தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 542857, NSE Symbol: GREENPANEL)

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் நிறுவனம் கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய மர பேனல்கள் (wood panel) உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

நிறுவனத்தின் தொழில்...

எம்.டி.எஃப், எஃப்.ஆர்.எம்.டி.எஃப், பிளைவுட் மற்றும் வெனீர்ஸ், கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். எம்.டி.எஃப் விற்பனையில் 2021-22 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 28% சந்தைப் பங்களிப்புடன் செயல்பட்டு வந்தது இந்த நிறுவனம்.

உத்தர்காண்ட் மற்றும் ஆந்திராவில் இருக்கும் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான உற்பத்தி மையங்களில் அதிக தரம் வாய்ந்த மீடியம் டென்சிட்டி ஃபைபர் போர்டுகள் (MDF), பிளைவுட்டுகள், டெக்கரேட்டிவ் வெனீர்ஸ், ஃபுளோரிங் மற்றும் கதவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் ஆண்டொன்றுக்கு 6,60,000 (2021-22 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) க்யூபிக் மீட்டர் அளவிலான எம்.டி.எஃப் போர்டுகள், 10.50 மில்லியன் சதுர மீட்டர் அளவிலான பிளைவுட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் அளவுக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவு இருக்கிறது.

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 542857, NSE Symbol: GREENPANEL)

கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் தன்னுடைய நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி அளவில் 87% அளவிலான உற்பத்தியை எம்.டி.எஃப் போர்டுகளிலும், 81% அளவிலான உற்பத்தியை பிளைவுட்டுகளிலும் எட்டியிருந்தது. ஆசியாவில் செயல்படும் மர பேனல்கள் உற்பத்தி யாளர்கள் மத்தியிலும் இந்த நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்வது ஒரு குறிப்பிடத்தக்கதாகும்.

உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் என்ற ரீதியாகப் பார்த்தால், கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கிரீன் பேனல் எஃப்.ஆர். எம்.டி.எஃப், கிளப் ஹெச்.டி.எஃப், மீடியம் டென்சிட்டி ஃபைபர் போர்டு, பிளைவுட் & பிளாக் போர்டு, டெக்கரேட்டிவ் வெனீர்ஸ், ஃபுளோரிங் மற்றும் கதவுகள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

கிரீன்பேனல் எஃப்.ஆர்.எம்.டி.எஃப் என்னும் தயாரிப்பானது ஃபயர் ரிட்டார்டன்ட் எம்.டி.எஃப் போர்டுகளாகும். இந்த வகையில் 12 மற்றும் 18 மில்லி மீட்டர் அளவிலான போர்டுகளை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். கிளப் எம்.டி.எஃப் எனும் ரக போர்டுகள் பிளைவுட்டுக்கு மாற்றாக உபயோகப்படுத்தக்கூடிய அளவிலான போர்டுகளாகும். ஈரம் படுகிற இடங்களான சமையலறை, பாத்ரூம், கப்போர்டுகள், ஃபர்னிச்சர், கமர்ஷியல் இண்டீரியர் போன்றவற்றை அமைக்க இந்தவகை போர்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான எம்.டி.எஃப் (மீடியம் டென்சிட்டி ஃபைபர் போர்டு) பயன்பாடு என்பது பிளைவுட்டுக்கு நல்லதொரு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்சமயம் வாடிக்கை யாளர்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வகை மீடியம் டென்சிட்டி ஃபைபர் போர்டு களானது ஒரு இன்ஜினீயர்டு மரமாகும்.

கிரீன் பேனல் எம்.டி.எஃப் போர்டுகள் வார்ட் ரோப்கள், சமையலறை கேபினட்டுகள், பெட்ரூம் கேபினட்டுகள், ஆபீஸ் பர்னிச்சர்கள் போன்ற வற்றைத் தயாரிப்பதில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. கிரீன் பேனல் நிறுவனம் இந்த வகை எம்.டி.எஃப் போர்டுகளில் இன்டீரியர் கிரேடு எம்.டி.எஃப், எக்ஸ்டீரியர் கிரேடு எம்.டி.எஃப், சி.ஏ.ஆர்.பி பி2 எம்.டி.எஃப் மற்றும் பிரீலேமினேட்டட் எம்.டி.எஃப் போர்டுகள் போன்ற ரக போர்டுகளை உற்பத்தி செய்கிறது. இதில் சி.ஏ.ஆர்.பி பி2 எம்.டி.எஃப் ரக போர்டுகள் அதிக அளவிலான சுத்தம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களான பள்ளிகள், மருத்துவ மனைகள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள், மாடுலர் ஃபர்னிச்சர், வொர்க் ஸ்டேஷன்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன.

பிளைவுட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனம், க்வாட்ரா ப்ரோ எனும் காப்புரிமை பெற்றிருக்கும் உற்பத்தி நடைமுறை யைக் கடைப்பிடிப்பதன் மூலம் அதிக தரத்துடன் உற்பத்தி செய்வதாகக் கூறுகிறது.

ஃபுளோரிங் பிரிவில் ஓரிடத் தில் நிறுவியபின் மீண்டும் அதைப் பிரித்து மற்றொரு இடத்தில் நிறுவ ஏதுவான வகையிலான தொழில்நுட்பம் கொண்ட ஃபுளோரிங்குகளை தயாரித்து விற்பனை செய்கிறது கிரீன்பேனல் நிறுவனம். கிரீன் பேனல் டோர்கள் பிரிவில் (கதவுகள்) கமர்ஷியல் ரக மற்றும் டெக்கரேட்டிவ் கதவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 542857, NSE Symbol: GREENPANEL)

நிறுவனத்தின் வர்த்தகம்...

இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வாடிக்கையாளர் வசம் கொண்டு சேர்க்க அகில இந்திய ரீதியாக 17 நேரடி கிளைகள், 2,535 விநியோகஸ்தர்கள் மற்றும் 12,500-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளைக் கொண்ட நெட்வொர்க்கைத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் 100% துணை நிறுவனமாக இயங்கி வரும் கிரீன் பேனல் சிங்கப்பூர் பி.டி.இ லிமிடெட் எனும் நிறுவனம் உலகளாவிய அளவில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்துக்கான கமிஷன் ஏஜென்டாகச் செயல் பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் 100% புதுப் பிக்கத்தக்க அளவிலான அக்ரோ-ஃபாரெஸ்டரி மரத்தால் செய்யப் பட்டுவருவது ஒரு குறிப்பிடத்தக்க தொரு விஷயமாகும். கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனம் செய்த மொத்த விற்பனையில் எம்.டி.எஃப் தயாரிப்புகள் 84% பங்களிப்பையும், பிளைவுட் தயாரிப்புகள் 16% பங்களிப்பையும் கொண்டிருந்தது.

2010-ம் ஆண்டில் கிரீன்பேனல் மேக்ஸ் என்ற பிராண்டை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், பந்த்நகரில் (உத்தர்காண்ட்) இருக்கும் தன்னுடைய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி மையத்தில் எம்.டி.எஃப் போர்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2015-ம் ஆண்டில் ஏற்றுமதி வர்த்தகத்தில் கால்பதித்த இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தியில் தன்னுடைய இரண்டாவது எம்.டி.எஃப் உற்பத்தி மையத்தை ஆரம்பித்தது. 2018-ம் ஆண்டில் ஆசியாவிலேயே மிகப் பெரிய எம்.டி.எஃப் உற்பத்தி மையம் ஒன்றை ஆந்திரப் பிரதேசத்தில் நிறுவியது கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

2019-ம் ஆண்டில் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடி வர்த்தகம் என்கிற இலக்கைத் தொட்டது.

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 542857, NSE Symbol: GREENPANEL)

ரிஸ்க்குகள் என்னென்ன?

எம்.டி.எஃப், பிளைவுட் மற்றும் ஏனைய மரம் சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் தொழில்துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டே வளர்ச்சி அடையும் துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ, அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

தேவைக் குறைவு, போட்டி யாளர்கள் உருவாக்கும் கடுமையான போட்டி, வாடிக்கை யாளர்களின் ரசனை மாறுதல், மூலப்பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பது மற்றும் அவற்றில் ஏற்படக்கூடிய பாதகமான அளவிலான விலை மாறுதல்கள், புதியதாக வரும் தொழில்நுட்பங்கள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!