பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட்  இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா செஞ்சுரி டெக்ஸ்ட் டைல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.

மூன்று தொழில் பிரிவுகளில்...

1897-ம் ஆண்டில் ஒரு சிறிய டெக்ஸ்ட்டைல் உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்டு, பின்னர் பலதரப்பட்ட தொழில்களிலும் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். 125 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடனும் தரம், வாடிக்கை யாளர்கள் நலன் மற்றும் தொடர்ந்து தன்னை நவீனப்படுத்திக்கொள்வதன் மூலம் அடையும் முன்னேற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இன்றைக்கு பருத்தித் துணிவகைகள், காகிதக் கூழ் மற்றும் காகிதம், ரியல் எஸ்ட்டேட் என்ற மூன்று தொழில் பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் 
இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

டெக்ஸ்ட்டைல் பிரிவில்...

டெக்ஸ்ட்டைல் பிரிவில் முழுக்க முழுக்க வெர்ட்டிக்கல் இண்டெக்ரேஷன் செய்யப்பட்ட அளவிலான ஜவுளி உற்பத்தி வசதி ஒன்றை நூறு ஏக்கர் பரப்பளவில் கொண்டு இயங்கிவருகிறது. இந்த உற்பத்தி மையத்தில் பிரீமியம் ரக ஜவுளி உற்பத்தி (சட்டை மற்றும் பேன்ட் தைக்க உபயோகிக்கப்படும் துணிவகைகள்), ஃபைன் பேப்ரிக்ஸ் மற்றும் வீட்டில் அத்தியாவசிய மற்றும் அலங்காரத்துக்காக உபயோகப்படுத்தப்படும் துணிவகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. நவீன பண்புகளான உபயோகிப்பதன் கசங்காத தன்மை, சுலபமாக பராமரிக்கும் ரகம், பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை போன்ற குணாதிசயங்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யும் துணிகளில் உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம்.

மேலும், இத்தகைய பண்புகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், நச்சுத்தன்மை இல்லாத சாயப்பொருள்கள் மற்றும் வேதிப்பொருள்களை உபயோகித்தும் உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். உலக அளவில் மாறிவரும் ரசனைக்கு இணங்க துணிவகைகளை டிசைன் செய்வதற்குத் தனிப்பட்ட டிசைன் ஸ்டூடியோ வசதியையும் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் தன்னுடைய காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தி மையத்தை உத்தரகாண்ட்டில் உள்ள லால்குவன் எனும் இடத்தில் நிறுவியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் காகிதங்கள், அச்சடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் காகிதங்கள், டிஷ்யூ பேப்பர்கள் மற்றும் காகித அட்டைகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி மையத்தில் விஸ்கோஸ் பிலமண்ட் யார்ன் உற்பத்திக்கான மூலப்பொருள், ஸ்டேப்பிள் பைபர் மற்றும் பேப்பர் கிரேட் கூழ் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையமும் இருக்கிறது. 1984-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உற்பத்தி வசதியானது இந்தத் தொழிலின் பல்வேறு உட்பிரிவுகளிலும் வேகமான முன்னேற் றத்தைத் தொடர்ந்து கண்டுவருகிறது.

ரியல் எஸ்டேட் பிரிவில் பல்வேறு முக்கியமான நகரங்களிலும் தனக்கு இருக்கும் நிலத்திலும் மற்றவர்களுடன் கூட்டணி அமைத்தும் கட்டு மானங்களைச் செய்து வருகிறது. 1897-ம் ஆண்டில் செஞ்சுரி ஸ்பின்னிங் & மேனுஃபேக்சரிங் கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1899-ம் ஆண்டில் ஐந்து லட்சம் என்ற அளவிலான விற்று வரவை எட்டியது. 1951-ம் ஆண்டில் பி.கே.பிர்லா குழுமம் இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 1951-ம் ஆண்டில் ரூ.7 விற்றுவரவைக் கொண்டும் ரூ.3 கோடி அளவிலான நெட்வொர்த்தைக் கொண்டும் செயல்பட்டு வந்தது.

1954-ம் ஆண்டில் மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் எனும் இடத்தில் ரேயான் உற்பத்திப் பிரிவை ஆரம்பித்தது இந்த நிறுவனம். 1956-ம் ஆண்டில் செஞ்சுரி ரேயான் என்ற தனிப் பிரிவை ஆரம்பித்தது. 1963-ம் ஆண்டில் விஸ்கோஸ் டயர் யார்ன் மற்றும் கார்டுகளை உற்பத்தி செய்வதற் கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி வசதியை ஆரம்பித்தது. இதற்கான தொழில்நுட்ப வசதியை நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி சார்ந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது.

1964-ம் ஆண்டில் காஸ்ட்டிக் சோடா எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் மையத்தை நிறுவியது.

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் 
இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

சிமென்ட், காகித உற்பத்தியில்...

1974-ம் ஆண்டில் சிமென்ட் உற்பத்தியில் கால்பதித்த இந்த நிறுவனம், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பைகுந்த் எனும் இடத்தில் ஆண்டொன்றுக்கு 0.6 மில்லியன் டன் அளவிலான போர்ட்லேன்ட் சிமென்ட் உற்பத்தி செய்வதற் கான வசதியை நிறுவியது. இந்த சிமென்ட் பிர்லா கோல்டு என்ற பிராண்டில் சந்தைப் படுத்தப்பட்டது. 1980-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்னா எனும் இடத்தில் மற்றுமொரு சிமென்ட் உற்பத்தி மையத்தை நிறுவியது. இந்த மையத்தில் ஆண்டொன்றுக்கு 0.8 மில்லியன் டன் என்ற அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையம் உருவாக்கப் பட்டு, அதில் உற்பத்தி செய்யப் படும் சிமென்ட் மைஹார் எனும் பிராண்டில் சந்தைப்படுத்தப் பட்டது. 1982-ம் ஆண்டில் ஷிப்பிங் டிவிஷனை இந்த நிறுவனம் ஆரம்பித்தது.

1984-ம் ஆண்டில் காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தியில் கால்பதித்த இந்த நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லால்குவான் எனும் இடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் ஆலையை நிறுவியது. 1985-ல் 3-வது சிமென்ட் ஆலையை மகா ராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் எனும் இடத்தில் நிறுவியது.

1987-ம் ஆண்டில் இந்த நிறுவனத் தின் பெயர் செஞ்சுரி டெக்ஸ் டைல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் என மாற்றப்பட்டது. 1990-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் காஸ்ட்டிக் சோடா உற்பத்தி வசதி யானது மெம்ப்ரேன் செல் தொழில் நுட்பத்துடன் செயல்படுமாறு விரிவாக்கம் செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டில் முழுக்க முழுக்க வெர்ட்டிக்கல் இண்டெக்ரேஷன் செய்யப்பட்ட 24,960 ஸ்பிண்டில் களைக் கொண்ட காட்டன் யார்ன் உற்பத்தி வசதி ஒன்றை கட்ட மைத்தது.

1996-ம் ஆண்டில் மத்தியப் பிர தேசத்தில் மைஹாரில் ஆண்டொன் றுக்கு ஒரு மில்லியன் டன் அளவி லான சிமென்ட் உற்பத்தி மையத்தை நிறுவியது. இதன்மூலம் செஞ்சுரி டெக்ஸ் டைல்ஸ் நிறுவனம் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் செயல்படும் சிமென்ட் உற்பத்தி யாளர்கள் மத்தியில் 4-வது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.

2008-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பாரூச் என்ற இடத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் ஜவுளி உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது. 2016-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை யில் கால்பதித்த இந்த நிறுவனம் (பிர்லா எஸ்டேட்ஸ்), பிர்லா அரோரா, பிர்லா செஞ்சுரியன் என்ற இரண்டு லைஃப் டிசைன்டு வொர்க்ஸ் ஸ்பேஸ்களைக் கட்டுமானம் செய்தது. 2019-ம் ஆண்டில் தன்னுடைய சிமென்ட் டிவிஷனை அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு டீமெர்ஜ் செய்து கொடுத்தது செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானம், காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தித் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத் துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, அதிநவீன தொழில்நுட்பத்தைப் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்துதல், மாறுகிற வாடிக்கையாளர்களின் ரசனை உள்ளிட்ட பல ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக் கானது. இந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிற பெரும்பாலான தொழில்கள் பொருளாதார வளர்ச்சி சார்ந்தே வளர்ச்சி அடைகிற தன்மை கொண்டவையாதலால் ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ தேக்கநிலை வந்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் 
இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!