10,000 மெட்ரிக் டன் என்ற அளவிலான ஹை ஸ்டைரீன் ரப்பர் உற்பத்தியைத் தொடங்கியது இந்த நிறுவனம். 2005-ம் ஆண்டில் அப்கோடெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்த நிறுவனம்.
2016-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள வாலியா எனும் இடத்தில் செயல்பட்டு வந்த ஓம்நோவா சொல்யூஷன்ஸ் என்னும் ஆண்டொன்றுக்கு 11,000 மெட்ரிக் டன் அளவிலான நைட்ரைல் ரப்பர் (உலர் ரகம்) மற்றும் ஹை ஸ்டைரீன் ரப்பரை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.
2020-ம் ஆண்டில் கையுறைகள் தயாரிப்பதற்கு உபயோகிக்கப் படும் நைட்ரைல் லேட்டெக்ஸ் தயாரிப்பில் கால் பதித்த இந்த நிறுவனம், தற்சமயம் இந்த உற்பத்தியின் நிர்மாணிக்கப்பட்ட அளவை ஆண்டொன் றுக்கு 60,000 மெட்ரிக்டன் என்ற அளவுக்கு நடப்பு நிதியாண்டில் அதிகரித்துக்கொள்வதற்கான திட்டங்களைத் தீட்டிவருகிறது. 2021-ம் ஆண்டில் தலோஜாவில் இருக்கும் லேட்டெக்ஸ் உற்பத்தி மையத்தின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவானது ஆண்டொன்றுக்கு 55,000 மெட்ரிக் டன் என்பதில் இருந்து 65,000 மெட்ரிக்டன் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது. இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், யு.ஏ.இ, சவுதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி யும் செய்கிறது.

இந்த நிறுவனத்துக்கு பேப்பர் உற்பத்தி நிறுவனங்களில் ஐ.டி.சி, ஜே.கே பேப்பர், பில்ட் மற்றும் என்.ஆர் குரூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், கார்ப்பெட் உற்பத்தி நிறுவனங் களில் ஒபெட்டி இண்டஸ்ட்ரீஸ், ஏ.பி.சி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், ரப்பர் சார்ந்த தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனங் களில் பாரகன், லூனார்ஸ் ஃபுட்வேர், ஜோஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களும், கட்டுமானத்துக் கான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஏசியன் பெயின்ட்ஸ், பிடிலைட், அல்ட்ரா டெக், சிக்கா, போஸ்ராக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், டயர் மற்றும் டயர் கார்ட் உற்பத்தி நிறுவனங்களில் எம்.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப், ராஜ்ஸ்ரீ பாலிபில் (செஞ்சுரி யென்கா), மதுரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், ஆட்டோ மற்றும் இண்டஸ்ட்ரீயல் காம்ப்போ னென்ட் உற்பத்தி நிறுவனங்களில் யுனிக் ஆட்டோ ரப்பர் உத்யோக் பி லிட், வாராக் எலாஸ்ட், ஜிபி ரப்பர், ஜெய பாலிமர்ஸ் உட்பட பல முன்னணி நிறுவனங் களும், ஹோஸ்கள் மற்றும் எல்.பி.ஜி உற்பத்தி நிறுவனங்களில் வான்ஸ் இண்டஸ்ட்ரிஸ், சூப்பர் ஹோஸ், ஜிகல்தாரா, பார்க்கர் ஹாஃபின் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர் களாக இருக்கின்றன. மற்றும் ரைஸ் ரோல்ஸ் உற்பத்தி நிறுவனங்களில் சக்தி மான், ஹிந்துஸ்தான் ரப்பர் இண்டஸ்ட்ரீஸ், கோல்டன் ரோல்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், குளோவ் உற்பத்தி நிலையங்களில் டாப் குளோவ், ப்ரைவே, எஸ்.ஆர்.ஐ தரங், பி.டி ஷாம்ராக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர் களாக இருக்கின்றன.

ரிஸ்க்குகள் என்னென்ன?
சிந்தடிக் ரப்பர் மற்றும் சிந்தடிக் லேட்டெக்ஸ் உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அத்தனை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப் பொருள்கள் விலை உயர்வு, மூலப்பொருள்கள் தொடர்ந்து தங்குதடையின்றி கிடைத்தல், தொழில்நுட்பத்தில் வரக்கூடிய வேகமான மாறுதல், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், செலவின அதிகரிப்பு, சுற்றுச்சூழல் கொள்கைகளில் அரசாங்கம் கொண்டு வருகின்ற மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கும் நிறுவனங்களில் சிலவற்றின் தயாரிப்புகள் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து விற்பனை வளர்ச்சி அடைகின்ற தன்மையைக் கொண்டுள்ளவையாக இருக்கிற காரணத்தால் உலக பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாது போனாலோ, தேக்கநிலையை சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!