நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட்! (BSE Code: 543463, NSE Symbol: MANYAVAR) - கம்பெனி பயோடேட்டா

வேதாந்த் ஃபேஷன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வேதாந்த் ஃபேஷன்ஸ்

ஆண்டொன்றுக்கு 95 லட்சம் முதல் ஒரு கோடி வரை திருமணங்கள் இந்தியாவில் நடப்பது இந்த நிறுவனத்துக்கு சாதகமான விஷயம் ஆகும்!

கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட். 2002-ம் ஆண்டில் கம்பெனி சட்டத்தின்கீழ் வேதாந்த் ஃபேஷன்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான திருமணம் மற்றும் பாரம்பர்ய விழாக்களில் அணியும் ஆடை அணிகலன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

மெஹந்தி, ஹால்தி, சங்கீத், என்கேஜ்மென்ட் மற்றும் திருமணம் போன்ற திருமணம் சார்ந்த விழாக்களுக்கும், தீபாவளி, துர்கா பூஜா, ராக்கி, கணேஷ் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை களுக்கும் மக்கள் வாங்கும் பாரம்பர்ய ரக உடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது வேதாந்த் ஃபேஷன்ஸ். மான்யவார் (Manyavar), மோஹே (Mohey), மேபாஸ் (Mebaz), த்வாமேவ் (Twamev) மற்றும் மன்தன் (Manthan) உள்ளிட்ட பல பிராண்டுகளில் வர்த்தகம் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

தான் செயல்படும் துறையில் ஒரு முன்னணி பிராண்டாகத் திகழும் இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 245 நகரங்களில் 649 பிரத்யேக பிராண்டட் அவுட்லெட்களுடன் (இதில் 16 ஸ்டோர்கள் வெளிநாடுகளில்) வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மார்ச் 2023 நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் ரீடெயில் விற்பனை வசதி 1.47 மில்லியன் சதுர அடி அளவில் இருக்கிறது.

ஆண்களுக்கான பாரம்பர்ய ஆடைகளான இன்டோ-வெஸ்டர்ன், ஷெர்வானிஸ், குர்த்தாஸ், ஜாக்கெட்ஸ் மற்றும் உடைகளின் ஒரு பகுதியாக இருக்கும் சிறிய பொருள்களான (Accessories) ஜுட்டிஸ் (காலணி ரகம்), சாபா (தலையில் அணியும் தலைப்பாகை), மாலா (கழுத்தில் அணியும் அணிகலன் ரகம்) போன்றவற்றை மன்யவார் (Manyavar) என்னும் பிராண்டில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

மேலும், பெண்களுக்கான ஆடைகளான லெஹெங்காஸ், சேலைகள், சூட்கள், கவுன்கள் மற்றும் குர்த்திகளை உற்பத்தி செய்து மோஹே (Mohey) என்னும் பிராண்டில் விற்பனை செய்துவருகிறது.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட்! (BSE Code: 543463, NSE Symbol: MANYAVAR) - கம்பெனி பயோடேட்டா

நிறுவனத்தின் வளர்ச்சி...

இந்த நிறுவனத்தின் முன்னணி பிராண்டான ‘மான்யவார்’ என்னும் பிராண்ட் 1999-ம் ஆண்டில் இந்த நிறுவனம், பதிவு செய்யப்படும் முன்பிருந்தே சந்தையில் இருந்து வருகிறது. 2002-ம் ஆண்டில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபின் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் முதல் பிராண்ட் அவுட்லெட் தொடங்கப்பட்டது.

2011-ம் ஆண்டில் ஐக்கிய அரசு நாடுகளில் இந்த நிறுவனத்தின் முதலாவது இன்டர்நேஷனல் ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகளின் விற்று வரவானது ரூ100 என்கிற இலக்கை எட்டியது.

2015-ம் ஆண்டில் மோஹே என்னும் பெண்களுக்கான ஆடைகளை அறிமுகப்படுத்தியது வேதாந்த் ஃபேஷன்ஸ். 2016-ம் ஆண்டில் பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டு களிலிருந்து வந்த விற்றுவரவானது ரூ.500 கோடி என்கிற இலக்கைத் தொட்டது. இதே ஆண்டில் அமெரிக்காவில் தன் முதல் ஸ்டோரைத் தொடங்கியது.

2017-ம் ஆண்டில் ‘மேபாஸ்’ என்னும் பிராண்டைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம் 2018-ம் ஆண்டில் ’மன்தன்’ (Manthan) என்னும் வேல்யூ செலிபிரேஷன் பிராண்டை அறிமுகப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் ‘த்வாமேவ்’ என்னும் ஆண்களுக்கான பிரீமியம் ஆடைகள் பிராண்டை அறிமுகப்படுத்தியது.

2020-ம் ஆண்டில் ‘மான்யவார்’ பிராண்டுக்கான மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், 2022-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட்! (BSE Code: 543463, NSE Symbol: MANYAVAR) - கம்பெனி பயோடேட்டா

சாதகமான அம்சங்கள்...

2021 ஆண்டு நிலவரப்படி, இந்திய அளவில் கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 34% அளவிலானவர்கள் திருமண வயதில் இருக்கிற (21 முதல் 39 வயதில்) ஆண் மற்றும் பெண்களாக இருக்கின்றனர். ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 95 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான எண்ணிக்கையில் திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன.

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 25-க்கும் மேற்பட்ட பண்டி கைகள் பெரிய அளவில் கொண் டாடப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் பணியாளர் களை இந்தவித பண்டிகைகளை அலுவலகத்தில் கொண்டாடுவதற்கு ஊக்குவிக்கின்றன. இவை அனைத்தும் இந்தத் துறையில் உள்ள வியாபார வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான காரணிகளாக உள்ளன.

பிரத்யேக பிராண்ட் ஸ்டோர் களில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆடை நிபுணர்கள் வாடிக்கை யாளர்களின் ரசனை மற்றும் தேவைக்கேற்ப ஆலோசனைகளை வழங்குவது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சம் ஆகும்.

மெட்ரோ நகரங்கள் மற்றும் டயர்-1 நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்தவித பிராண் டட் நிறுவனங்கள், தற்போது டயர்-2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் கால்பதிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும்.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட்! (BSE Code: 543463, NSE Symbol: MANYAVAR) - கம்பெனி பயோடேட்டா

ரிஸ்க்குகள் என்னென்ன?

திருமணம் மற்றும் விழாக்கால ஆடைகள் தயாரிப்பில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. வாடிக்கை யாளர்களின் ரசனை மாறுதல் மற்றும் தேவைகளில் ஏற்படும் மாறுதல் என இந்த இரண்டுமே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

இந்த நிறுவனம் அறிமுகப் படுத்தும் புதிய தயாரிப்புகள் மற்றும் டிசைன்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போவதும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்கப்படும் பிரத்யேக பிராண்டட் அவுட்லெட்டுகளில் பெரும் பாலானவை ஃபிரான்சைஸ் முறையில் இயங்குவதாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் இந்த ஃபிரான்சைஸ் உறவை நீட்டிக்க முடியாமல் போனால் அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

சொந்த தயாரிப்புகளைத் தவிர்த்து, நிறைய தயாரிப்பு களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். இதில் உருவாகக்கூடிய சிக்கல்களும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியான போட்டி, திறமையான பணியாளர்கள் கிடைக்காமல்போதல், வாடிக்கையாளர் ரசனை மாறுதல், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரித்தல் போன்ற வையும் இந்த நிறுவனத்திற்கான ரிஸ்க்குகளே ஆகும்.

இந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி யானது, பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானத்தைச் பெருமளவு சார்ந்திருக்கும் துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி அடையாமல் போனாலோ, தேக்கநிலையை சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதியானது பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின்நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின், முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.

தொழில்நுட்ப வசதியுடன்கூடிய வளர்ச்சி!

நவீன தொழில்நுட்பம் சார்ந்த சப்ளை செயின் வசதியைக் கொண்டிருத்தல், டிசம்பர் 2021 நிலவரப்படி, ஆடைகளை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் 480-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், பல்வேறு சிறப்பு வேலைகளைச் செய்யும் கைவினைஞர்களுடன் கொண்டிருக்கும் நீண்டநாள் வர்த்தக ரீதியிலான உறவு, தலைசிறந்த இன்வென்ட்ரி நிர்வாகம், அனைத்து பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டிலும் உள்ள ஸ்டாக் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் வசதி, ஸ்டோர்கள் அனைத்தும் இணைந்திருக்கும் என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங் (ERP) போன்ற நடைமுறைகளைக் கொண்டிருப்பதால் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மத்திய வேர்ஹவுஸ் வசதியானது கொல்கத்தாவில் 0.26 மில்லியன் சதுர அடி அளவாக இருக்கிறது. இந்நிறுவனம், தொடங்கப்பட்ட நாள் முதலாகவே ஜினிசிஸ் (GINESYS) இ.ஆர்.பி வசதியைக் கொண்டிருக்கிறது. 2009-ல் பிசினஸ் அனலிட்டிக்ஸ் டூல், 2012-ல் பி.ஓ.எஸ் ஆர்டர் மேனேஜ்மென்ட், 2019-ல் ஸ்வயம் ஆப், 2021-ல் ஜாபர் போர்ட்டல் உள்ளிட்ட பல்வேறு கணினி சார்ந்த தொழில்நுட்ப வசதியை உபயோகிக்க ஆரம்பித்தது.