நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட்! (BSE Code: 542399 NSE Symbol: CHALET)

சாலட் ஹோட்டல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சாலட் ஹோட்டல்ஸ்

கம்பெனி பயோடேட்டா

கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் நிறுவனம் கே.ரஹேஜா குழுமத்தின் அங்கமாக இருக்கும் சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட்.

மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே போன்ற பெரிய மெட்ரோபாலிட்டன் நகரங்களில் நட்சத்திர சொகுசு தங்கும் விடுதி களை சொந்தமாக நடத்துவது, உருவாக்கித் தருவது இதுபோன்ற சொத்துகளை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது இந்த நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் டெவலப் மென்ட் மற்றும் அஸெட் மேனேஜ்மென்ட் என்கிற இரண்டு பெரும் தொழில் பிரிவுகளில் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட்! (BSE Code: 542399 NSE Symbol: CHALET)

நிறுவனத்தின் தொழில்...

இன்றைக்கு ஏழு வெவ்வேறு பிராண்டு களுடன் தன்னை இணைத்துக்கொண்டு மொத்த எண்ணிக்கை அளவில் 2,554 அறைகளைக் கொண்ட ஏழு சொகுசு தங்கும் விடுதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது சாலட் ஹோட்டல்ஸ் நிறுவனம்.

0.9 மில்லியன் சதுர அடி (மும்பையில் உள்ள சாகர் எனும் இடத்தில் 0.5 மில்லியன் சதுர அடி மற்றும் பெங்களூருவில் உள்ள வொயிட் பீல்டில் 0.4 மில்லியன் சதுர அடி என்ற அளவில்) அளவிலான வணிகரீதியில் வாடகை ஈட்டுகிற சொத்துகளை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது.

கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக மும்பையில் 1,513 அறைகள், புனேவில் 223 அறைகள், பெங்களூருவில் 391 அறைகள் மற்றும் ஹைதராபாத்தில் 427 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

இந்த நிறுவனத்திடம் இருக்கும் அறைகளில் 2,179 அறைகள் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் அந்தஸ்து பெற்றவை; 375 அறைகள் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றவை. கடந்த நிதியாண்டில் 4,79,660 இரவு நேரத் தங்குதல் (தங்கும் விடுதிகள் தங்கள் அறைகளை வாடகைக்கு விடுதலில் இருக்கும் அளவீடு) என்ற அளவிலான வர்த்தகத்தைச் செய்துள்ளது இந்த நிறுவனம்.

மும்பையில் உள்ள பொவாய் எனும் இடத்தில் 0.78 மில்லியன் சதுர அடிகள் மற்றும் பெங்களூரில் உள்ள வொயிட் பீல்டு எனும் இடத்தில் 0.66 மில்லியன் சதுர அடிகள் என்ற அளவீட்டில் புதிய கட்டுமானங்களுக்கான திட்டப்பணிகளையும் செய்துவருகிறது இந்த நிறுவனம்.

தங்கும் விடுதிகளில் உலக அளவில் பெரிய பிராண்டுகளான ஜே.டபிள்யூ மாரியட், தி வெஸ்ட் இன், மாரியட் எக்ஸிக்யூட்டிவ் அப்பார்ட்மென்ட்ஸ், மாரியட், ஃபோர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன், நோவோ டெல் போன்றவற்றுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதால், வாடிக்கையாளர் களுக்கு சிறந்த மதிப்புக்கூட்டுதலை இந்த நிறுவனத்தால் தர முடிகிறது.

2,230 பணியாளர்களை (முழு நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான) கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானத்தைப் பணியாளர்கள் (சராசரி யாக ஒரு பணியாளர் மூலம் எவ்வளவு என்ற அடிப்படையில்) எண்ணிக்கையில் பிரித்துப் பார்க்கும் விகிதாசார அடிப்படையில் பணியாளர் ஒருவருக்கு ரூ.24 லட்சம் என்கிற அளவிலான விற்று வரவைக் கொண்டிருந்தது.

இந்த நிறுவனம் நடத்தும் தங்கும் விடுதிகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 53% அளவிலான மின்சாரமானது புதுப்பிக்கத்தக்க அளவிலான எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படு கிறது என்பதும், இந்த நிறுவனம் நடத்துகிற தங்கும் விடுதிகளில் உருவாகும் ஈரப்பதம் கொண்ட கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்டு விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள் ஆகும்.

சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட்! (BSE Code: 542399 NSE Symbol: CHALET)

நிறுவனத்தின் வரலாறு...

1986-ம் ஆண்டில் கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், 2000-ம் ஆண்டில் லேக் சைட் சாலட், மும்பை - மாரியட் எக்ஸிக்யூட்டிவ் அப்பார்ட்மென்ட்ஸ் எனும் 173 அப்பார்ட்மென்ட்டுகளை கொண்ட தங்கும் விடுதியை ஆரம்பித்ததன் மூலம் இந்தத் துறையில் கால்பதித்தது. அடுத்தடுத்து தங்கும் விடுதிகள், வணிகக்கட்டடங்கள் என தொடர்ந்து கட்டப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டில் சாலட் ஹோட்டல்ஸ் நிறுவனம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சிறப்பு...

கோவிட்-19 பாதிப்பு உலக அளவில் இருந்த சூழ்நிலையில், இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் துறையானது சரிவை (விற்றுவரவில் 70% முதல் 90% அளவிலான சரிவு) சந்தித்த போதும் 2021-22-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலிருந்து நிலைமை சற்று மாறியது.

இந்த நிறுவனம் தற்போது செய்துவரும் விரிவாக்க நடவடிக் கையில் கமர்ஷியல் (வாடகைக்கு விடுதல்) கட்டுமானங்கள் பிரிவில், மும்பையில் 0.78 மில்லியன் சதுர அடி அளவிலான கட்டுமானமும் (வெஸ்ட் இன் காம்ப்ளெக்ஸ், பொவாய்), பெங்களூரில் உள்ள வொயிட் பீல்டு எனும் இடத்தில் 0.66 மில்லியன் சதுர அடி அளவிலான கட்டுமானமும் முக்கியமானவை யாகச் சொல்லப்படுகிறது.

தங்கும் விடுதிகள் பிரிவில், நோவோடெல் நாகர் ரோடு புனே விடுதியில் கூடுதலாக 88 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஹைதரா பாத்தில் உள்ள வெஸ்ட்டின் 2 ஹைதராபாத் மைண்ட் ஸ்பேஸ் புராஜெக்ட்டும் விரிவாக்க நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான ஒரு புராஜெக்ட் ஆகும்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஹோட்டல்கள் மற்றும் வாடகைக்கு விடும் அளவிலான கமர்ஷியல் கட்டுமானங்கள் துறையில் இயங்கிவரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. கோவிட்-19 போன்ற ரிஸ்க்குகள் இந்தத் துறைக்கு தனிப்பட்ட ரீதியிலான ரிஸ்க் எனலாம்.

இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் இரண்டு துறைகளுமே பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடையும் துறைகள் என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியடையாமல் போனாலோ தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

மேலும், கட்டுமானத்தில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் அதனால் உயரும் கட்டுமானச் செலவினங்கள், தொழில் ரீதியிலான போட்டி, வாடிக்கையாளர்களின் ரசனை மாறுதல் போன்றவை இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட்! (BSE Code: 542399 NSE Symbol: CHALET)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

2000-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2018 வரை இந்த நிறுவனம் புதிதாகக் கட்டிய கட்டடங்கள்..!

* 2000- மாரியட் எக்ஸிக்யூட்டிவ் அப்பார்ட்மென்ட்ஸ் (173 வீடுகள்)-லேக் சைட் சாலட், மும்பை.

* 2001- தி வெஸ்ட் இன் மும்பை தங்கும் விடுதி, பொவாய் லேக்.

* 2009- ஃபோர் பாயின்ட் பை ஷெராட்டன் விடுதி வஷி, நவி மும்பை மற்றும்

வெஸ்ட் இன் ஹைதராபாத் மைண்ட் ஸ்பேஸ் விடுதி- ஹைதராபாத்.

* 2013- மாரியட் ஹோட்டல் வொயிட் பீல்ட் விடுதி-பெங்களூரு.

* 2014-கமர்ஷியல் டவர் வொயிட் ஃபீல்ட் பெங்களூரு.

* 2015- ஜே.டபிள்யூ மாரியட் சாகர், விடுதி -மும்பை.

* 2018- தி ஆர்ப் ரீடெயில் அண்ட் கமர்ஷியல் டவர் எனும் வணிகக் கட்டடம்- சாகர், மும்பை.