தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரிலையன்ஸ், டி.எம்.பி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. அண்மையில் முடிவுகளை வெளியிட்ட சில நிறுவனங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICIBank)

இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 37% அதிகரித்து, ரூ.7,558 கோடி யாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 26% அதிகரித்து, ரூ.14,787 கோடியாக உள்ளது.

டிஜிட்டல் துறையில் யு.பி.ஐ பேமென்ட் மூலம் அதிக வளர்ச்சியை இந்த வங்கி தொடர்ந்து பெற்று வருகிறது. இதர வங்கியின் வாடிக்கையாளர்கள் சுமார் 85 லட்சம் பேர் மறைமுக மாக இந்த வங்கியின் யு.பி.ஐ பேமென்ட்டைப் பயன் படுத்தி வருகின்றனர். மேலும், நாட்டில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான ஃபாஸ்ட் டேக் சேவைகளை இந்த வங்கி அளித்து வருகிறது.

ரிலையன்ஸ், டி.எம்.பி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்... ரிசல்ட் எப்படி?

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)

இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 61.9% அதிகரித்து, ரூ.5,853 கோடி யாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 32.4% அதிகரித்து, ரூ.11,459 கோடியாக உள்ளது. சிட்டி பேங்கின் இந்திய வாடிக்கை யாளர்கள் ஆக்ஸிஸ் வங்கி யுடன் முழுமையாக இணைக் கப்பட்டதன் காரணமாக வங்கியின் வருமானம் கணிச மாக அதிகரித்துள்ளது.

பந்தன் பேங்க் (Bandhan Bank)

இந்த வங்கியின் லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 66.2% குறைந்து, ரூ.290.6 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர வட்டி வருமானம் 2.1% குறைந்து, ரூ.2,080.40 கோடியாக உள்ளது.

வாராக்கடன் பிரச்னை களால் இந்த வங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக பின்னடைவைச் சந்தித்து வந்தது. ஆனால், அந்தக் கடுமையான காலகட்டத்தை இந்த வங்கி கடந்துவந்து விட்டதாக இந்த வங்கியின் நிறுவனர் சொல்லியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

டி.எம்.பி (TMB)

நடப்பு 2022-23-ம் ஆண்டின் 3-வது காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் 5.69% வளர்ச்சியடைந்து ரூ.78,242 கோடியாக உயர்ந்து உள்ளது. இந்த வங்கி திரட்டிய ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.43,440 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் ரூ.34,802 கோடி யாகவும் உள்ளன.

இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.279.70 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்தது. அதாவது, நிகர லாபம் 37.86% வளர்ச்சி அடைந்துள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.534.27 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் ரூ.452.76 கோடியாக இருந்தது. அதாவது, தற்போது 18% வளர்ச்சி அடைந் துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக உள்ளது. சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் இதன் நிகர வருமானம் 15% அதிகரித்து, ரூ.2.20 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 14.8% குறைந்து, ரூ.15,792 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிட்டு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட முனைப்பு காட்டி வருகிறது. சென்ற காலாண்டில் ரீடெய்ல், தொலைத்தொடர்பு துறை இந்த நிறுவனத்துக்கு அதிக வருமானத்தைத் தந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் (HDFC Life Insurance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 15% அதிகரித்து, ரூ.315 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பிரீமியம் மூலம் கிடைக்கும் வருமானம் 19% அதிகரித்து, ரூ.14,379 கோடியாக உள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 88% குறைந்து, ரூ.490 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 2.7% அதிகரித்து, ரூ.39,134 கோடியாக உள்ளது. தயாரிப்பு செலவினங்கள் அதிகரித்தது, ஏற்றுமதி குறைந்தது மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணிகள் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.

அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 38% குறைந்து, ரூ.1,058 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 19.5% அதிகரித்து, ரூ.15,521 கோடியாக உள்ளது. மத்திய அரசின் இன்ஃப்ரா துறை சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராமப் பகுதிகளில் அதிக வீடு கட்ட எடுக்கும் முன்னெடுப்புகள் இந்த நிறுவனத்துக்கு மிகுந்த பலனை வருங்காலத்தில் கொடுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேன்ஃபின் ஹோம்ஸ் (Canfin Homes)

இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 30.94% அதிகரித்து, ரூ.151.49 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 39.57% அதிகரித்து, ரூ.709.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ.8.69 என்ற நிலையிலிருந்து ரூ.11.38 ஆக அதிகரித்துள்ளது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக விலை ஏற்றம் கண்டுள்ளது. புதிய வீட்டு கடன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த நிறுவன பங்குகளை வாங்குவதற்கு பல பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)

நாட்டின் முதன்மையான பெயின்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5.6% குறைந்து,ரூ.1,072 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 1.7% அதிகரித்து, ரூ.8,607 கோடியாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)

நமது நாட்டின் முதன்மையான எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனங்களில்முக்கியமானது இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12% அதிகரித்து, ரூ.2,505 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16% அதிகரித்து, ரூ.14,986 கோடியாக உள்ளது.

பி.வி.ஆர் சினிமாஸ் (PVR Cinemas)

பொழுதுபோக்கு துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் ரூ.16 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.71 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 53.17% அதிகரித்து, ரூ.940.69 கோடியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நஷ்டத்தைச் சந்தித்து வந்த இந்த நிறுவனம் லாபப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

சென்ற நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 63 புதிய திரையரங்குகளைத் தொடங்கிய இந்த நிறுவனம், இந்த நிதி ஆண்டின் முடிவுக்குள் மொத்த மாக 110 திரையரங்குகள் திறக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது.

இண்டஸ்இண்ட் பேங்க் (IndusInd Bank)

இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கி யின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 69% அதிகரித்து, ரூ.1,959 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 19% அதிகரித்து, ரூ.4,495 கோடியாக உள்ளது.

மாருதி சுஸூகி (Maruti Suzuki)

நமது நாட்டின் முன்னணி நான்கு சக்கர வாகனம் தயாரிக் கும் நிறுவனங்களில் ஒன்று இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங் குக்கு மேல் உயர்ந்து ரூ.2,351 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் தமது அதிகபட்ச அளவான ரூ.81,679 கோடி மதிப்புள்ள வாகனங்களை விற்றுள்ளது.

கே.வி.பி (KVB)

இந்த வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலத் தில் ரூ.460 கோடியிலிருந்து 67% உயர்ந்து, ரூ.768 கோடி என பதிவாகியிருக்கிறது. இதன் நிகர வட்டி வருவாய் 2021-22-ல் ரூ.2,005 கோடியாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டின் ஒன்பது மாத கால அளவில் 22.5% வளர்ச்சி பெற்று ரூ.2,456 கோடியாக பதிவாகி இருக்கிறது.

தொகுப்பு பிரமேஷ்.எஸ்