பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்! (BSE Code: 543434, NSE Symbol: SUPRIYA)

சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
News
சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் நிறுவனம், சென்ற வருடம் டிசம்பரில் ஐ.பி.ஓ-வை வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்.

மருந்து உற்பத்தித் துறையில்...

இந்த நிறுவனம் மருந்து உற்பத்தித் துறையில் பல்வேறு வகையான ஏ.பி.ஐ-க்களை (Active Pharmaceutical Ingredient) உற்பத்தி செய்து வருகிற நிறுவனமாகும். ஒவ்வாமைக்கான சிகிச்சைகளுக்கான மருத்துகள் (Anti-allergic), ஆன்டி-ஹிஸ்டமைன், வைட்டமின்கள், ஆஸ்த்துமாவுக்கு செய்யப்படும் சிகிச்சைக் கான மருத்துகள், மயக்க மருத்துவத் துறையில் பயன் படுத்தப்படும் மருந்துகள் போன்ற மருத்துவ சிகிச்சைப் பிரிவு மருந்துகளுக்கான ஏ.பி.ஐ-க்களை உற்பத்தி செய்து வருகிறது.

வளர்ச்சியும் வரலாறும்...

ஆரம்பத்தில் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2008-ம் ஆண்டில் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டில் கீட்டாமைன் ஹைட்ரோ குளோரைட் உற்பத்தியில் கால்பதித்தது இந்த நிறுவனம். 2010-ம் ஆண்டில் க்ளோர்பெனிராமைன் மாலியேட் எனும் தயாரிப்புக்கான சி.இ.பி-யையும் 2013-ம் ஆண்டில் இதற்கான ஐ.டி.எல் (Import Drug Licence) எனும் அங்கீகாரத்தையும் பெற்றது இந்த நிறுவனம்.

சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543434, NSE Symbol: SUPRIYA)

2014-ம் ஆண்டில் அமெரிக்க மருந்துகள் அங்கீகரிப்பு முகமை யான எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்த நிறுவனம், 2016-ல் ஐரோப்பிய யூனியனின் நல்ல உற்பத்தி நடைமுறைகளை பின்பற்றுவதற்கான (Good manufacturing practice) அங்கீகாரத்தையும், இ.டி.க்யூ.எம்மின் (European Directorate for the Quality of Medicines & HealthCare) அங்கீகாரத்தையும் பெற்றது.

2018-ம் ஆண்டில் ப்ரோம் பெனிராமைன் மலியேட், மேபைரா மைன் மலியேட் மற்றும் கீட்டாமைன் ஹைட்ரோ குளோரைட் போன்ற மருந்துகளுக்கான சி.இ.பி-யைப் பெற்றது இந்த நிறுவனம்.

2020-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக யு.எஸ்.எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்த நிறுவனம், 2021-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையில் (BSW & NSE) பட்டியலிடப்பட்டது. இதே ஆண்டில் பென்ட்டோசைபைலின், எஸ்கீட்டொமைன் ஹைட்ரோ குளோரைட், சால்ப்யூட்டோமால் சல்பேட் போன்றவற்றுக்கான சி.இ.பி-யைப் பெற்றது.

நிறுவனத்தின் சிறப்பு...

ஏ.பி.ஐ-க்கள் உற்பத்தித் துறையில் உள்ள சிறப்பான பல நடை முறைகளைக்கொண்டு உற்பத்தியைச் செய்து வருவதாகச் சொல்லும் இந்த நிறுவனம், தொடர்ந்து இந்த உற்பத்தி நடை முறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பெருமையுடன் கூறுகிறது.

கடந்த மார்ச் 31, 2022 நிலவரப்படி, 38 ஏ.பி.ஐ-க்களை உற்பத்தி செய்தும், உலக அளவில் 86 நாடுகளில் கால்பதித்தும், 1,200-க்கும் மேற்பட்ட நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களைக் கொண்டும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது சுப்ரியா லைஃப்சயின்ஸ் நிறுவனம்.

க்ளோர் பெனிராமைன் மாலியேட், கீட்டாமைன் ஹைட்ரோ குளோரைட் மற்றும் சால்பூட்டமால் சல்பேட் போன்றவற்றை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மத்தியில் முன்னணி நிறுவனமாகவும் திகழ்கிறது இந்த நிறுவனம்.

தன்னுடைய தனித்துவமான தயாரிப்புகளில் முன்னணி நிலையை அடைந்திருப்பது, பின்னோக் கிய ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கிற பிசினஸ் மாடல், உலக அளவில் மிகவும் டைவர்சிஃபைட் டான அளவிலான பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகிற விற்று வரவு வருமானம், அதிநவீன உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான வசதிகளைக் கொண்டிருத்தல், அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தகுதி பெற்ற உற்பத்தி நடை முறைக்கான பணியாளர்கள் போன்றவற்றில் இந்த நிறுவனம் தனக்கென்ற சிறப்பு குணாதிசயமாகக் கொண்டிருக்கிறது.

சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543434, NSE Symbol: SUPRIYA)

உற்பத்தி வசதிகள்...

கிட்டத்தட்ட 47,000 சதுர மீட்டர் அளவிலான உற்பத்தி வசதியைக் கொண்டு இயங்கி வருகிற இந்த நிறுவனம், தர உறுதி, தரக்கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உற்பத்தி செய்த மருந்துப் பொருள்களை சிகிச்சைப் பிரிவுகள் வாரியாகத் தனித் தனியாகப் பாதுகாத்து சேமித்து வைக்கும் வசதி போன்றவற்றுக்கு என்று வரையறுக்கப்பட்ட இடங்களுடன் திட்டமிட்ட அளவில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதியானது நாளொன்றுக்கு 550 கிலோ லிட்டர்கள் என்ற அளவிலான உற்பத்தித்திறனைக் கொண்டும் உற்பத்தி செய்யப் பட்ட மருந்துப் பொருள்களை உடனடியாக பத்திரப்படுத்தி வைக்கத் தகுந்த (சுத்தம், வெளிச்சம், அறையின் வெப்ப /ஈரப்பத சூழல் போன்ற பல்வேறு மருந்துகளுக்கான குணாதிசயத் தின் தேவைகளுக்கு இணங்க) பாதுகாப்பான கிடங்கு வசதியை யும் கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி.சி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் [Lote Maharashtra Industrial Development Corporation (MIDC)] அமைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி வசதி மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஆராய்ச்சி மையம் (DSIR approved R&D facility) ஆகும்.

நல்லதொரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியைத் தன்வசத்தே கொண்டிருப்பதால், தற்சமயம் (மார்ச் 31, 2022 நிலவரப்படி) 14 ஆக்டிவ் அமெரிக்க டிரக் மாஸ்டர் ஃபைல் கள், எட்டு சி.இ.பி-க்கள் (Certificate of Suitability) போன்ற வற்றை வைத்திருக்கும் இந்த நிறுவனம், தன்னுடைய பல்வேறு தயாரிப்புகளுக்கு ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற உலக அளவிலான பல்வேறு நாடுகளின் அரசாங்கத்தின் மருந்துப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு நியமங்களின் அங்கீகாரத்தையும் (EMA, US FDA, WHO, PMDA, TGA, KFDA, ANVISA உள்ளிட்ட) பெற்றுள்ளது. மேலும், மூன்று உற்பத்தி நடைமுறை களுக்கான காப்புரிமைக்காக இந்திய (Process Patent) அரசின் காப்புரிமைக்கான அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது இந்த நிறுவனம்.

சுப்ரியா லைஃப்சயின்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543434, NSE Symbol: SUPRIYA)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதால், அயல்நாட்டு மருந்துக் கட்டுப்பாட்டு முகமை களின் அங்கீகாரத்தைப் பெறுதல் அதற்கென்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்யப்படும் தணிக்கை ரீதியான சோதனை களில் தேர்வு பெறுதலின் அவசியம் போன்றவையும் இந்த நிறுவனத் துக்கான இடர்ப்பாடுகளே ஆகும்.

மேலும், அரசாங்கங்கள் பல்வேறு விஷயங்களில் எடுக்கும் கொள்கை முடிவுகளும் (மருந்துகளின் தரம், உபயோகம் இறக்குமதி, ஏற்றுமதி, ஜெனரிக் மருந்து உபயோகம் உள்ளிட்ட பல விஷயங்களில்) மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆராய்ச்சியில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தமும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கு இருக்கவே செய்கிறது. போட்டியாளர்கள் ஆராய்ச்சியில் பெறுகிற பெரிய அளவிலான வெற்றி, புதியதாக வருகிற அதிநவீன தொழில்நுட்பம், வாடிக்கை யாளர்களாக இருக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய உற்பத்தி நடைமுறையில் செய்யும் மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். பல அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால், இந்த நிறுவனத்துக்கு பாதகமான அளவில் நடக்கக்கூடிய அந்நிய செலாவணி மதிப்பு மாறுதலும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எந்தப் பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!