நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ் லிமிடெட்! (BSE Code: 500420, NSE Symbol: TORNTPHARM)

டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா 1959-ம் ஆண்டில் யு.என். மேத்தா என்பவரால் டிரினிட்டி லேபாரட்டரீஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றைக்கு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனமான டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ்.

நிறுவனத்தின் வரலாறு...

1971-ம் ஆண்டில் டாரென்ட் ஃபார்மெச் சூட்டிக்கல்ஸ் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த நிறுவனம், 1980-ம் ஆண்டில் அகமதாபாத்தில் முதல் உற்பத்திப் பிரிவைத் தொடங்கியது. 1983-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ஆர்டர்களைப் பெற்றதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் கால்பதித்தது.

1995-ம் ஆண்டில் டாரென்ட் குஜராத் பயோ டெக் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டது. 1996-ம் ஆண்டில் அதிநவீன ஆராய்ச்சி பிரிவு ஒன்றைத் தொடங்கியது. 1998-ம் ஆண்டில் டாரென்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத் தின் ஃபார்மா சம்பந்தப்பட்ட வர்த்தகத்தை மட்டும் பிரித்துக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.

டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ் 
லிமிடெட்! (BSE Code: 500420, NSE Symbol: TORNTPHARM)

1999-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் புதிய வகை கெமிக்கல் ஒன்றுக்கான காப்புரிமையைப் பதிவு செய்தது. இதே ஆண்டில் டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ் நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு ப்ரைமா, விஸ்டா, சைகேன் என்ற மூன்று உட்பிரிவுகளாகச் செயல்பட வைக்கப்பட்டது.

2000-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதியானது ஓ.இ.சி.டி தரத்தில் நல்லதொரு நடைமுறைகளைப் பின்பற்றுகிற லேப் என்ற சான்றிதழைப் பெற்றது. 2001-ம் ஆண்டில் டாரென்ட் டோ பிரேசில் எல்.டீ.டி.ஏ (Torrento Brasil LTDA) என்னும் நிறுவனம் ஒன்றை பிரேசிலில் தொடங்கியது இந்த நிறுவனம்.

2002-ம் ஆண்டில் அட்வான்ஸ்டு கிளைக்கோ சைலேஷன் எண்ட் புராடெக்ட்ஸ் (ACE) எனும் வேதிப்பொருளைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றது இந்த நிறுவனம். இதே ஆண்டில் நான்காவது பிரிவாக மைண்ட் எனும் மார்க்கெட்டிங் பிரிவையும் உருவாக்கியது இந்த நிறுவனம். இதே ஆண்டில் பிரேசில் நாட்டின் சானிட்டரி சர்வைலன்ஸ் ஏஜென்சியானது டாரென்ட் ஃபார்மெச் சூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதியை பயோ ஈக்குவேலன்ஸ் குறித்த ஆராய்ச்சிக்கான அங்கீகாரமான அன்விசா (ANVISA) என்ற அங்கீகாரத்தை வழங்கியது.

2005-ம் ஆண்டில் இமாசலப் பிரதேசத்தில் புதியதொரு உற்பத்தி பிரிவை நிறுவியது இந்த நிறுவனம். மேலும், நோவோ நார்டிஸ்க் இந்தியா எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதன் மூலம் அந்த நிறுவனத்துக்காக இன்சுலினை உற்பத்தி செய்து பேக்கேஜிங் செய்துதரும் வசதி ஒன்றை நிறுவியது. இதே ஆண்டில் ஃபைசர் நிறுவனத்துக்குச் சொந்தமாக ஜெர்மனியில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனமான ஹியு மான் ஃபார்மா ஜி.எம்.பி.ஹெச்&கோ ஜெனெரிகா கே.ஜி என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

2006-ம் ஆண்டில் குஜாராத்தில் உள்ள இன்ட்ராட் எனும் இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபார்முலேஷன்கள் உற்பத்தி மையமானது அமெரிக்க மருந்துகள் உற்பத்தி அங்கீகார முகமையான எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும், தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஃபார்மா டைனமிக்ஸ் (PTY) லிமிடெட் என்ற நிறுவனத்துடன் பல தயாரிப்புகளை சப்ளை செய்வதற்கான டெக்னிக்கல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது இந்த நிறுவனம்.

2007-ம் ஆண்டில் சிக்கீமில் ஒரு புதிய உற்பத்தி மையத்தைக் கட்டுமானம் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டில் கவர்மென்ட் ஆஃப் அப்பர் பவேரியா, ஜெர்மனியிடம் இருந்து ஜி.எம்.பி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது. 2009-ம் ஆண்டில் அஸ்ட்ரா சென்கா நிறுவனத்தின் தயாரிப்புகளை உலக அளவில் மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது இந்த நிறுவனம்.

2010-ம் ஆண்டு மகப்பேறு மருத்துவத்துக்கான மருந்துகள் தயாரிப்பில் கால்பதித்தது இந்த நிறுவனம். மேலும், இதே ஆண்டில் மெக்ஸிகோவில் லேபாரட்டரீஸ் டாரென்ட் எஸ்.ஏ.டி.சி.வி என்ற லேபாரட்டரியைத் தொடங் கியது இந்த நிறுவனம். மேலும், இந்தியாவில் தஹீஜ் எனும் இடத்தில் ஓர் உற்பத்தி மையத் தைத் தொடங்குவதற்கான கட்டுமானத்தை இதே ஆண்டில் தொடங்கியது. யுனைடெட் கிங்டம் மற்றும் ருமேனியா நாட்டில் தன்னுடைய துணை நிறுவனங்களைத் தொடங்கியதும் இதே ஆண்டில்தான். மேலும், புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு உதவும் மருந்துகள் உற்பத்தியிலும் இதே ஆண்டில் கால்பதித்தது இந்த நிறுவனம்.

2013-ம் ஆண்டில் ரிட்டக் சிமாப், அட்லைய்முமாப் மற்றும் செடுக்சிமாப் என்ற மூன்று பயோ சிமிலர்கள் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸுடன் செய்து கொண்டது.

டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ் 
லிமிடெட்! (BSE Code: 500420, NSE Symbol: TORNTPHARM)

2014-ம் ஆண்டில் நெப்ராலஜி சம்பந்தப்பட்ட மருந்துகளை கையாள்வதற்கான தனிப்பட்ட டிவிஷனைத் தொடங்கியது. இதே ஆண்டில்தான் தஹிஜில் நிறுவப்பட்டு வந்த உற்பத்தி மையமானது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 2015-ம் ஆண்டில் சிக் ஃபார்மா எனும் நிறுவனத்தின் 100% பங்குகளை யும் வாங்கியதன் மூலம் அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தஹீஜ் உற்பத்தி வசதிக்கு யு.எஸ் எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரம் கிடைத்தது. இதே ஆண்டில் குளோகெம் இண்டஸ்ட்ரி லிமிடெட் எனும் ஹைதராபாத்தை சார்ந்த நிறுவனத்தின் ஏ.பி.ஐ (Active Pharmacutical Incredients) உற்பத்தி மையத்தை வாங்கியது.

2017-ம் ஆண்டில் யூனிகெம் நிறுவனத்தின் இந்திய மற்றும் நேபாள நாட்டு வியாபார உரிமை யையும், சிக்கீமில் செயல்பட்டு வந்த அந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதியையும் கையகப்படுத்தியது. இதே ஆண்டில் நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் பெண்களுக்கான ஹெல்த்கேர் பிராண்டுகளை கையகப்படுத்தியது. 2018-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான பயோ-பார்ம் இங்க் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

2019-ம் ஆண்டில் க்ளென்மார்க் நிறுவனத்துடன் ரீமோக்ளிப் லோசின் எடாபோனேட் எனும் மருந்தை சந்தைப்படுத்துவதற்கான லைசென்ஸிங் ஒப்பந்தத்தை செய்துகொண்டது. 2021-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான மெர்க்&கோ இங்க் (கெனில்வொர்த், நியூ ஜெர்சியில் உள்ள நிறுவனம்) நிறுவனத்தின் தயாரிப்புகளான எம்.எஸ்.டி மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல் நியூபிராவிர் என்ற தயாரிப்புகளை இந்தியாவில் மால் நியூட்டர் எனும் பிராண்டில் அறிமுகப்படுத்தியது. இதே ஆண்டில் லில்லி நிறுவனத்தின் தயாரிப்பான பேரிசிட்டிநிப் எனும் மருந்தை வாலன்டரி லைசென்ஸிங் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது. 2022-ம் ஆண்டில் ஸ்டிப்டோவிட்-இ, பைனாஸ்ட், பைனாஸ்ட்-டீ மற்றும் டைனா பிரஸ் எனும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் பிராண்டுகளை கையகப் படுத்துவதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.

டாரென்ட் ஃபார்மெச்சூட்டிக்கல்ஸ் 
லிமிடெட்! (BSE Code: 500420, NSE Symbol: TORNTPHARM)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தித் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் பொருந்தும். மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அங்கீகாரம் அளிக்கும் அரசாங்க ஆணையங்களின் தொடர் கட்டுப்பாட்டில் இந்த வித நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டியிருப்பது முக்கியமான ரிஸ்க். ஆராய்ச்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருப்பது ஒரு கூடுதல் ரிஸ்க். மூலப் பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், போட்டியாளர்கள் கண்டுபிடிக்கும் புதிய மருந்து கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். மேலும், பல்வேறு நாடுகளின் மருந்துகள் குறித்த கொள்கை முடிவுகளும் இந்த வித நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்பே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!