நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: JAMNAAUTO, BSE CODE: 520051)

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களுக் கான (ஹெவி, மீடியம் மற்றும் லைட் கமர்ஷியல் வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்கள், ட்ராலர்கள்) டேப்பர்டு லீஃப் ஸ்ப்ரிங்குகள் (Tapered leaf springs) மற்றும் பராபோலிக் ஸ்ப்ரிங்குகளைத் (parabolic springs) தயாரிக்கும் ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

இந்தியாவில் பாராபோலிக் ஸ்ப்ரிங்குகளை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் 1954-ம் ஆண்டில் யமுனா நகர் எனும் இடத்தில் சிறிய தொரு லீஃப் ஸ்பிரிங் தொழிலை ஆரம்பித்தார். மெள்ள வளர்ந்த இந்தத் தொழிலை ஒரு கம்பெனியாக 1965-ம் ஆண்டில் மாற்றி அமைத்தார். இன்றைக்கு அகில இந்திய ரீதியாக இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களில் முதலாவது பெரிய நிறுவன மாகவும், உலக அளவில் கணக்கிட்டால் இந்தத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் நோக்கமே உலக அளவில் வாகனங்களுக்கான சஸ்பென்ஸன் களுக்கான தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ வேண்டும் என்பதுதான். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு யு.கே-வை சார்ந்த டின்ஸ்லி ப்ரிட்ஜ் லிமிடெட் எனும் நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றைச் செய்ததன் மூலம் டி.பி.எல் எக்ஸ்ட்ராலைட் ஸ்ப்ரிங் டெக்னாலஜி மற்றும் ஸ்பெஷல் ஸ்டீல் டெக்னாலஜி போன்ற தொழில்நுட்பங்களைப் பெறுகிறது இந்த நிறுவனம்.

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: JAMNAAUTO, 
BSE CODE: 520051)

இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் யமுனா நகர், மாலன்பூர், ஜாம்ஷெட்பூர், புனே, எம்.எம்.நகர் (சென்னை), பிள்ளைபாக்கம் (சென்னை), ஓசூர் மற்றும் பண்ட் நகர் (துணை நிறுவனத்தின் உற்பத்தி வசதி) போன்ற ஊர்களில் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் (வாடிக்கையாளர்கள்) செயல் படும் இடங்களுக்கு அருகே இருக்கிறது. உதாரணமாக, சென்னையில் உள்ள உற்பத்தி மையம் அருகே உள்ள அசோக் லேலாண்ட், பாரத் பென்ஸ் (டைம்லர்) போன்ற கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்களின் தேவைகளையும், பெங்களூருக்கு அருகே உள்ள உற்பத்தி மையம் வோல்வோ, அசோக் லேலாண்ட் (ஓசூர்) மற்றும் ஸ்கேனியா நிறுவனத்துக்குத் தேவையான பாகங்களையும், ஜாம்ஷெட்பூரில் உள்ள உற்பத்தி மையம் அருகே உள்ள டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கான தேவைகளையும், ரோபாரில் உள்ள உற்பத்தி மையம் அருகே உள்ள எஸ்.எம்.எல்-இ சூசு நிறுவனத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தயாரிப்புகளை உடனுக்குடன் இந்த நிறுவனத்தால் வழங்க முடிகிறது.

இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு களுக்குத் தேவையான ஆராய்ச்சி நிலையங் களை மிகவும் சிறப்பான வகையில் சொந்தமாக அமைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் மல்ட்டி, பாராபோலிக் லீஃப் ஸ்ப்ரிங்குகள், லிஃப்ட் ஆக்சில்கள், ஏர் சஸ்பென்ஸன்கள் போன்ற அனைத்து வகை வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் அதிர்வுகளைக் குறைக்க பயன்படும் தீர்வுகளுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களின் தன்மை, அந்த வாகனங்கள் பயணிக்கிற சாலை மற்றும் அவை எடுத்துச் செல்லக்கூடிய எடை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு தயாரிப்புகளை வடிவமைத்தல் என்ற நிலையில் இருந்து வாடிக்கையாளருக்குத் தயாரிப்புகளை கமர்ஷியல் உபயோகத்துக்கு உற்பத்தி செய்துகொடுப்பது வரையிலான பல்வேறு படிநிலைகளையும் இந்த ஆராய்ச்சி நிலையங்களில் ஒருங்கே கொண்டுள்ளது.

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: JAMNAAUTO, 
BSE CODE: 520051)

நிறுவனத் தயாரிப்புகள்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் என்கிற ரீதியில் பார்த்தால், லீஃப் ஸ்பிரிங்குகள், பாராபாலிக் லீஃப் ஸ்பிரிங்குகள், Z-ஸ்ப்ரிங்குகள், ஸ்டெபிலைசர் பார்கள், பஸ்களுக்கான ஏர் சஸ்பென்ஸன்கள், டிரெய்லர்களுக்கான ஏர் சஸ்பென்ஸன்கள், லிஃப்ட் ஆக்சில்கள், டிரெய்லர் களுக்கான லிஃப்ட் ஆக்சிலுடன் கூடிய மெக்கானிக்கல் மற்றும் ஏர் சஸ்பென்ஸன்கள், டிரெய்லர்களுக்கான மெக்கானிக்கல் சஸ்பென்ஸன்கள், லிஃப்ட் ஆக்சில்களுக்கான உதிரிபாகங்கள், டிரெய்லர்களுக்குத் தேவையான ஏனைய உதிரிபாகங்கள், ஸ்ப்ரிங் சஸ்பென்ஸன்களுக்கான ஏனைய உதிரிபாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்தும் அவற்றில் சிலவற்றை வர்த்தகம் மட்டும் செய்தும் வருகிறது இந்த நிறுவனம்.

போகி புராக்கெட்கள், நோபோ புராக்கெட்கள், ஏ.டி.எஸ் புராக்கெட்கள், ஹேங்கர் ஷாக்கில்கள், ஸ்ப்ரிங் பின்கள், யுபோல்ட்டுகள் போன்றவற்றை யும் எதிர்காலத்தில் உற்பத்தி செய்து, வர்த்தகம் செய்யவும் திட்டங்களை வைத்துள்ளது இந்த நிறுவனம்.

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: JAMNAAUTO, 
BSE CODE: 520051)

ஆண்டொன்றுக்கு 1.4 லட்சம் டன்களுக்கும் மேலான எடையிலான தயாரிப்புகளை வழங்கும் அளவுக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், வாகன உற்பத்தியாளர்களுக்குத் தேவையான முந்நூறுக்கும் மேற்பட்ட ஓ.இ.எம் உதிரி பாகங்களையும், தேய்மானத்தின் காரணமாக மாற்றப்படும் சந்தையில் விற்பனை செய்வதற் கான (ஆஃப்டர் மார்க்கெட்) உதிரிபாகங்களாக 5,000-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். அகில இந்திய ரீதியாக 16,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் வாயிலாக ‘ஆஃப்டர் மார்க்கெட்’ விற்பனை யைச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பாராபோலிக் ஸ்பிரிங்குகளை இந்தியாவில் முதன்முதலாக இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனத்தின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க விஷயம். 2010-ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனத் தயாரிப்புகளில் முன்னணியில் விற்பனை யாகும் இரண்டு வாகனங்களில் முழுக்க முழுக்க பாராபாலிக் ஸ்பிரிங்குகளை உபயோகிக்க ஆரம்பித்தது. அதே ஆண்டில் அமெரிக்க நிறுவனமான ரைட்வெல் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்துடன் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் லிஃப்ட் ஆக்சில்களுக்கான தொழில்நுட்பக் கூட்டணியை அமைத்தது இந்த நிறுவனம். 2011-ம் ஆண்டில் இந்த நிறுவனத் தின் பங்குகள் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

அசோக் லேலாண்ட், பாரத் பென்ஸ், ஃபோர்ஸ் மோட்டார்ஸ், எஃப்.யு.எஸ்.ஓ, ஜெனரல் மோட்டார்ஸ், இசுசூ, மஹிந்திரா, ரெனால்ட் நிஸான், ஸ்கானியா, எஸ்.எம்.எல் இசுசூ, டடானோ எஸ்கார்ட்ஸ் (TADANO Escorts), டாடா மோட்டார்ஸ், வோல்வோ, வி.இ கமர்ஷியல் வெகிக்கிள்ஸ் (வோல்வோ-ஈச்சர் மோட்டார்ஸ் கூட்டணி) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளராக இருக்கின்றன.

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: JAMNAAUTO, 
BSE CODE: 520051)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கமர்ஷியல் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. கமர்ஷியல் வாகன விற்பனை (இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் நிறுவனங்களின் விற்பனை) மற்றும் உபயோகத்தின்போது ஏற்படும் தேய்மானத்துக் காக உதிரிபாகங்களை மாற்றும் ‘ஆஃப்டர் மார்க்கெட்’ என்ற இரண்டு சந்தைகளுமே பொருளாதாரம் எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ, அதையொட்டியே வியாபாரத்துக்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளராமல் போனாலோ, தேக்கநிலையை சந்தித்தாலோ, அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மூலப் பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுதல், தொழில் ரீதியான போட்டி போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!