நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெளிநாட்டுப் பங்குகளில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? - நிபுணர் சொல்லும் காரணங்கள்

வெளிநாட்டுப் பங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டுப் பங்கு

மூன்று வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்வது முடியாத காரியமாக இருந்தது. ஆனால், இன்று அது முடியும்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கி டெபாசிட், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டைத் தாண்டிய வாய்ப்புகள் முதலீட்டாளர்களுக்கு இல்லை. அதைத் தொடர்ந்து நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இ.டி.எஃப், கடன் பத்திரங்கள் எனப் பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் உருவாகின.

இப்போது நேரடியாக வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதற்கு முன்பாக வெளிநாட்டுப் பங்குகளில், மியூச்சுவல் பண்ட் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும். தற்போது முதலீட் டாளர்கள் நேரடியாக வெளிநாட்டுப் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். இதற்குப் பல முன்னணி புரோக்கிங் நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்கி வருகின்றன.

வெளிநாட்டுப் பங்குகளில்  நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? - நிபுணர் சொல்லும் காரணங்கள்

உள்நாட்டு நிறுவனப் பங்குகளை வாங்கினார்கள்...

இதற்கு முன்பு சர்வதேச பிராண்டுகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் இந்திய ஃபிரான்ஸைசிகளாகப் பார்த்து முதலீடு செய்வார்கள். உதாரணத்துக்கு, சர்வதேச பிராண்டான ஜாக்கியில் முதலீடு செய்வதற்குப் பதிலாக பேஜ் இண்டஸ் ட்ரீஸில் முதலீடு செய்வார்கள். அதே போல, பெப்சிகோவில் முதலீடு செய்ய விரும்பியவர்கள் வேறு வழியில்லாமல் வருண் பெவரேஜஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வார்கள். இப்படி நம் முதலீட்டை இந்திய நிறுவனங்களில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு தனிநபர் ஒர் ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்கா டாலர்கள் வரை வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்யலாம். இந்தத் தொகை வரை முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை!

இனி வெளிநாட்டுப் பங்குகளை வாங்களாம்...

ஆனால், தற்போது தொழில் சூழல்கள் மாறி வருகின்றன. சந்தையின் முக்கிய குறியீடுகளில் டெக்னாலஜி நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆப்பிள், ஆல்பபெட், அமேசான், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா போன்ற பல நிறுவனங்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வியாபாரம் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்தால்தான் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும் என்றிருந்த நிலை மாறி, நம் நாட்டிலிருந்து முதலீடு செய்யும் நிலை உருவாகி இருக்கிறது.

வெளிநாட்டுப் பங்குகளில்  நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? - நிபுணர் சொல்லும் காரணங்கள்

எல்லோரும் செய்யத் தேவையில்லை...

அதற்காக இப்போது புதிதாக முதலீட்டைத் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்கள்கூட நேரடியாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதைப் பரிந்துரைக்க முடியாது. ஓரளவுக்கு பங்குச் சந்தை குறித்த புரிதல், அனுபவம் இருப்பவர்கள் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்திய பங்குச் சந்தையில் கிடைத்த அனுபவம் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும் போது உதவாமல் போகக்கூட வாய்ப்புண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்போதைக்கு அமெரிக்கச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்வதற்கு வசதி செய்யப் பட்டிருக்கிறது. வரும் காலத்தில் இதர நாடுகளின் சந்தைகளிலும் முதலீடு செய்யும் வாய்ப்பு வரலாம். அதனால் முதலில் எந்த நாட்டில் முதலீடு செய்கிறோம். அந்த நாட்டின் பங்குச் சந்தை விதிமுறைகள் கடுமையாக இருக்கிறதா என்பது குறித்து கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்.

விதிமுறைகள் மாறும்...

எந்த நாடாக இருந்தாலும் சரி, இந்தியாவின் முதலீட்டு விதிமுறைகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளுக்குப் பொருந்தாது. உதாரணத்துக்கு, இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 6% முதல் 8% வரை டெபாசிட்டுகளுக்கு வட்டி வழக்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துதான் வங்கிகள், நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கடன் வட்டி விகிதம் இருக்கும். வெளிநாடுகளில் வட்டி குறைவாக இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ற வட்டி விகிதம் இருக்கும். அதாவது, இந்திய நிறுவனங்கள் நிதி திரட்டுவதும், வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி திரட்டுவதும் ஒன்றல்ல என்னும்பட்சத்தில் இங்கு நாம் பயன்படுத்தும் வழக்கமான அளவுகோல்கள் வெளிநாட்டு சந்தைக்குப் பொருந்தாது என்பதை முதலீட் டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யார் வாங்கலாம்?

ஒரு தனிநபர் ஓர் ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்கா டாலர்கள் வரை வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்யலாம். இந்தத் தொகை வரைக்கும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமலே முதலீடு செய்ய முடியும்.

வெளிநாட்டுப் பங்குகளில்  நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? - நிபுணர் சொல்லும் காரணங்கள்

‘இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வாய்ப்புகளில் முதலீடு செய்துவிட்டேன். இனி வேறு வாய்ப்புகள் இல்லை’ எனக் கருதும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டுச் சந்தையில் முதலீடு செய்யாலாம். தற்போது பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் தாய் நிறுவனம் அமெரிக்காவில் தோன்றியது. அதனால் சர்வதேச அளவில் அவற்றின் செயல்பாடுகள் இருப்பதால் அந்த வாய்ப்புக்காக முதலீடு செய்யலாம். அதேபோலம் சர்வதேச டெக்னாலஜி மையமாக அமெரிக்கா திகழ்கிறது. அதனால் டெக்னாலஜி துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பவர்கள் வெளிநாட்டு பங்குகளை முதலீடு செய்யலாம்.

சிலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மற்றும் கல்விக்காகச் செல்ல இருப்பார்கள். அவர்கள் இதுபோல வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும்பட்சத்தில் அந்தப் பங்கின் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கரன்சி ரிஸ்க் இருக்காது. என்பதால் முதலீடு செய்யலாம்.

அதேபோல, வெளிநாட்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் அந்தப் பங்கில் லாபம் கிடைக்கலாம். ஒருவேளை, ரூபாய் மதிப்பு உயர்ந்திருந்தால், நிகர லாபம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. ரூபாயின் ஏற்ற இறக்கங்களும் நம்முடைய லாபத்தை பாதிக்கக் கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், வர்த்தக நேரத்தை அறிந்துகொள்ள வேண்டும். நாம் தூங்கும் சமயத்தில்தான் அமெரிக்காவில் வர்த்தகம் நடக்கும். நாம் பங்குகளை வாங்க வேண்டும் என்றாலும் சரி, விற்க வேண்டும் என்றாலும் சரி, அமெரிக்க வர்த்தக நேரத்தில்தான் செய்ய முடியும்.

சர்வதேச டெக்னாலஜி மையத்தில் முதலீட்டைத் தொடங்குவது நல்ல விஷயமே. ஆனால், குழந்தைகள் நடை பழகுவதுபோல மெல்ல மெல்ல தொடங்கலாம்.