நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எல்.ஐ.சி பங்கு வெளியீடு... பாலிசிதாரர்களுக்கு சலுகை..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கூடிய விரைவில் வெளிவரவிருக்கும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் அதன் பாலிசிதாரர் களுக்கு 10% இடஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பங்கு முதலீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசி தாரர்கள் டீமேட் கணக்கைக் கட்டாயம் தொடங்க வேண்டும்; பான் மற்றும் ஆதார் கார்டு விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

இதற்கு முதலில் www.licindia.in என்ற வெப்சைட்டுக்குச் சென்று, அங்கு பாலிசி தாரர்கள் தங்களின் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். வாடிக்கை யாளர்கள் முதலில் வெப்சைட்டில் உள்நுழைந்ததும், அங்குள்ள ‘Online PAN registration’ என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உங்கள் பெயர், பாலினம், பான் எண், மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அவற்றைப் பூர்த்தி செய்தபின், கேப்ட்சா குறியீட்டைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ‘Get OTP’ என்பதை க்ளிக் செய்து, மொபைல் நம்பருக்கு வரும் ஓ.டி.பி எண்ணை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்படி பான் கார்டை பாலிசியுடன் இணைத்துக்கொள்ளலாம்.

எல்.ஐ.சி பங்கு வெளியீடு...
பாலிசிதாரர்களுக்கு சலுகை..!

பாலிசிதாரர்கள் டீமேட் கணக்குகளைத் தொடங்க என்.எஸ்.டி.எல் (NSDL): https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=19 அல்லது சி.டி.எஸ்.எல் (CDSL): https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=18 லிங்குகளைக் க்ளிக் செய்து டீமேட் கணக்கு தொடங்கலாம்.

டீமேட் கணக்கு தொடங்க பாலிசிதாரர்களின் புகைப்படம், பான் கார்டு, முகவரிச் சான்று மற்றும் கேன்சல் செய்யப்பட்ட காசோலை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற முகவர்களை அணுகலாம். எல்.ஐ.சி பங்குகளை வாங்க இப்போதே தயாராகுங்கள்!