தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பாலாஜி அமைன்ஸ் லிமிடெட்! (BSE CODE: 530999, NSE SYMBOL: BALAMINES)

பாலாஜி அமைன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாஜி அமைன்ஸ்

கம்பெனி பயோடேட்டா

பாலாஜி அமைன்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தைதான் நாம் இந்த வாரம் கம்பெனி பயோடேட்டா பகுதியில் அலசி ஆராயப்போகிறோம்.

நிறுவனத்தின் உற்பத்தி...

மீத்தைல் அமைன்ஸ், ஈத்தைல் அமைன்ஸ், சிறப்பு பண்புகள் கொண்ட வேதிப்பொருள்கள் சிலவற்றின் மூலத்தில் இருந்து பெறப்படும் ரசாயனப் பொருள்கள், மருந்துகள் தாயரிப்பில் பயன்படும் துணை வேதிப்பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். தவிர, மருந்து உற்பத்தி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்தியில் உபயோகிக்கப்படும் பல்வேறு படிநிலைகள் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ரக வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இன்றைக்கு 25-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிற பாலாஜி அமைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, ஆண்டொன்றுக்கு 2,31,000 மெட்ரிக் டன் வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கிறது.

பாலாஜி அமைன்ஸ் லிமிடெட்! (BSE CODE:  530999, NSE SYMBOL: BALAMINES)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1988-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், அலிபேட்டிக் அமைன்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தியாவில் முதன்முறையாக இந்த நிறுவனம் மட்டுமே சொந்தமாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல் படுத்தி காலப்போக்கில் அந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி முன்னேற்றம் பெறச் செய்துவருகிறது.

இந்த நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி மையம் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர், ஹைதரா பாத்தில் உள்ள பொல்லாராம் போன்ற இடங்களில் இருக்கின்றன. மேலும், புதிய வேதிப்பொருள்கள் குறித்த ஆராய்ச்சியை செய்வதற் காகவும், தன் தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்ளவும், உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்திக்கொள்ளவும் தனிப்பட்ட ஆராய்ச்சி மையங்களைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் நான்கு பெரும் தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. அமைன்ஸ் பிரிவில் மானோ மீத்தைல் அமைன், டை மீத்தைல் அமைன் உள்ளிட்ட பல வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது. இதே போல், வேதிப்பொருள்கள் டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் பல்வேறு வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது. இதே போல, ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் பிரிவிலும் பல்வேறு வேதிப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

1988-ம் ஆண்டில் மீத்தைல் அமைன்கள் உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் ஈத்தைல் அமைன்கள் உற்பத்தியில் கால்பதித்தது. 1989-ம் ஆண்டில் சோலாப்பூருக்கு அருகில் உள்ள தமல்வாடியில் அலிபேட்டிக் அமைன்கள் உற்பத்தி வசதியை நிறுவியது. 1992-ம் ஆண்டில் ஹைதராபாத்துக்கு அருகிலுள்ள பொல்லாராம் எனும் இடத்தில் ஆராய்ச்சி வசதியை நிறுவியது.

பங்குச் சந்தையில்...

1995-ம் ஆண்டில் மருந்துகள் உற்பத்தியில் உபயோகப்படுத்தப்படும் டைமீத்தைல் அமைன்ஸ் ஹைட்ரோகுளோரைட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில்தான் இந்த நிறுவனம் முதன்முதலாக பொதுப் பங்குகளை வெளியீடு செய்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2000-ம் ஆண்டில் மீத்தைல் மற்றும் ஈத்தைல் அமைன்ஸ் டெரிவேட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம் டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் தரப்பட்டுள்ள அத்தனை வகை வேதிப் பொருள்களையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2003-ல் ஹைதராபாத்தில் உள்ள பொல்லாராம் எனும் இடத்தில் டை மீத்தைல் அமின் ஹைட்ரோ குளோரைட் உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்தது. இதே ஆண்டில் மீத்தைல் அமைன்ஸ் உற்பத்தி வசதியை நாளொன்றுக்கு 40 டன் என நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவுக்கு விரிவாக்கம் செய்தது. 2005-ம் ஆண்டில் என் மீத்தைல் பைரோலிடோன் மற்றும் மார்போலின் போன்ற ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளை பொல்லாரம் ஆராய்ச்சி பிரிவில் கண்டறிந்தது.

2008-ம் ஆண்டில் சோலாப்பூர் உற்பத்தி மையத்தில் மூன்றாவது யூனிட்டை நிறுவியது. 2010-ம் ஆண்டில் ஆறு மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான காற்றாலை வசதியை நிறுவியது இந்த நிறுவனம். 2011-ம் ஆண்டில் சோலாப்பூரில் உள்ள சின்சோலி என்னும் இடத்தில் என் மீத்தைல் பைரோலிடன் மற்றும் காமா ப்யூட்டைரோ லாக்டோன் என்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூன்றா வது யூனிட்டை நிறுவியது.

2013-ம் ஆண்டில் சோலாப் பூரில் உள்ள மூன்றாவது உற்பத்தி வசதியில் டைமீத்தைல் பார்ம மைட் எனும் வேதிப் பொருளை ஆண்டொன்றுக்கு 18,000 மெட்ரிக் டன் என்ற அளவில் உற்பத்திசெய்வதற்கான மையம் ஒன்றை நிறுவியது. 2013-ம் ஆண்டில் சோலாப்பூரில் பாலாஜி சரோவர் பிரீமியர் என்ற ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றை நிறுவியதன் மூலம் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் கால்பதித்தது.

பாலாஜி அமைன்ஸ் லிமிடெட்! (BSE CODE:  530999, NSE SYMBOL: BALAMINES)

வாடிக்கையாளர்களும் ஏற்றுமதியும்...

ஜூப்லியன்ட் லைஃப் சயின்சஸ், சிப்லா, ராலீஸ், டாக்டர் ரெட்டி, அரோபிந்தோ, கோரமண்டல், பிரமல், யு.பி.எல், லூபின், தெர் மேக்ஸ், அமைன்ஸ் பிளாஸ்டி சைசர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை அமைன்ஸ் பிரிவில் வாடிக்கை யாளர்களாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். அமைன்ஸ் டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் சன் ஃபார்மா, நாட்கோ, வொக்கார்ட், வெங்கீஸ், இப்கா, கிரான்யூல்ஸ், ஆர்த்தி டிரக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர் களாகக் கொண்டிருக்கிறது.

ஸ்பெஷாலிட்டி மற்றும் ஏனைய கெமிக்கல்கள் பிரிவில் ஹிந்துஸ் தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சிபிசிஎல், கெயில், பாயர், கெடில்லா பார்ம சூட்டிக்கல்ஸ், தீபக், அலெம்பிக், சைடஸ் மற்றும் க்ளேரியன்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங் களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது.

யுகே, யுஎஸ்ஏ, அர்ஜென்டினா, கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, கொரியா, தாய்வான், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், பஹ்ரைன், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா எனப் பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 19.37% அளவு ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் வந்திருந்தது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

வேதிப்பொருள்கள் உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. ரசாயன உற்பத்தி என்பது அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை முடிவு களுக்கு கட்டுப்பட வேண்டிய துறையாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் நிறுவனங்கள் இயங்கும் தொழில்துறைகளில் பெரும்பான்மையானவை பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து வளர்ச்சி அடையும் தொழில்களாகும்.

ஏதாவது ஒரு காரணத்தால் உலகின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் தொழில் போட்டி, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பம், மூலப்பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்காமல் போகுதல், உற்பத்திக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிப்பு போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

பாலாஜி அமைன்ஸ் லிமிடெட்! (BSE CODE:  530999, NSE SYMBOL: BALAMINES)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எந்தப் பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின், முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!